Thursday, 28 July 2011

தோள் சாய்ந்து அழுகை...


உன் தோள் சாய்ந்து அழனும் போல இருக்கு இப்படி ஒரு வரியை எங்கேயாவது கேட்ட மாதிரி இருக்கா.......?                                          


காதல் சார்ந்த திரைப்படங்களில் வரும் வசனம் தான் இது. வருகிற எல்லா படமுமே காதலுக்கு முக்கியத்துவம் தருகிற படம் தானே அப்படின்னு கேள்வி கேட்க தோணும் . கேட்டாதான் நீங்கள் தமிழ் சினிமா அதிகம் பாக்குறிங்கன்னு அர்த்தம்...


இப்ப மேட்டருக்கு வருவோம்...


புதுசா சைனா மாடல் போன் வாங்கியிருக்காரு மணிகண்டன் ,  வாங்குன கையோட மெமரி கார்டு வாங்கி பாட்டெல்லாம்  பதிந்து வைத்து கொண்டார்.


யார் கேமரா போன் வச்சு இருந்தாலும் பாஸ் அந்த சாங்க ப்ளூடூத் வழியா செண்ட் பண்ணுங்களேன்னு தெரியாதவரிடம் கூட கேட்டு விடுவார்.


சைனா மாடல் போன் மற்ற கம்பெனி (நோக்கியா,சாம்சங்,எல்ஜி) போன்களை விட அதிகமா சத்தம் வரக்கூடியது. பாட்டை போட்டு ரோட்டுல போனா ஊருக்கே இலவச பாடல் ஒளிபரப்பு தான் போங்க...


போன் வாங்குனாலும் வாங்குனான் இவன் அலப்பரை தாங்க முடியலப்பா  பக்கத்து வீட்டுகாரர்கள் இவன் காது படவே பேசுனாலும், அதை பெருசாகவே எடுத்துகிறவர் இல்லை மணி...
இப்படி, ப்ளூடூத்ல ஏத்துன ஒரு டயலாக் மணியை எதோ பண்ணியிருக்கு..


உங்ககூட நான் இருக்கனும்,  உங்ககூட சிரிச்சு பேசனும், சண்டை போடனும், உங்க தோள்ள சாஞ்சு அழனும், இன்னைக்கு மாதிரியே எப்போதுமே நான் உங்கமேல பைத்தியமா இருக்கனும். ஐ வாண்ட் டூ மேக் லவ் டூ யூ , இந்த கண்களை நான் பாத்துக்கிட்டே இருக்கனும், அப்புறம் ஒரு நாள் செத்துபோயிடனும்


இந்த வசனத்தை கேட்டதுல இருந்து மணி ஒரு மாதிரி ஆகிட்டார்.
காக்க காக்க படத்துல ஜோதிகா சூர்யாகிட்ட சொல்ற வசனம் தான் இது.


ஏன் நாம பயன்படுத்தகூடாதுன்னு நெனச்ச மணி . இதை மனப்பாடம் பண்ணி எப்ப பார்த்தாலும் வீட்டுல பிராக்டிஸ் பண்ணுனார்.
அவரோட காதலிகிட்ட இதைபோய் சொல்லி இருக்கார். அந்த பொண்ணு கொங்சம் யோசிச்சு பிறகு சம்மதம் சொல்லிடுச்சு ஒரு கண்டிசனோட...


அந்த பொண்ணு சொன்னது இதை தான்


''என் தோள் சாய்ந்து அழு பட் என்னோட சுடிதார் டாப்ஸ்  நினைச்சுடாம அழு''

இப்ப மணி, அந்த போன் யூஸ் பண்றதே இல்லை...  


பின் குறிப்பு அப்படின்னு போட்டு இதை பற்றி மேற்கொண்டு எழுதனும். ஆனால், உண்மையில் நடந்த சம்பவம் தான் இது.

இதன் பின்னனியையும் முன்னனியையும் சொல்லிட்டேன். இப்போ இந்த பதிவின் முதல் வரியை மறுபடியும் படியுங்கள்...

படிச்சுட்டிங்களா.....?

முழுக்க முழுக்க சினிமாத்தனத்துக்கே உரிய ஒரு செயல்    தோள் சாய்ந்து அழனும் என்பது..

அழுகை என்பது சினிமாவிலும் சரி, சீரியலிலும் சரி பெண்களுக்கே உரிய உணர்வு போல சித்தரிக்கப்படுகிறது. இதுவே கேவலமான ஒரு சிந்தனை. அதனால் தான் ஒரு ஆணின் அழுகையை மையப்படுத்தி இதை சொல்லி இருக்கேன் ( அட, பார்ராரா....)

சோகத்திற்கான் ஆறுதல், அன்பின் உச்சகட்டத்துக்கான ஒரு விசயம் தோள் சாய்ந்த அழுகை என்றார் நண்பன் ஒருவர்.

ஏங்க, அழனும்னு வற்புறுத்தி நினைப்பதே முதலில் ஒரு முட்டாள் தனம் .இதுக்கு இப்படி ஒரு விளக்கமா.......?

அப்படி உண்மையிலேயே அழனும்னா போய் தனியா அழுவுங்க..
உங்களுக்கு தோள் என்ன சுவரா சாய்ந்து அழ.......

யதார்த்தமான வாழ்க்கையில யாருமே இதை ஏற்றுக்கொள்வது இல்லை...

எல்லாம் சரி, இது நாட்டுல அவ்வளவு முக்கியமான ஒரு பிரச்சனையா....................? 
இதெல்லாம் ஒரு பொழப்பு...........!     

Tuesday, 26 July 2011

கதை, பாடல்...

கருத்தகிளியில்...


சிறுகதை: 1
தக்கையின் மீது நான்கு கண்கள் - சா. கந்தசாமி
http://karuthakili.blogspot.com/2011/07/blog-post_01.html


சிறுகதை: 2
பிணக்கு - ஜெயகாந்தன்
http://karuthakili.blogspot.com/2011/07/blog-post.html


பாடல் வரி
அவன் இவன்- நா.முத்துகுமார் 
http://karuthakili.blogspot.com/2011/07/blog-post_19.html

Sunday, 24 July 2011

புதிய வலைப்பக்கம்

”கருத்தகிளி”


இது நான் பள்ளியில் படித்தபோது எனக்கு வைத்த பட்ட பெயர்..
பட்டம் இல்லிங்கோய்... நக்கல் பண்ணி வைத்தது...


பள்ளிக்காலம் முடிந்து கல்லூரி காலம் முடிந்து சுய தேவைக்கான போரட்டத்துக்காக வேலைக்கு எல்லாம் போயாச்சு...


பள்ளி நண்பன் ஒருவன்  வெகு நாட்களுக்கு பிறகு இந்த பெயரை சொல்லி கூப்பிட்டான்.... மகிழ்ச்சி....


அப்படி பெயர் வைக்க காரணம் எதையாவது படிச்சுட்டு அதை எல்லோருடன் பகிர்ந்து கொள்வது. அத்தோட நம்ம கலர் சொல்லவா வேணும்..  அப்போதைய குரல் வளம் கிளியை ஞாபகப்படுத்தும். 


அதான் கருத்தகிளி... 


இந்த பெயரிலேயே ஒரு வலைப்பக்கம்....


இணையதளங்களில் தேடி கிடைத்தவற்றை இதில் தொகுத்து உள்ளேன்...


http://www.karuthakili.blogspot.com/

பணி தொடரும்...

Thursday, 21 July 2011

உலக அளவில் இணைய தளங்களின் தரவரிசை பட்டியல் முதல் பத்து இடங்கள்...

உலக அளவில் இணைய தளங்களின் தரவரிசை பட்டியல் முதல் பத்து இடங்கள்...

http://karuthakili.blogspot.com/2011/08/blog-post_06.html

வித்தியாச கட்டிடங்கள்





































Monday, 18 July 2011

பேட்டி

போனிலேயே பேசி எடுத்த பேட்டி...
27 நிமிடம் உரையாடல் நடந்தது...


எந்திரன் படத்தில் ரோபோ உருவாக்கம் எப்படி ?
                   
                         மதன் கார்க்கி பேட்டி

http://tamilcinema.com/general/interview/madhankarky.asp

-தாஸ்..,

நான் எப்படி தப்பா நினைத்தேன் உன்னை


உங்கள் ஊர் திருவிழாவுக்கு என்னை கூட்டி போனாய்
ஊரெல்லாம் வதந்தி பரவியது
படிக்க போன இடத்தில் ஒருத்தியை கூட்டிக்கிட்டு வந்துட்டான்
உற்றோர் சுற்றோர் வரவேற்றாலும்
உள்ளுக்குள் ஒரு வருத்தம், ஒரு கேள்வி
ஒரு பொண்னை கூட்டிகிட்டு வந்துட்டானே
யார் இந்த பெண், என்ன உறவு ?

எல்லோரும் ஒரு மாதிரி பார்த்தாங்க
உன் அத்தை மகள் முறைத்தாள்
எனதருகே வந்து நீங்க என் மாமாவுக்கு என்ன வேணும் கேட்டாள்

எல்லோரையும் கூப்பிட்டு அறிமுகம் செய்தாய்
இவள் என் தோழி
ஒரு போதும் காதலி அல்ல
என் மனைவி ஆக மாட்டாள்...!

கரெண்ட் இல்லாமல் கட்டிலில் படுத்து இருந்தபோது
எனதருகே வந்தாய்
உள்ளுக்குள் திக் திக் என்றது
ஏன் இப்ப என் பக்கத்துல வரான்
பலவாறாய் உள் மனம் தத்தளித்தது

விழித்து இருந்தும்
கண்களை மூடி இருந்தேன்
அருகே வந்தாய்

எனது கலைந்த ஆடையை சரி செய்தாய்
வியர்வையை துணியால் துடைத்தாய்
விசிறியால் வீசினாய்

எப்படிடா உன்னை தப்பா நினைத்தேன்
உள்ளுக்குள் நினைத்த போது
கண்ணீர் கண்களை நனைத்தது
கண்ணீர் என தெரியாமல் வியர்வை என துடைத்தாய்

எனதருகே படுத்து இருந்தாய்
நாம் தூங்கி போனோம்

எப்படிடா நான் உன்னை தப்பா நினைத்தேன்.............



Wednesday, 13 July 2011

பின்பற்றுவோம்...


பொதுவுடைமை தத்துவத்தை அறிவியல் பூர்வமாக நிரூபித்த சமூக விஞ்ஞானிகள்
மார்க்ஸ்-எங்கெல்ஸ்

சோஷியலிசத்தை நடைமுறைப்படுத்திக் காட்டிய மாபெரும் புரட்சியாளர்கள்
லெனின்-ஸ்டாலின், மாசே-துங்

இந்திய பார்ப்பனிய சமூகத்தின் ஆதிக்கத்தை தகர்க்க போராடிய சட்ட மாமேதை
அம்பேத்கர்

மானம் கெடுப்பாரை
அறிவை தடுப்பாரை
மன்னோடு பெயர்த்த கடப்பாரை
தந்தை பெரியார்

இவர்களை கொள்கைகளை பின்பற்றுவோம்.......

Thursday, 7 July 2011

ராணுவ குடியிருப்புக்குள் சிறுவன் சுட்டுக்கொலை

வாரத்துல கிடைக்கிற ஒரே விடுமுறை நாள் ஞாயிறு கிழமை தான் துணியை எல்லாம் துவச்சுட்டு உக்காந்து இருந்த போது பக்கத்து வீட்டு வாண்டு ஷாபீர் சொன்னான் மாமா பக்கத்து ஏரியா கல்லறையில யாரையோ சுட்டுடாங்களாம்னு.


என்னடா என்று விசாரித்தால்...

பாதாம் மரத்துல இருந்து விழுந்த கொட்டையை எடுக்க போன சிறுவனை சுட்டு கொன்னுட்டான் ஒரு ராணுவ அதிகாரி . இதுக்காடா சுட்டாங்கன்னு விசாரித்து அந்த இடத்துக்கு தான் போவோமேனு நடந்து  பாதி தூரம் போனேன் போலீசுகாரர் ஒருத்தர் ஒரு பையனை விரட்டி வந்தார். கொஞ்ச தூரம் தள்ளி பார்த்தா எல்லாருக்கும் அடி விழுந்துகிட்டு இருக்கு.


 டேய் இதுக்கு பேர் தான் லத்தி சார்ஜோ.......?
 சினிமாவுல தான் பார்த்து இருக்கேன். முதல் முறையா நேரடியா பாக்குறேன். மனசுக்குள்ள ஒரு பயம் உருவாகிடுச்சு, நம்மையும் போட்டு அடிச்சுடுவாங்களோன்னு ஆனால் அதுக்குள்ள தகவல் தெரிஞ்சு பத்திரிக்கைகாரர்கள் எல்லாம் வந்துட்டாங்க. சில பத்திரிக்கை நண்பர்கள் முகம் தெரிந்ததாக இருந்தது. 


என் பக்கத்துல கம்போட வந்த போலீசுகாரர்கிட்ட பிரஸ் அப்பிடுன்னு சொன்னேன் . அப்படியே திரும்பி என்னை மேலும் கீழும் பார்த்தார் ஏன்னா கையில கேமராவோ, நோட்பேடோ, ஏன் ஒரு பேனாகூட இல்லை இதுக்கும் மேல அப்ப போட்டு இருந்த டிரெஸ் லோயர் பேண்ட், டி சர்ட் அவர் என்ன நினச்சாரோ தெரியல பிரெஸ்னா அந்த பக்கம் போய் நில்லுங்க சார்னு போய்ட்டார்.


தெரிந்த பத்திரிக்கை போட்டோகிராபர் பக்கதுல போய் நின்னு வேடிக்கை பார்த்தா அந்த ஏரியா பசங்க சின்ன பையன் செத்த செய்தி தெரிந்தும், அதன் காரணம் புரிந்தும் ஆத்திரத்துல ராணுவ குடியிருப்பு நோக்கி போய் இருக்காங்க, தடுத்த கோட்டை காவல் நிலைய  போலீஸ் ரெண்டு பேர போட்டு அடிச்சுட்டாங்க . இதுக்கு மேல தாங்காதுன்னு தெரிஞ்சு தான் தடி அடி நடந்தது.


பையனை சுட்டு பாதாம் மரத்தடியிலேயே இலையை வைத்து மறச்சு போட்டு இருந்து இருக்கான் அந்த ஆர்மிகாரன். அட பாவிங்களா உசுரு உனக்கு அம்புட்டு மசுரா போச்சு..


இறந்த சிறுவன் பெயர் தில்சன். அவனோட பாதாம் கொட்டை பறிக்க போன மற்ற ரெண்டு பசங்க சொல்லி தான் அவங்க வீட்டுக்கே தகவல் போய் இருக்கு. அதுக்குள்ள கோட்டையோட பின்புற காவல் இருந்த போலீசு அந்த பையனை பக்கதுல இருந்த அரசு தலைமை மருத்துவமனைல சேர்த்துட்டார். ஆனால் அவர் வாயே திறக்கல, அவர் தூக்கிட்டு போனப்ப பையன் உயிரோட இருந்தானா இல்லையானு.


 ஆனால், ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒவ்வொரு மாதிரி நியூஸ் போடுறாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன். இந்த பிரச்சனைல தான் பாக்குறேன். தினமலர், தினமணி ரெண்டு பத்திரிக்கையும் இதை ஒரு பிரச்சனையாவே மதிக்கலை. தமிழகம் எங்கும் இந்த செய்தியை விரிவாக கொண்டு சென்றது தினத்தந்தியும், தினகரனும் தான் .


 நான் எதற்கும் ஆதரவாளனாக இருந்து இதை சொல்லல. என் அடி மன குமுறல் இதெல்லாம். இதோ தில்சன் அம்மாக்கு தமிழக அரசு 5 லட்சம் பணம் கொடுத்து இருக்கு. (பணம் உயிர திருப்பி தந்துடுமாடா...?) ஆனால் தில்சன் அம்மாவுக்கு சுட்ட ஆர்மிகாரனுக்கு தண்டனை வாங்கி குடுத்தே ஆகனும்னு ஒரே வெறி. கோட்டை காவல் நிலையத்துல இருந்து  விசாரனை சிபிசிஐடிக்கு மாறிடுச்சு.  சுட்டவனும் ஒத்துக்கலை. சுட்டதை யாரும் பார்க்கலை. ஆனால் எதோ உள்ளுக்குள்ள நடந்துகிட்டு இருக்கு..


அதிகார வர்க்கமாக இருப்பதனால அந்த ராணுவ அதிகாரிய இன்னும் யாருன்னு புடிக்க முடியல.  இதுவே எங்க ஏரியா பசங்க, வாக்கிங் போற ஒரு ஆர்மிகாரனை சுட்டு இருந்தா சும்மா விட்டு இருப்பாங்களா ? (எங்ககிட்ட ஏது துப்பாக்கி ) அந்த வழியா தான் தினமும் ஆபீசுக்கு போறேன். தில்சன் உடம்பு இருந்த இடத்த சுத்தி பாதுகாப்பு போட்டு லைட் எல்லாம் போட்டு இருக்காங்க.  இந்த பிரச்சனை எல்லாம் தெரிந்தும் ஒன்னுமே பண்ண முடியலையேன்னு மனசு குமுறுது...
அதான் இங்கே பகிந்துகிட்டேன்...

Saturday, 2 July 2011

எங்கள் தமிழ் ஈழ தேசக் கொடியும் பறக்கட்டும்...

கல்லறைகள் திறந்து கொண்டன 
மடிந்தவர்கள் வருகிறார்கள்
மாவீரர்களின் ஆவிகள்
யுத்த்துக்கு எழுந்து விட்டன
புகழ் மலர்களோடும்
உறுவிய வாளோடும் வருகிறார்கள்
இதயத்தில் ஈழத்தின் விடுதலையை
ஏந்தி வருகிறார்கள்
ஈழ விடுதலை முரசம் ஒலிக்கட்டும்
ஈழம் உதயமாகட்டும்
சுதந்திர ஈழக் கொடி 
பட்டொளி வீசிப் பறக்கட்டும்
ஆம்... 
ஐ.நா. சபைக்கு முன் 
சுதந்திர தேசங்களின் கொடிகளோடு
எங்கள் தமிழ் ஈழ தேசக் கொடியும் பறக்கட்டும்...






*நான் எழுதியது அல்ல... 
*நன்றாக இருந்ததால்... 

Friday, 1 July 2011

நம் விடுதலை நம் கையில் சீமான் முழக்கம்



ஐநா போர் குற்ற விசாரனைக்கு ஆதரவாகவும், இலங்கை முள்வேளி கம்பிகளுக்குள் முடங்கி கிடக்கும் மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், செயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வேலூரில் மே 18 அன்று நடந்தது.
பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது :
கடந்த வருடம் இதே நாளில் கட்சி ஆரம்பித்த போதும், இன்றும் கோடைகாலத்தில்Seemanமழை கொட்டித் தீர்த்து இருக்கிறது. நம் தமிழ் உறவுகளுக்காக நம்மோடு சேர்ந்து விண்ணும் கண்ணீர் விடுகிறது . மேடை பின்னே இருந்த பெயர் பதாகை காற்றில் அடித்து கீழே விழுந்து விட்டது . மீண்டும் என் அன்பு தம்பிகள் தலைவனின் பதாகையை உயர்த்தி இருக்கின்றனர். எங்களை இயற்கையே அழித்தாலும் நாங்கள் மீண்டும் எழுவோம்.


கட்சி தொடங்கி ஏழே மாதத்தில், இரண்டு மாத போராட்டத்தில் ஐந்து மாதம் சிறைப்படுத்தப்பட்டேன். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தேர்தல் வந்துவிட்டது. கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்ட சூழ்நிலையில் நீங்கள் என்ன சாதித்து விட்டீர்கள் எனக் கேட்கிறார்கள்.எல்லோரும் தேர்தலை தேர்தலாக பார்த்தார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சி அதை யுத்த களமாக பார்த்தது. என் இனத்தை கொன்ற காங்கிரஸ் கட்சிக்கும், இன உணர்வுள்ள தமிழர்களுக்கான யுத்தம். நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் காங்கிரஸை தோல்வி அடைய செய்து இருக்கிறோம் . இந்த தேர்தல் பிரபாகரன் தம்பி சீமானுக்கும் சோனியா காந்தி மகன் ராகுல் காந்திக்கும் நடந்த சண்டை ஆகும் .
என் தலைவன் பிரபாகரனை பெற்ற வீரமாதா பார்வதி அம்மாளின் புனித சாம்பல் எனக்கு வந்தது. எனக்கு வந்ததை போல அய்யா நெடுமாறன், அண்ணன் வைகோ அவர்களுக்கும் வந்தது. அவர்கள் அதை கடல் நீரிலே கரைத்தார்கள். அதை நான் இன்னும் பத்திரமாக என் அறையில் வைத்திருக்கிறேன். என்று என் லட்சியத்தில் வெல்கிறனோ அன்றுதான் என் தாயின் சாம்பலை நான் கடலில் கரைப்பேன்.
அதேபோல தமிழ் உறவுகளை எல்லாம் உசுப்பி தீக்குச்சியாக வெந்து செத்தானே என் தம்பி முத்துக்குமாரின் சாம்பலும் என்னிடம் தான் உள்ளது . என்று என் இனம் விடுதலை அடைகிறதோ அன்று தான் அதை கடலில் கரைப்பேன் . நான் ஒவ்வொரு முறையும் போர்களத்திற்கு செல்லும் போது அந்த புனித சாம்பலில் சத்தியம் செய்து தான் செல்கிறேன் .
அறுபது வருடமாகவே தமிழகத்தில் இருந்து வருகிற கட்சி திமுக , அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்ட 110 வருட கட்சி காங்கிரஸ் இந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியதே எப்படிSeemanசாத்தியமானது . 2ஜி அலைக்கற்றை பிரச்சனை மட்டும் தான் காரணம் என்றால் மற்ற மாநிலங்களில் எப்படி வெற்றி பெற்றது . நாம் தமிழரின் பிரச்சாரம் முக்கிய காரணம் என்றால் நம்ப மறுக்கிறார்கள்.
உங்களுக்கு நம்பிக்கை இல்லையா ? வாங்க இன்னொரு தேர்தலில் மோதிப்பார்க்கலாம். இதை விட மிகப்பெரிய தோல்வியை அடைவீர்கள்.
பணம் , படைபலம் , குடும்ப அரசியல் இதை எல்லாம் தாண்டி என் இனத்தை அழிக்க துணை நின்றவர்கள் இந்த தேர்தலில் அழிந்தார்கள்.
இதை எல்லாம் நான் சொல்லவில்லை புதுச்சேரியிலே முதல்வராக பதவி ஏற்று இருக்கிற அய்யா ரங்கசாமி சொல்கிறார். காங்கிரசின் படுதோல்விக்கு ஈழத்தமிழர் படுகொலை பிரச்சனையும் அதை தம்பி சீமான் எடுத்து சொன்ன விதமும் தான் முக்கிய காரணம். உண்மையான தலைவன் உண்மையை ஒத்துக்கொண்டான்.
காங்கிரஸ் கட்சியோட எவன் கூட்டணி வைத்துக்கொண்டாலும் அவர்களுக்கு எதிராக இந்த சீமான் நிற்பான். நான் உயிரோட இருக்குற வரை ஒருத்தனும் தப்பிக்கமுடியாது .
மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்காரிய சிந்தனைகளை பின்பற்றுபவர்கள் ஒருபோதும் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சகோதரர் கார்த்திக்சிதம்பரம் பரம்பரை கோடீஸ்வரன் ஆவார். நான் ஒன்னும் இல்லாதவன் தான் என்கூட மோதி சிவகங்கை தொகுதியில முடிஞ்சா ஜெயித்துப்பார். மண்ணை கவ்வி விடுவாய் .
இலங்கையில் என் சகோதரிகளை வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்தி சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்கள். அதற்கெல்லாம் காரணமாக இருந்தவர் ராஜீவ்காந்தி அவரை நீங்கள் புனிதர் என்று நினைத்து விடாதீர்கள் .
என் பின்னே திரண்டிருக்கும் தம்பிகள் 20 வயதிற்கும் குறைவானவர்கள் அவர்கள் யாருக்கும் ராஜீவ்காந்தியை தெரியவில்லை . என் தலைவர் பிரபாகரனை தெரிந்து வைத்து இருக்கிறார்கள் .இனி நாங்க தான் எங்களை எதுவும் செய்து விட முடியாது.


இப்படியொரு பெயர் வைப்பதே வெட்கமாய் இருக்கிறது. தமிழனை நீ தமிழன் டா என்று சொல்லி உணரவைக்க வேண்டி இருக்கிறது. மற்ற மாநிலத்தவனுக்கு நன்றாய் தெரிகிறது. நமக்கு உணரத் தான் தாமதம் ஆகிறது. உணர வைக்க தான் நாம் தமிழர்.
ஜாதியோ மதமோ என்றும் இனம் ஆகிவிடமுடியாது. என்ன ஜாதியாக இருந்தாலும் என்ன மதமாக இருந்தாலும் நாம் அனைவரும் நாம் தமிழர் எனும் ஒரு இனம் . தமிழனுக்கு உயிரை விட மானம் பெரியது.
இவ்வாறு சீமான் பேசினார்.
தீர்மானங்கள்
சட்டமன்ற தேர்தலில் உணர்வுடன் வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி , புதிய ஆட்சிக்கு வாழ்த்துக்கள், ஐநா நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவு, தமிழீழ அகதிகள் நிலை மாற வேண்டும் , சிறப்பு முகாம்களை அகற்ற வேண்டும், ராஜீவ் வழக்கில் தண்டிக்கப்பட்டோருக்கு விடுதலை,தமிழீழ விடுதலை, ஐநா மன்றமே பன்னாட்டு விடுதலைக்கு உத்தரவு விடு, உலக நாட்டிற்க்கு வேண்டுகோள் , புதுக்கோட்டையில் கொல்லப்பட்ட சுப.முத்துக்குமாரை கொன்றவனை கைது செய்.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


பின்குறிப்பு :
பத்திரிக்கையாளர்களுக்கு வெகுநேரமாகியும் நாற்காலிகள் வழங்கபடாமல் நின்று கொண்டு இருப்பதை பார்த்த சீமான் அவரே 10 நாற்காலிகளை தூக்கிவந்து போட்டு உட்காரச்சொன்னார்.
-தாஸ்..,


http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2011/may/190511e.asp

ஏன் எழுதல...

ஜுன் மாத ஆரம்ப  முழுவதும் வலைத்தளத்தில் நிறையா எழுதினிங்களே ஏன் மாத கடைசியில எதுவும் எழுதலைனு கேட்டாரு ஒருத்தரு...

நம்மையும் மதிச்சு நம்ம எழுத்தையும்..........................
வார்த்தை வராம.....
முடிக்கிறேன்... 
Related Posts Plugin for WordPress, Blogger...