Wednesday, 22 June 2011

நீ என் நண்பன் என்பதால். . .


பெண்ணின் நட்பு

நடந்து செல்லும் போது
கைகள் உரசக்கூடாது
கவனம் செலுத்தினாய்
கைகளை ஒன்றோடு ஒன்று
இணைத்து கொண்டேன்
நீ என் நண்பன் என்பதால் . . .

*
பஸ் பயணத்தில்
கூட்ட நெரிசலில்
உன் வியர்வை வாடையை
பொறுத்துக்கொண்டேன்
நீ என் நண்பன் என்பதால். . .

*
மழை தினத்தில்
ஒரே குடையில்
இணைந்து நடந்த போது
உடல்கள் உரசியபோது
உன்னை கேலி செய்து
மன்னித்தேன்  
நீ என் நண்பன் என்பதால். . .

*
கோடை காலத்தில் கொடுமை
ஆடை பிரச்சனையில் தான்
குளிர்கால ஆடையை
கோடைகாலத்தில் போடச் சொல்லி
வற்புறுத்தினாய்
செய்தேன்
நீ என் நண்பன் என்பதால். . .

*
உனக்காக நான் எல்லாம் செய்கிறேன்
எல்லாம் செய்வேன்
என் பயமெல்லாம் என் திருமணத்திற்கு பிறகும்
நான் உனக்கு தோழியாய் இருக்க வேண்டும்
நீ என் நண்பனாகவே வேண்டும். . .


உன்னுடைய
சின்ன சின்ன தவறுகளை 
பொறுத்துகொள்கிறேன்
பெரிய பெரிய தவறுகளை 
மன்னித்து விடுகிறேன்
நீ என் நண்பன் என்பதால். . . 

எதற்கெடுத்தாலும் கோவப்படும்
உனக்கு  
புன்னகையையே தண்டனையாக தருகிறேன் 
நீ என் நன்பன் என்பதால். . .







Tuesday, 21 June 2011

20 இந்திய திரைப்படங்கள்





01. மே கே தாகா தாரா (1960) மேகத்தில் மறைந்த நட்சத்திரம். வங்காளம். ரித்விக் கடக் இயக்கியது. 
02. சாருலதா (1964) சத்ய ஜித்ரே இயக்கிய படம்
03. பதர் பஞ்சாலி (1955) சத்ய ஜித்ரே இயக்கிய படம்
04. ஷோலே - வருடக்கணக்கில் ஓடிய இந்திப் படம் (1975) ரமேஷ் சிப்பி இயக்கியது
05. தோ பிகா ஜமீன் - இந்தி (1953) விமல் ராய் டைரக்ஷன்
06. ப்யாஸா - இந்தி (1957) குரு தத் இயக்கம்.
07. யுவன் ஷோலே - இந்தி (1969) மிருணாள் சென் இயக்கம். 
08. கரம்ஹவா - இந்தி (1973) எம்.எஸ். சத்யு டைரக்ஷன்
09. மதர் இந்தியா - (1957) மெஹபூப் கான் டைரக்ஷன்
10. கட்டஷ் ராத்தா - கன்னடம் (1977) கிரிஸ் கஸ்ஸரவில்லி டைரக்ஷன்.
11. எலிப்பத்தாயம் - மலையாளம் (1981) அடூர் கோபாலகிருஷ்ணன்.
12. மொகலே ஆஸம் - இந்தி (1960) கே.ஆசிப். டைரக்ஷன்.
13. நாயகன் தமிழ் - (1987) மணிரத்னம் இயக்கிய படம்.
14. காகஸ் கே பூல் - இந்தி (1959) குரு தத் இயக்கம்.
15. அபு ட்ரையாலஜி (பதர் பஞ்சாலி - 1955, அபராஜிதோ - 1956, அபுர் சன்ஸார் - 1959) மூன்றும் சத்ய ஜித்ரே இயக்கிய படங்கள்
16. சந்த் துக்காராம் - மராத்தி (1936) விஷ்ணு பந்த் கோவிந்த் இயக்கம்.
17. ஜானே பி தோ யாரோ - இந்தி (1983) குண்டன் ஷா இயக்கம். 
18. கெய்ட் (1965) விஜய் ஆனந்த் இயக்கம்.
19. மதுமதி (1958) திலீப்குமார், வைஜெயந்தி மாலா நடித்த படம். பிமல் ராய் இயக்கம்.
20. ஆனந்த் (1971) ராஜேஷ் கண்ணா, அமிதாப் பச்சன் நடத்த படம். ரிஷிகேஷ் முகர்ஜி டைரக்ஷஇந்தி (1973) எம்.எஸ். சத்யு டைரக்ஷன்

குழந்தை தொழிலாளர்கள்













Monday, 20 June 2011

சென்னை மாநகரத்தின் பழைய படங்கள்

ஃப்ளாஷ் பேக்...

மெரினா கடற்கரை

மவுபிரைஸ் சாலை

மவுண்ட் ரோடு

மயிலாப்பூர்

பாரீஸ் கார்னர்

பைகிராப்ட் சாலை

எஸ்பிலனேட் 

ஃபஸ்ட் லேன் பீச்

சென்ட்ரல்

எழும்பூர் 1912

ஆம்புலன்ஸ் 1940

பேங்க் ஆஃப் மெட்ராஸ் 1935

கார் ஷோ ரூம் 1913

Ford  1917

கொத்தால்சாவடி மார்கெட் 

நூலகம்

மெரினா

மயிலை

உணவு பரிமாறுபவர்

மல்டி லெவல் மார்கெட்

தொடர்ந்து தொல்லை


சீனியரிடம் மாட்டிய ஜுனியர்....அய்யயோ தலைப்பு தப்பு........               ஜுனியரிடம் மாட்டிய சீனியர்...



என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருப்பேன்  

அண்ணன் இளையராஜா பற்றி...

அவரை பற்றி மேலும்  ஒரு பதிவு...

  
ஒரு  ஆவணப்படம் படப்பிடிப்புக்காக ஆந்திரா பார்டர் வரை காரில் போய் கொண்டு இருந்தோம் நானும் அண்ணன் இளையராஜாவும், திடீரென காரை நிறுத்துங்க என்று கத்தினார்.

 காரை நிறுத்திய  உடனே கதவை திறந்து கொண்டு ஓடினார். நானும் என்னமோ எதோன்னு புரியாமால் அவரை பின் தொடர்ந்து ஓடினேன்.. 

ஓடிய அவர் என்ன செய்தார் தெரியுமா ?






காரை விட்டு இறங்கி போய்.......


இந்த செடியில ஒரு பழம் இருக்கும் அதை...


பறிச்சு, பிரிச்சு சாப்பிட தான்...
அந்த ஓட்டமே...


பணியை தொடர்கிறார்



ஆய கலைகள் 64


ஆய கலைகள் 64 ன்னு தெரியும்... அது என்ன என்னன்னு தெரியுமா....?
ஒரு தகவலுக்காக...

1. அக்கரவிலக்கணம்- எழுத்திலக்கணம்
2.
இலிகிதம்- எழுத்தாற்றல்
3.
கணிதம்- கணிதவியல்
4.
வேதம்- மறை நூல்
5.
புராணம்- தொன்மம்
6.
வியாகரணம்- இலக்கணவியல்
7.
நீதி சாஸ்திரம்- நய நூல்
8.
ஜோதிடம்- கணியக் கலை
9.
தர்ம சாஸ்திரம்- அறத்துப் பால்
10.
யோக சாஸ்திரம்- ஓகக் கலை
11.
மந்திர சாஸ்திரம்- மந்திரக் கலை
12.
சகுன சாஸ்திரம்- நிமித்தகக் கலை
13.
சிற்ப சாஸ்திரம்- கம்மியக் கலை
14.
வைத்தியசாஸ்திரம்- மருத்துவக்
கலை
15.
உருவ சாஸ்திரம்- உறுப்பமைவு
16.
இதிகாசம்- மறவனப்பு
17.
காவியம்- வனப்பு
18.
அலங்காரம் அணி- இயல்
19.
மதுர பாடனம்- இனிதுமொழிதல்
20.
நாடகம்- நாடகக் கலை
21.
நிருத்தம்- ஆடற் கலை
22.
சத்தப்பிரும்மம்- ஒலிநுட்ப அறிவு
23.
வீணை- யாழ் இயல்
24.
வேணு- (புல்லாங்குழல்)குழலிசை
25.
மிருதங்கம்- (மத்தளம்)
26.
தாளம்- தாள இயல்
27.
அத்திரப் பரிட்சை- வில்லாற்றல்
28.
கனகப் பரிட்சை- (பொன் நோட்டம்)
29.
இரதப் பரிட்சை- (தேர் ஏற்றம் )
30.
கஜப் பரிட்சை- (யானை எற்றம்)
31.
அசுவப் பரிட்சை- (குதிரை ஏற்றம்)
32.
இரத்தினப் பரிட்சை- மணி நோட்டம்
33.
பூமிப் பரிட்சை- மண்ணியல்
34.
சங்கிராம விலக்கணம்- போர்ப் பயிற்சி
35.
மல்யுத்தம்- கைகலப்பு
36.
ஆகருடனம்- (ஆகர்ஷணம்)கவர்ச்சியியல்
37.
உச்சாடனம்- ஓட்டுகை
38.
வித்து வேடனம்- (நட்பு பிரிக்கை)
39.
மதன சாஸ்திரம்- மதன கலை
40.
மோகனம்- மயக்குக் கலை
41.
வசீகரணம்- வசியக் கலை
42.
இரசவாதம்- இதளியக் கலை
43.
காந்தருவ வாதம்- (இன்னிசைப் பயிற்சி)
44.
பைபீலவாதம்- (பிறவுயிர்மொழி)
45.
கவுத்துவ வாதம்- மகிழுறுத்தம்
46.
தாதுவாதம்- ( நாடி சாஸ்திரம்)
47.
காருடம்- கலுழம்
48.
நட்டம்- (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது இழப்பறிகை)
49.
மூட்டி- (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்;மறைத்ததையறிதல்)
50.
ஆகாய கமனம்- (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்--வான் செல்கை)
51.
பரகாய பிரவேஷம்- (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
52.
ஆகாயப் பிரவேஷம்- ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது--வான்புகுதல்)
53.
அதிரிசியம்- தன்னுறு கரத்தல்
54.
இந்திர ஜாலம்- (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55.
மகேந்திர ஜாலம்- பெருமாயம்
56.
அக்கினி ஸ்தம்பம்- (நெருப்பைச் சுடாமல் கட்டல்--அழற் கட்டு)
57.
ஜலஸ்தம்பம்- (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல்,
நீரில் படுத்திருத்தல்)
58.
வாயுஸ்தம்பம்- வளிக் கட்டு
59.
திட்டி ஸ்தம்பம்- கண் கட்டு
60.
வாக்கு ஸ்தம்பம்- நாவுக் கட்டு
61.
சுக்கில ஸ்தம்பம்- (விந்தையடக்கல்)
62.
கன்னத்தம்பம்- புதையற் கட்டு
63.
கட்கத்தம்பம்- வாட் கட்டு
64.
அவத்தைப் பிரயோகம்- சூனியம் 

Wednesday, 8 June 2011

நானும் அபியும்..


அபியும் நானும் படத்தின் டைட்டிலை அப்படியே திருப்பி போட்டுட்டானேன்னு நினைக்க வேண்டாம்..
 எனக்கு இதை தவிர வேறு நல்ல தலைப்பா தோன்றவில்லை.

உள்ளூர் திருவிழா தினத்தன்று...
   அக்கா தோசை சுட்டு தா..  
  எம் புள்ளைய ஸ்கூல்ல போய் விட்டுட்டு வா நான் சுடச் சட சுட்டு தரேன்..
 ம்ம்ம்ம்... எப்பிடில்லாம் நம்ம பலகீனத்தை (சுடச்சுட தோசைன்னா ரொம்ம்ம்ப்ப பிடிக்கும்) பயன்படுத்திகிது பாரு, மனதுக்குள் குமுறலுடன் அக்கா மகனை சைக்கிளில் பின்பக்கம் உக்கார வைத்துக்கொண்டு அவனோட ஸ்கூலுக்கு போனேன்..

டேய், சைக்கிளுக்குள்ள காலை விட்டுடாதடா..
நீ போ மாமா எனக்கு தெரியும், நீ ரோட்ட பாத்து ஒழுங்கா ஓட்டு, எதாவது பிகரை பார்த்துட்டு என்னை பள்ளத்துக்குள்ள எங்கேயாவது தள்ளி விட்டுடாத..

அடப்பாவி, வயசுக்கு தகுந்த மாதிரி பேசுடா..
இந்த வயசுக்கு இப்பிடி பேசலைனாதாம் மாமா தப்பு..  
பிஞ்சுலையே பழுத்த என்அக்கா மகனுக்கு வயசு எட்டு..

இதுக்கு மேல பேசுனா எம்மானம் போய்டும்னு நினைச்சு, 
அத்தோட அவனோட பேசுறத நிறுத்துறதுக்கும் அவன் பள்ளிகூடம் வருவதற்கும் சரியா இருந்துச்சு..

ஸ்கூல் கேட்டுகிட்ட போனதும் நான் சைக்கிளை நிறுத்துவதற்கு முன்னரே குதிச்சுட்டான்...
ஏண்டா, இவ்லோ அவசரம் அதான் ஸ்கூல் வந்துடுசுல என்றதற்கு என்னை முறைத்து பார்த்தான்..

நீ, பேசிக்கிட்டே வந்ததுல லேட் ஆகிடுச்சு, பிரேயர் ஆரம்பிச்சுடாங்க, அது வரைக்கும் வெளியே தான் நிற்கனும் என பொறிந்து தள்ளினான்.
சரி நான் போரேன்டா கேட் திறந்ததும் உள்ள போ என்றதற்கு
மிஸ் லேட்டா வந்தா திட்டுவாங்க, நீ வந்து சொல்லிட்டு போ என்றான்  
இதுவேரயா, நின்றேன்....................

அப்போ, ஒரு குழந்தை எனை நோக்கி வந்து 
...அங்கிள், நல்லா இருக்கிங்களா என்று மழலைக்கே உரிய பாணியில் கேட்டது... நான் நல்லா இருக்கேன்மா. 
நீங்க யாரு....? என்றதற்கு
நான் அபியோட பொண்ணு என்றது.   


சில வருடங்களுக்கு பின்னோக்கி போவோமா ?

அபி
(அபிராமி)


வாடகை வீடு பதினேழு வரிசையாய் கொண்ட தெருவில் நான் ஏழாவது வீட்டில் குடியிருந்தேன், அபி பதினேழாவது வீடு, ஹவுஸ் ஓனர் பொண்ணு. 
நானும் அபியும் ஒரே பள்ளியில் வெவ்வேறு வகுப்பில், நான் நாலாவது, அபி மூணாவது...
 என்னைவிட ஒரு வயசு சின்ன புள்ள ஒரு நாள் கூட அண்ணானு கூப்பிட மாட்டா..
டேய் கருவா, வாடா லேட் ஆச்சு என்று எங்க வீட்டு வாசப்படியில இருந்து அபி கத்துனான்னா நான் பதில் சொல்ற முன்னாடியே எங்கம்மா ”ஏண்டி சரசு மகளே, நீ சிவப்பா இருக்கேன்னு எம்புள்ளயை கருவான்னு கூப்புடுறியா” என்று கத்துவாங்க... 

ஆம்ம்மாமாமா என்று எதாவது பேசிகிட்டே இருப்பா அதுக்குள்ள நான் கிளம்பி வெளியே வந்து இருவரும் சேர்ந்தே ஸ்கூலுக்கு போவோம்.

நான் சுமாரா படிப்பேன், அபி சுத்தம்... 
பள்ளிகூடத்துல நான் யார்கூடயும் சண்டை போட மாட்டேன், 
அபிக்கு வேலையே எல்லாரையும் போட்டு அடிக்கிறது தான்.
 அபிகிட்ட அடி வாங்காத ஒரே ஆள் நான் தான்.
 ஏன் அடிக்காதுன்னா ? அபி என்ன தப்பு செய்தாலும் நான் அவங்க வீட்ல சொல்ல மாட்டேன் அதன் அடிப்படையில் எனக்கு அடி விழுகாது.

எங்கம்மா அபியை ஆம்பளை கருப்பாயின்னு கூப்புடுவாங்க...

காலத்தின் நவீனவளர்ச்சி நாங்க சொந்தமா வீடு கட்டிட்டு அந்த வாடகை வீட்டை விட்டு வந்துட்டோம். பிறகு தொடர்புகள் குறைவு தான்... 

இப்ப நிகழ்காலத்துக்கு வருவோம்..

 அந்த அபி என்ற குழந்தையின் குழந்தை தான் இந்த குழந்தை

அப்பப்பா... காலச்சக்கரம் வேகமாக சுழலுதுல என்று தத்துவம் பேசாம விசயத்துக்கு வரேன்

உங்கம்மா எங்க என்றதற்கு 
அந்த குழந்தை விரல் காட்டிய திசையில் ஒரு சிவப்புகலர் நைட்டியில் இருந்த  ஒருத்தவங்க என்னை பார்த்து புன்முறுவல் பூத்தாங்க..

அது அபி ..
நானும் பதிலுக்கு சிரித்துவிட்டு அந்த குழந்தையிடம் சொல்லி அனுப்புனேன், நான் உனக்கு மாமா இல்ல, சித்தப்பா என்று..

அந்த குழந்தையின் பெயரை கேக்க மறந்துட்டமே என யோசிப்பதற்குள் எனை நோக்கி குழந்தையை தூக்கி வந்து..

 எப்பிடி இருக்கிங்க தாஸ் என்ற அபியின் கேள்விக்கு பதில் சொல்லாமல், தலையை மட்டும் ஆட்டினேன்... 

எவ்வளவு மாற்றம். டேய், கருவா எனக்கூப்பிட்ட அபி இன்று போங்க, வாங்க என்று..    

என் விரல் பிடித்து நடந்த அபிக்கு இன்று விரல் பிடித்து நடக்கும் அளவில் ஒரு பெண்குழந்தை...
 ஆச்சரியப்பட்டாலும் உண்மையை ஏற்று கொண்டு தானே ஆகனும்.

நான் சித்தப்பா என்று சொல்லி அனுப்பியதை அந்த குழந்தை அபியிடம் சொல்லியதான்னு தெரியல, நானும் பதில் தெரிஞ்சுக்க விரும்பல..

என் அக்கா மகனை உள்ளே போய் சொல்லி விட்டுட்டு வந்தேன், அபியின் குழந்தையும் விட்டுவிட்டு வெளியே வந்தது, மன்னிக்கவும் , வந்தாங்க...

நான் சைக்கிளை உருட்டி கொண்டே பேசிக்கிட்டு போனேன், கொஞ்ச தூரம் தாண்டியதும் நான் இந்த பக்கம் போகனும் என்று ஒரு சந்துக்குள் புகுந்தாங்க அபி...

நானும் விடை பெற்றேன், சைக்கிளில் கொஞ்ச தூரம் போய் திரும்பி பார்த்தேன், ஒரு விரக்தி புன்னகையுடன் அபி நின்னாங்க...

அந்த புன்னகைக்கு அர்த்தம் தெரியாமல் நான் வீட்டிற்கு சைக்கிளை மிதித்தேன்...

*நானும் அபியும் தலைப்பு பொறுத்தமா இருக்கா.................? 

-தாஸ்..,
Related Posts Plugin for WordPress, Blogger...