மனித உடலாலும் மணத்தாலும் பாதிக்கப்படுவதை ”ஸ்பாஸ்டிக்” என மருத்துவ முறையில் வரையறுக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களும் மனிதர்களே, அவர்கள் தினம் தினம் வாழ்க்கையை கழித்து உயிருடன் வாழ்வதே ஒரு சவாலான விசயமாகும்.
இப்படிப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டதும் அவர்களை பெற்றெடுத்தோர்களே அவர்களை வளர்க்காமல் கைவிட்டு விடுகிறார்கள் . இந்த சூழ்நிலையில் ஸ்பாஸ்டிக்கால் பாதிக்கப்பட்டவர்களை தொண்டு நிறுவனங்கள் கருணையின் அடிப்படையில் அவர்களை வாழவைத்து கொண்டு இருக்கின்றன.
இப்பிரச்சனையை எடுத்து சொல்கிறது ”ஸ்பாஸ்டிக்” எனும் விளக்க ஆவணப்படம். ஸ்பாஸ்டிக் என்றால் ஒரு குணப்படுத்த முடியாத நோய், அவர்களுக்கு ஆதரவான தேவைகள் இருக்கும் பட்சத்தில் நீண்ட நாட்கள் வாழ முடியும் போன்ற தகவல்களை எடுத்து சொல்கிறது இந்த ஆவணப்படம்.
மனதை வருடும் மெல்லிசையுடன் ஆரம்பமாகும் இந்த ஆவணப்படம் முடியும் போது மனதை வதைக்காமல் விடாது.
இது ஒரு நோயா ? இதில் இவ்வளவு வகை இருக்கிறதா போன்ற உண்மைகளை விளக்குகிற இந்த ஸ்பாஸ்டிக் ஆவணப்படம் சாப்ட்வியூ ஊடகக் கல்லூரி மாணவர்களால் எடுக்கப்பட்டது.

No comments:
Post a Comment