Wednesday, 30 November 2011

தமிழர்களின் போராட்டம்

”பெரியாறு அணையைக் காப்போம்!“ கோவாவில் தமிழக மாணவர்கள் பதிலடி போராட்டம்

கடந்த நவம்பர் 23-ஆம் தேதி முதல் கோவா மாநிலம் பனாஜியில் 42-ஆவது பன்னாட்டுத் திரைப்பட விழா நடைபெற்றுவருகிறது. பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் திரைப்படத் துறையினரும், மாணவர்களுமாக மொத்தம் 8ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில்  (நவம்பர் 29) மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு திரைப்பட விழா நடக்கும் வளாகத்தில் கூடிய கேரளாவைச் சேர்ந்த நடிகர் ’ஒரு தலை ராகம்’ ரவீந்தர், சில பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 30 பேர் ‘முல்லைப் பெரியாறு அணை இடிந்துவிடும்’ என்றும், ’புதிய அணையைக் கட்ட வேண்டும்’ என்றும் குரல் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, வளாகத்திற்குள்ளேயே ஊர்வலம் போலவும் நடத்தினர்.

இதனைக் கண்டு வெகுண்டெழுந்த பல்வேறு திரைப்படக் கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள், திரைப்படத் துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் உடனடியாக ஒன்றுகூடி, ”8000 ஏக்கர் விளைநிலம், 3 கோடி மக்கள் வறட்சியில் சாகும் அவலத்தைத் தடுக்க வேண்டும்”, “முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டும்”, “அணையைச் சிதைப்பது, இந்திய ஒற்றுமையைச் சிதைத்துவிடும்”, “அன்பிற்குரிய கேரள மக்கள், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கவேண்டும்” “அன்பிற்குரிய கேரள மக்களே! ஏன் இந்த கொலைவெறி” என்றும் தொடர்ந்து உரக்க முழக்கம் எழுப்பி ஊர்வலம் சென்றனர்.

உடனடியான இந்த பதில் நடவடிக்கையைக் கண்டவர்கள் வியப்படைந்தனர். இரண்டு குழுவினரும் முழக்கம் எழுப்பி ஊர்வலம் சென்றதால் அங்கு சிறிதுநேரம் பதற்றம் நிலவியது.

செய்தியாளர்களிட பேசிய மாணவர்கள், “கேரள அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து உடனடியாக தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். முல்லைப் பெரியாறு தமிழக மக்களின் வாழ்வாதாரம். அதனை ஒருபோதும் விட்டுத் தர முடியாது. இதற்காக தமிழக மாணவர்கள் போராடுவார்கள்” என்று தெரிவித்தனர். இந்திய, பன்னாட்டு பத்திரிகையாளர்கள், பார்வையாளர்களிடம் அவர்கள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பான உண்மை நிலைமையினை விளக்கினர்.

பிறகு அங்கு வந்த காவல்துறையினர் தமிழ் மாணவர்களைக் கலைந்து செல்லுமாறு வேண்டினர். ”கேரளப் போராட்டக் குழுவினர் கலைந்து சென்றால் தான் நாங்களும் கலைந்து செல்வோம். அவர்கள் ஒரு வேளை போராட்டம் செய்தால் தொடர்ந்து பதில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்” என்று எச்சரிக்கை விடுத்து, பின்னர் கேரள போராட்டக் குழுவினர் கலைந்து சென்றதும் தமிழ்மாணவர்களும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது

போராட்டத்தில் மாணவர்கள்

மாணவர்களின் முழக்கம்

அய்நாக்ஸ் வளாகம் - கோவா
நன்றி ; -
கோவாவிலிருந்து
பிரின்ஸ் என்னாரெசு பெரியார் 


Tuesday, 29 November 2011

வணக்கம் லண்டன்

லண்டனில் செப்டம்பர் மாதம் 25ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற தென் வணக்கம் லண்டன்இந்தியா தமிழ் சினிமா நட்சத்திரங்களின் மாபெரும் கலை நிகழ்ச்சி சன் டிவியில் 27ம் தேதி ஞாயிறு அன்று ஒளிபரப்பானது.

ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார் ஒருங்கிணைந்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் சிம்பு, பரத், ஆர்யா, லாரன்ஸ், சினேகா, ஸ்ரேயா, ரீமாசென், நமீதா, ஆண்ட்ரியா, சாந்தனு, ரகசியா, சந்தானம் மற்றும் பிரபல திரைப்பட பின்னணி பாடகர்கள் நரேஷ் ஐயர், ஹரிசரண், விஜய் பிரகாஷ், சுவி சுரேஷ் ஆகியோருடன் இன்னும் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் படிக்க 


Monday, 28 November 2011

பாலை விமர்சனம்

பாலை திரைப்படத்தின் விமர்சனம்


தமிழர்களின் பண்டைய காலத்தை கண் முன்னே நிறுத்துகிறது என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டால் மட்டும் போதாது அதையும் தாண்டி தமிழர்கள் மறந்த உணர்வை சுண்டி இழுக்கிறது பாலை..

தமிழர்களின் பண்டைய காலத்தை கண் முன்னே நிறுத்துகிறது என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டால் மட்டும் போதாது அதையும் தாண்டி தமிழர்கள் மறந்த உணர்வை சுண்டி இழுக்கிறது பாலை..

மேலும் படிக்க  

Saturday, 26 November 2011

பஸ் கட்டண உயர்வு


அவன் அவனுக்கு வந்தா தாண்டா வலி தெரியும்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க அர்த்ததோட தான் சொல்லி இருக்காங்க...
அலுவலகத்துக்கு ரயிலில் சென்று விடுவதால் பஸ் கட்டண உயர்வு பெரியதாய் என்னை பாதிக்கவில்லை...!!!
ஆனால், இன்று பஸ்லில் வந்தேன..
சாந்தி திரையரங்கு நிறுத்தத்திலிருந்து மேத்தாநகர் வர பஸ் டிக்கெட் 13ரூபாய்... ஷேர் ஆட்டோவில் வந்தால் 10ரூபாய்
என்ன கொடுமை டா இது!!
ஷேர் ஆட்டோவும் விலை ஏற்றினால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை...


பஸ் கட்டணம் உயர்வு பயணிகள் அதிர்ச்சி

பிராட்வே & எண்ணூர்

    பழைய கட்டணம்    புதிய கட்டணம்
சாதாரண பஸ்    ரூ.3.50    ரூ. 6

விரைவு பஸ் ரூ. 5.50    ரூ. 9
சொகுசு பஸ்    ரூ. 8    ரூ. 13

பிராட்வே & தாம்பரம்

சாதாரண பஸ்    ரூ. 6    ரூ. 9
விரைவு பஸ்    ரூ. 9    ரூ. 14
ஏசி பஸ்    ரூ. 33    ரூ. 50

பிராட்வே & கோவளம்

சாதாரண பஸ்    ரூ. 7    ரூ. 11
விரைவு பஸ்    ரூ. 10.50    ரூ. 17
சொகுசு பஸ்    ரூ. 15    ரூ. 23
ஏசி பஸ்    ரூ. 38    ரூ. 60

பிராட்வே & மகாபலிபுரம்

ஏசி பஸ்    ரூ. 70    ரூ. 85

தி.நகர் & தாம்பரம்

சாதாரண பஸ்    ரூ. 5    ரூ. 8
விரைவு பஸ்    ரூ. 7.50    ரூ. 12
சொகுசு பஸ்    ரூ. 11    ரூ. 17
ஏசி பஸ்    ரூ. 28    ரூ. 45

சென்ட்ரல் & ஆவடி

விரைவு பஸ்    ரூ. 9    ரூ. 14
சொகுசு பஸ்    ரூ. 12    ரூ. 19

நிற்க ஒரு அடி மண்






பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்!



முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்...
‘பாலை’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.

‘பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது.

‘பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே.

‘பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது… இப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’

சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, “பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் ’இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே’ என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’” என்று கடிதம் எழுதிக் கொடுத்தார்.

சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள்.

முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள்.

இவர்கள் அனைவரின் வேண்டுகோளும் மக்களை நோக்கி இருக்கிறது. ‘அவசியம் பாலை படத்தைப் பாருங்கள்’ என்கிறார்கள் இவர்கள்.

எனக்கும் என் குழுவினருக்குமான வேண்டுகோள் மக்களை நோக்கி இல்லை. அதற்கான சூழலும் எழவில்லை. எங்கள் வேண்டுகோள் திரையுலகை நோக்கி இருக்கிறது.

தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் நிறைய. அவற்றை நான் அடுக்க விரும்பவும் இல்லை; இப்போது அதற்கான அவகாசமும் இல்லை.

ஓர் உண்மையை உரத்துச் சொல்ல விரும்புகிறேன்.

‘அதிகாரமும் பெரும் பணமும் இருந்தால் குப்பைகளுக்கும் திரையரங்குகள் திறக்கும். இல்லையென்றால், இயக்குனர், தயாரிப்பாளர் முகங்களில் குப்பை வீசப்படும்’

இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இவை ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். மக்கள் கூட்டம் அலைமோதுகிறதா அல்லது இவை வெறுமனே பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனவா என்பதை நீங்களே உணரலாம்.

ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன.

திரைப்படங்களால் நிரம்ப வேண்டிய அவ்வரங்குகள் மிகச் சில முதலைகளின் கழிவுகளால் நாற்றமெடுத்துக் கிடக்கின்றன.

தமிழகத்தில் DAM-999 என்ற படத்துக்குக் கிடைத்த திரையரங்குகளில் 25% கூட பாலைக்குக் கிடைக்கவில்லை! முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மலையாளிகளுக்குப் பிடுங்கித் தரும் படமாக இருந்தாலும் பரவாயில்லை; தமிழரின் வரலாற்றைப் பதிவு செய்யும் படத்துக்கு அரங்கு இல்லை. அழுவதைத் தவிர வேறு என்ன வழி?

இப்போது DAM-999 படம் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் அந்தத் திரை அரங்குகளில் மிகச் சில கூட பாலைக்குக் கிடைக்கவில்லை. அவ்வரங்கங்கள், வேறு ஒரு Warner Brothers தயாரிப்புப் படத்துக்காகக் காத்திருக்கின்றன. ஜாக்கிசானின் 1911 படத்துக்குக் கிடைத்த அரங்குகளின் எச்சில் துளி கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை.

கிடைத்த அரங்குகளில் பாலை இன்று (25/11/11) வெளியாகிறது. எமக்கு அரங்கு கொடுத்த அரங்க உரிமையாளர்கள், மேலாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இப்பணியில் தம்மை அளவுக்கு மீறி ஈடுபடுத்திக் கொண்டதால் மிக மோசமான உடல் உபாதையில் சிக்கித் தவிக்கும் என் இனிய நண்பர் ‘செங்கோட்டை’ திரைப்பட இயக்குனர் சசிகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது மனமுருகிய நன்றிகள்!

இக்கடிதத்தை எழுதுவதால் என்ன பலன் என எனக்குப் புரியவில்லை.

ஆனால், நான் ஒரு போதும் நம்பிக்கையை விடுவதில்லை. இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன். அப்பேராற்றலின் அங்கங்களாகவும் படைப்புகளாகவும் விளங்கும் மக்களை நம்புகிறேன்.

நாங்கள் பந்தயத்தில் பரிசு கேட்கவில்லை
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்!

பாலை குழுவுக்காக, 
ம.செந்தமிழன்

புள்ளிவிவரம்



2008ல் ஆரம்பித்த வலைபக்கம் அந்த வருடத்தில் 1 இடுகை

2008 - 1 இடுகை
2009 - 2 இடுகைகள்
2010 - 3 இடுகைகள்
2011 - கண்டிப்பாக எழுதப்படுமென நம்பிக்கை இருந்ததது..

ஜனவரி             - 2
மே                       - 4
ஜூன்                - 11
ஜூலை             - 12
ஆகஸ்ட்           - 13
செப்டம்பர்        - 14
அக்டோபர்        -  15
நவம்பர்             - 16 இடுகையுடன் முடித்துகொண்டு
டிசம்பரில்         -  17 ஆக்க நினைத்தேன்
ஆனால் அதிகரிக்க வேண்டி வந்துள்ளது..

இப்போ தமிழ்மணத்தின் தரவு 509.

டாப் 100க்குள் வரும் 
அடுத்த இலக்கு டாப் 10
முதல் இடம்...!!!!!!!!!

வாழ்த்துக்கள்...!!!



Tuesday, 22 November 2011

திரைப்படம் தடை

அணை 999 தடை 
மதிமுக பொதுசெயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை...






பாலை திரைப்படம்

பாலை படத்தின் பத்திரிக்கையாளர் விசேச காட்சியை சென்னை 4 ப்ரேம்ஸ் தியேட்டரில் பார்த்தேன்...

தமிழராய் இருப்பதற்கு பெருமிதம் கொள்கிறேன்...

என் பாட்டன் முப்பாட்டன் எல்லாம் வீரத்தில், விவேகத்தில், கொடையில் எவ்வாறு சிறந்து விளங்கினார்கள் என்று ”பாலை” படத்தின் மூலம் தெரிந்துகொண்டேன்..

தமிழரின் பண்டைய காலம் பற்றி தெரிந்துகொள்ள கண்டிப்பாக படம் பார்த்தே ஆகவேண்டும்... 





நவம்பர் 25 அன்று வெளி வருகிறது பாலை திரைப்படம்... 



Monday, 21 November 2011

பட்டதாரிக்கு தூக்கு




இந்த பரிசு பெறும் அறிவு என்ற பேரறிவாளனை தான் இந்திய அரசு தூக்கிலிடத்துடிக்கிறது. இவர் 21 வருடம் சிறையில் இருந்தும் அங்கேயே படித்து பட்டங்கள் பல பெற்று உள்ளே பல கைதிகளுக்கு பயிற்றுவிக்கிறார்.  

யாருக்கும் வேண்டாம் தூக்கு, மரண தண்டனையை நீக்கு


Saturday, 19 November 2011

சின்ன சின்ன ஆசை

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை இந்த வாரம் தொலைக்காட்சி பகுதியில் தமிழ்சினிமா இணைய தளத்தில் எழுதியுள்ளேன்...
பார்க்க, படிக்க... 

Friday, 18 November 2011

உயிர்ப்பிச்சை அல்ல

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் அண்ணன் பேரறிவாளன் சிறையிலிருந்து எழுதிய கடிதம் ..

பேரறிவாளனின் கடிதம்

Thursday, 17 November 2011

கொலைவெறி பாடல்

காலகட்டங்கள் மாறிகொண்டே போகிறது... நுகர்வு கலாச்சாரத்திற்கு பழகிப்போன இளைஞர்களும் , யுவதிகளும் புதுசு புதுசா எதாவது கற்றுகொண்டுதான் இருக்காங்க...
முன்னேற்றமான்னு கேட்டா இல்லைப்பா அது தான் உண்மை..


பாடலாசிரியர்கள் எல்லோரும் இது எல்லாம் பாடல்வரியான்னு திட்டினாலும் இன்றைய தினத்தில் சக்கை போடு போடுகிறது ஒரு பாடல்..
இன்றைய இளைய தலைமுறைக்கு எது பிடிக்கும்னு தெரிந்து வைத்து இருக்கிறார் போலும் தனுஸ்...
3 படத்தின் விளம்பரத்திற்காக பயன்படுத்தி இருக்கும் பாடல் 
ஒய் திஸ் கொலைவெறி பாடல்


வரிகள் பார்க்க  கொலைவெறி 

தலைவர் பிரபாகரன்


தமிழீழ விடுதலை போராட்டத்தை முன்னெடுத்து சென்ற
தலைவர் மேதகு பிரபாகரனின் படங்கள் ...


மாவீரர் நாள் உரையில்


அய்யா பழ.நெடுமாறனுக்கு துப்பாக்கி பயிற்சி

எம்ஜிஆர் உடன்

அண்ணன் செந்தமிழன் சீமானுடன்
இயக்குனர் மகேந்திரனுடன்
அய்யா கி.வீரமணியுடன்

அய்யா வைகோவுடன்





மேலும் படங்கள் பார்க்க...

பிரபாகரன் படங்கள்

Wednesday, 16 November 2011

தமிழ் டைப் பயிற்சி


வகுப்பில் மாணவர்கள்


இலவச தமிழ் கணினி பயிற்சிபட்டறை 12.11.2011 அன்று சாப்ட்வியூ ஊடககல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.


1.ஈமெயிலில் இணையம் குறித்த விளக்கம் 
2.கணினியில் தமிழ் உள்ளீடு செய்வது எப்படி
3.ஸ்கேனிங் செய்வது எப்படி
4.கேமராவிலிருந்து படத்தை கணினிக்கு கொண்டு வருவது எப்படி
5.புகைப்பட தரத்தை மாற்றுவதை எப்படி
6.பிடிஎப் பைல் உருவாக்குவது எப்படி


என ஒவ்வொரு பிரிவாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. கணினி துறையில் பல வருடம் அனுபவம் மிகுந்தவர்கள் கொண்டு வகுப்பு எடுக்கப்பட்டது...


இந்த பயிற்சி பட்டறையில் நானும் ஒரு கலந்து கொண்டேன். வகுப்பில் உட்கார அல்ல, வகுப்பு எடுக்க..
தாஸ் வகுப்பில்
அட, ஆமாங்க... தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்று வகுப்பு எடுத்தேன்...
கலந்து கொண்டவர்கள் பலர் வயதில் மூத்தவர்களே...

வகுப்பை இப்படி தான் ஆரம்பித்தேன், இங்கே கற்றுகொள்ள வயது தேவை இல்லை. கற்றுகொள்ள வயது தேவை இல்லை முதல் வரிக்கு நீங்கள் இரண்டாம் வரிக்கு நான் என்றேன்...


அந்த வரியிலேயே அனைவரும் அமைதி காத்தனர்...


வகுப்பு முடிந்தது, மதிய உணவு வேலையில் இருவர் எனக்கு பின்னூட்டம் சொன்னார்கள் இள ரத்தம் ரொம்ப வேகமாக பேசுறிங்க, இன்னும் பொறுமை தேவை இப்படி சொன்னது முனைவர் இரா.விஜயராணி திருச்சி பிசப் கல்லூரியில் பேராசிரியை...


கேப்ரியல் சார்
நல்லா பேசுறப்பா என சொன்னார் கேப்ரியல் சார்... ஒரு சிலரை பார்த்ததும் பிடிக்கும் காரணம் எல்லாம் தேவை இல்லை. அது மாதிரி தான் கேப்ரியல் சார்...ஒரே நாளில் நன்றாக பேசி சென்றார்.. இளமையான முகம் கொண்ட தொழிலதிபர்...


அப்பனுக்கு பாடம் சொல்லி குடுத்த சுப்பன் எனும் வரியை போல் ஆசிரியருக்கு பாடம் எடுத்த மாணவன்...




பிரபாகரன் 25

தமிழீழ விடுதலை போராட்டக்களத்தில் போராடி பலரால் தம்பி என அழைக்கப்பட்ட எங்கள் அண்ணன் ”பிரபாகரன்” பற்றிய 25 தகவல்கள் இணையத்தில் கிடைத்தது...

என் வலைப்பக்க நண்பர்களுக்காக தொகுத்துள்ளேன்...
பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும்

மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...

தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!


மேலும் படிக்க...

தலைவர் பிரபாகரன் 25

Friday, 11 November 2011

நறுக்கு

இலங்கையில் பிறந்து வளர்ந்து தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் உணர்ச்சிகவிஞர் காசி ஆனந்தன் அய்யா அவர்கள்  எழுதிய 3 நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தேவநேயபாவணர் நூலகத்தில் நடைபெற்றது. 

தமிழ் சினிமா இணையத்தில் இந்த நிகழ்ச்சிகளை பதிவேற்றுவதற்காக நான் கலந்துகொண்டேன். என்னுடன் சாப்ட்வியூ ஊடககல்லூரி மாணவர் சாம்தில்சனும் கலந்துகொண்டார்.



மூன்று புத்தகங்கள்
1. நறுக்குகள் (இரண்டாம் தொகுப்பு), 
2.பொழிச்சல் (புதுக்கவிதை உரை இலக்கியமே - ஆய்வு) 
3.பேஃபிள்ஸ் - கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

விழாவில் சிறப்பு விருந்தினர்கள்
  • மதிமுக பொதுசெயலாளர் வைகோ
  • தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் அய்யா அவர்கள்
  • திரைப்பட இயக்குநர் மணிவண்ணன்
  • கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்
  • ஓவியர் வீர சந்தானம்
  • தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி தலைவர் பெ.மணியரசன்
  • இயக்குநர் கௌதமன் 
  • கவிஞர் ஜெயபாஸ்கரன் .  
 மூன்று புத்தகத்தையும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆய்வு செய்தார். அதற்கு அடுத்து பேச வந்த பெ.மணியரசனும் அதற்குள் இருந்த நிறைகுறைகளை விளக்கினார்.
  
படங்கள் பார்க்க

 

Wednesday, 9 November 2011

விட்டல் சார்

My Dear Vittal Sir
திரைப்படக்கல்லூரியின் விரிவுரையாளர்களில் ஒருவராக இருந்து பல கலைஞர்களுக்கு பிடித்த மனிதனாக இருந்தவர், இருக்கிறவர்...

I am Waiting for my death , எனக்கு டெத் பெட்ல படுத்து கிடந்து சாவு வரக்கூடாது . டக்குன்னு ஒரு நாள் பட்டுனு போய்டனும் என்று அடிக்கடி சொல்வார் என்னிடமும் அண்ணன் கார்த்தி அவர்களிடமும்... 
அவர் ஆசை பூர்த்தியானது...

ஒரு நாள் மாரடைப்பு அவரின் உயிரை பிரித்து சென்று விட்டது.


”கல்லூரி மூன்றாம் ஆண்டில்”
யோவ்.......,
உனக்குன்னு ஒரு வேலை கிடைக்கும்                                                                               நல்லா சம்பாதிப்ப
அப்ப என்னை மறக்காம டிரிங்ஸோட ஒரு பார்ட்டி கொடுப்பியா ?
- விட்டல் சார்...

*நீங்கள் சொன்னது நடந்து விட்டது*
தயாராய் நான்...!!!
நீங்கள்............................??????????????????????????????

இறந்து வருடம் ஒன்றை கடந்துவிட்டது,

இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தாய்...
என் மன உலகை விட்டு அல்ல...!!!

 

நண்பேன்டா

சசிகுமார் - சமுத்திர கனி

சினிமாவில் நட்பு நீடிப்பது கடினம்...
ஆனால், இவர்கள் நட்பு நீடிக்கிறது....

நண்பர்களாய் இருங்கள்

நல்ல படம் கொடுங்கள்....!!!


சசிகுமார் - கதிர்

மெளனம் பேசியதே படத்தின் போது

உதவி இயக்குனர் - சசிகுமார் ( அமீர்)
உதவி ஒளிப்பதிவாளர் - கதிர் ( ராம்ஜி)

மச்சி, நான் படம் பண்ணும்போது நீ தான்  கேமரா பண்ணனும்..
- சசி கதிரிடம் சொன்னது...

பண்ணிட்டாங்கப்பா.....!!!!

சுப்பிரமணியபுரம்
நாடோடிகள்
ஈசன்
போராளி...
சசி படம் பண்றதுக்கு முன்னாடியே கதிர் கற்றது தமிழ் ஒளிப்பதிவு பண்ணிட்டார் என்பது கூடுதல் தகவல்...
வாழ்த்துக்கள் தோழமைகளே...!!!
 

இவருக்கா தூக்கு?

மாணவப் பருவத்தில்...


சிறைச்சாலையில்...



நன்றி : மரண தண்டனை கூட்டமைப்பு ...




பட்டினி போராட்டம்

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் மரணதண்டனையை ரத்து செய்யவேண்டி தொடர் பட்டினி போராட்டம் சென்னை கோயம்பேட்டில் நடந்தது...


தொடர் பட்டினிப் போராட்டம்செப்டம்பர் 22 அன்று ஆரம்பித்த இந்த தொடர் பட்டினி போராட்டம் 44 நாள் தொடந்து நடைபெற்று..
 

அரசியல் கட்சி பிரமுகர்கள், திராவிட இயக்க ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள், ஓவியர்கள், சமூக ஆர்வலர்கள், முற்போக்கு சிந்தனைவாதிகள், இலங்கை தமிழர் நலனில் அக்கறை உள்ளவர்கள், மாணவர்கள், மேலும், கட்சி சார்ந்த மற்றும் கட்சி சாராத அமைப்புகள் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்புகள் கலந்து கொண்டு மரண தண்டனைக்கு எதிரான தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

தொடர் பட்டினிப் போராட்டம்

கலந்து கொண்ட அமைப்புகளின் விவரம் பின்வருமாறு : 


22.09.2011 – சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்
23.09.2011 – தமிழ்நாடு கொங்குஇளைஞர் பேரவை
24.09.2011 – புதிய தமிழகம் கட்சி
25.09.2011 – மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றகழகம்
26.09.2011 – கொங்கு பேரவை விவசாயிகள் கூட்டம்
27.09.2011 – பேரறிவாளன் கல்வி பாசறை
28.09.2011 – தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
29.09.2011 – அன்னையர் முன்னனி
30.09.2011 – மள்ளர் மீட்பு இயக்கம்
01.10.2011 – சோலையார்பேட்டை பொதுமக்கள்
02.10.2011 – தமிழர் கிறிஸ்தவ தோழமை இயக்கங்கள்
03.10.2011 – மதிமுக வழக்கறிஞர் அணி, எட்டுத்திக்கும் எம்மக்கள்
04.10.2011 – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை
05.10.2011 – தமிழர் தேசியபொதுவுடமை கட்சி
06.10.2011 – திராவிட இயக்க தமிழர் பேரவை
07.10.2011 – பாவந்தர் பாரதிதாசன் முன்னாள் மாணவர் சங்கம், பொதுமக்கள் விழிப்புணர்வு இயக்கம்
08.10.2011 – ஓவியர் வீரசந்தானம் மற்றும் தமிழ் படைப்பாளிகள், ஈழ நேரு மற்றும் ஈழ தமிழ் உறவுகள்.
09.10.2011 – மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் சங்கம்
10.10.2011 – தமிழர் உரிமைக்கான பார்வையற்றோர் சங்கம்
11.10.2011 – 3 தமிழர் உயிர் பாதுகாப்பு இயக்கம், திருவள்ளூர்.
12.10.2011 – நாங்கள் தமிழர்கள் மற்றும் ’புகழ்செல்வி’ திங்கள் இதழ்.
13.10.2011 - மூவர் உயிர் மீட்பு இயக்கம், விழுப்புரம்
14.10.2011 - 3 தமிழர் உயிர் பாதுகாப்பு இயக்கம், வேலூர்
15.10.2011 - மரண தண்டனை எதிர்ப்பு ஓவியர்கள்
16.10.2011 - ஊடகவியல் உணர்வாளர்கள்
17.10.2011 - மே 17 இயக்கம்
18.10.2011 - 3 தமிழர் உயிர்பாதுகாப்பு இயக்கம், வடசென்னை
19.10.2011 - மாற்றத்திற்கான செய்தியாளர்கள்
20.10.2011 - மதிமுக மகளிர் அணி
21.10.2011 - மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
22.10.2011 - சமூக சமத்துவப் படை
23.10.2011 - தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
24.10.2011 - செங்கொடி படை
25.10.2011 தமிழீழ ஆதரவு திரைப்பட உதவி இயக்குனர்கள்
26.10.2011 மனித உரிமை இயக்கங்கள்
27.10.2011 கிறிஸ்தவ தமிழ் உணர்வாளர்கள்
28.10.2011 பேரறிவாளன் திரைப்படக்குழு
29.10.2011 மதிமுக இணையதள நண்பர்கள், தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு அம்பத்தூர்
30.10.2011 தமிழ்நாடு தொடக்கபள்ளி ஆசிரியர் மன்றம்
31.10.2011 தமிழக ஓட்டுனர்கள் மற்றும் கால்டாக்ஸி ஓட்டுனர்கள் சங்கம்
01.11.2011 முத்துகுமார் இளைஞர் பாசறை
02.11.2011 தமிழ் மீட்பு அமைப்பு, தமிழ் சிற்றிதழாளர்கள்
03.11.2011 விடுதலை சிறுத்தைகள் கட்சி
04.11.2011 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி



Tuesday, 8 November 2011

என்றும் சூப்பர் ஸ்டார்


நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஒரு விழாவுக்கு கலந்து கொள்ள வேண்டுமென  அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது...

மழை பெய்து கொண்டிருந்த மாலை நேரம்...
போகலாமா வேணாமா என யோசித்த போது
மழை நின்றது...
கிளம்பி போனேன்...

ஆறு மாதமாக தமிழக ரசிகர்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள பல தமிழ்சினிமா ரசிகர்களின் உள்ளங்களில்  இருக்கும்   சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை சரி இல்லாமல் இருந்தார்...

ஊடகங்களில் கண்ணிலேயே படாமல் சிங்கப்பூர் சென்று சிகிச்சை செய்து திரும்பினார்...

உடல் நிலை சரியான பிறகு முன் அறிவிப்பு (அழைப்பிதழில் பெயரே போடவில்லை) இன்றி கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இயக்குனர் எஸ்.பி. முத்துராமனுக்கு சங்கர ரத்னா விருது வழங்கும் விழா...

இன்று ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் மெச்சூரிட்டியாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் ஒரு காலத்தில் தலைவா என்று கத்திய வாய்க்கு சொந்தகாரன் தானே..

என்னிடம் இருந்தது NIKON D 40 கேமரா... லென்ஸ் வேற பிரச்சனை, இருப்பினும் விடல அடிஅடின்னு 100 போட்டோ கிளிக் செய்து தள்ளிவிட்டேன்... 


சில படங்கள் இங்கே...






















மேலும் படங்கள் பார்க்க...

தமிழ்சினிமா இணையதளம் 
Related Posts Plugin for WordPress, Blogger...