அக்டோபர் 18
நம்ம பிறந்தநாளை நாம கொண்டாடுனா தரித்திரம்
மற்றவங்க கொண்டாடுனா சரித்திரம்
அப்படி ஒரு பஞ்ச் அவன் சொன்னது...
யோவ் போயா, ட்ரீட் கொடுக்க மாட்டேன்னு சொல்
அதை விட்டுடு இப்படி மொக்கையா எதாவது பேசாத
அவனுக்கு நெருங்கிய நண்பர்கள் சொன்னது...
17 இரவே அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே
ஞானசேகரனிடமிருந்து முதல் மெசேஜ் வாழ்த்து
யார் இந்த ஞானசேகரன் தெரியாது அவனுக்கு...
11:30pm க்கு தூங்கியதால் 12:01am க்கு போன் வந்தது
காலையில் அறிவான் போன் பண்ணியவருக்கு தெரியாது
இதை படித்தால் தெரிந்து கொள்வார்....
மெனிமோர் ஹாப்பி ரிட்டன்ஸ் ஆப் த டே
வேரிஸ் த பார்ட்டி தெரியாத எண்ணிலிருந்து மெசேஜ்
விஸ் யூ ஹாப்பி பர்த்டே தெரிந்த எண்ணிலிருந்து மெசேஜ்
மெரினா கடற்கரையை பார்த்துவிட்டு
ஒரு இளநீரால் தாகம் தனித்துவிட்டு
இன்று ஒழுங்காக குளித்துவிட்டு
அவசரமாக கிளம்பிவிட்டான் அறையைவிட்டு...
தங்கை ரேணுகா போன் போட்டு முதல் வாழ்த்து
தம்பி 2பைஸ்டார் கொடுத்து இரண்டாவது வாழ்த்து
மறந்துட்டன்டா நினைவுபடுத்தி அம்மா வாழ்த்து
ஞாபகம்இருந்தது வேலையாஇருந்தேன் அப்பா வாழ்த்து
அண்ணனும் அண்ணியும் அடுத்த அடுத்த வாழ்த்து
அக்கா பையன் ட்ரீட் எங்க மாமா கேட்டுவிட்டு வாழ்த்து...
அலுவலகத்தில்.. ஜம்முன்னு இருக்கிங்க சார் பிறந்த நாளா ?
18ந்தேதியா 19ந்தேதியா சொல்லுங்க குழப்பமா இருக்கே ??
சாரி சார் மறந்தே போய்ட்டேன் !!! சொல்லவே இல்லை???
எல்லா கேள்விக்கும் புன்னகையை உதிர்த்து விட்டான்.......
வகுப்பில் கிளாஸ் எடுத்துக்கிட்டு இருந்தபோது
சார் ஒரு நிமிடம் என்று ஒரு பெட்டியுடன் வந்த மாணவன்
நீங்க சொல்லவில்லை என்றால் எங்களுக்கு தெரியாதா
பெட்டிக்குள் இருந்து கேக் எடுத்து வெட்ட சொன்னான்
என்ன செய்வது என்றே தெரியாமல் விழித்த போது
கையில் கத்தியை கொடுத்தார்கள் மாணவர்கள்....
அனைவரும் சூழ கேக் வெட்டப்பட்டது
எல்லோருக்கும் ஊட்டப்பட்டது
முகத்தில் பூசப்பட்டது
எடுத்த வகுப்பு நிறுத்தப்பட்டது
அனுபவம் பகிரப்பட்டது – கிளாஸ் போச்சு,
மகிழ்வுடன் விடை பெற்றான்....
மாணவர்கள் பரிசளித்தது நிறைய பேனா
ஆர்குட்டில் அழகான வாழ்த்துக்கள்
பேஸ்புக்கில் பேமிலி பேக் அளவு வாழ்த்துக்கள்
மாலை...
சாக்லேட், பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பருடன்
காக்கும் கரங்கள் சென்றான்
குழந்தைகள் அவனை கண்டதும் ஒரே மகிழ்ச்சி
ஒரு குழந்தை கேட்டது
எங்களை மறந்துட்டியானா
எதுவும் பதில் பேச திரானி அற்றவனாய் நின்றான்
வாங்கியது கொடுக்கப்பட்டது
வாழ்த்துக்கள் சொல்லப்பட்டது
இரவு உணவு முடிக்கப்பட்டது
கொஞ்சம் பணம் கொடுக்கப்பட்டது
எந்த வருடமும் இல்லாத அதிகப்படியான வாழ்த்துக்கள்
பெயரே தெரியாத நண்பர்கள் பலர் மெசேஜ் மூலம் வாழ்த்துக்கள்
எல்லாவற்றிற்கும் காரணம் தங்கை புஜ்ஜிமா- நன்றி.
இரவு தூங்க போகும் போது அவள் தொடர்பில்
உனக்கு பிறந்த நாள் என்பது எனக்கு தெரியும்டா
அதற்குள் நீ மெசேஜ் பண்ணிட்ட
நீ சொல்லி எப்படிடா வாழ்த்துவது என்று புலம்பல்
எதையும் கண்டுகொள்ளாத அவன் எங்கே பிறந்த நாளுக்கு பரிசு
இவனிடத்தில் கோபத்தை எதிர்பார்த்த அவள்
இதை எதிர்பார்க்கவில்லை
என்ன வேண்டும் என்றான் என்பதும்
என்ன அவள் கொடுத்தாள் என்பதும்
நமக்கு தெரியாதா என்ன.....?
மகிழ்ச்சி அவன் வாழ்வில் பெருகட்டும்
பண்பாய் பழகட்டும்
நாமும் வாழ்த்துவோம்....
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தோழமையே.............!!!!!!!!
பேஸ் புக்கில்..
தென் பாண்டிச் சிங்கம்
சிவகங்கை திரைச்சிற்பியே
நீ வரையும் திரை ஓவியம் செம்மையாக..
பாராட்டுக்கள் குவிய
நல் வாழ்வு மலர
நாணயம் பெருக
சந்தோசம் உன் வாழ்வில் நடனமிட
என்றும் நீ திரையில் வலம் வருவாய்...
ஆண்டவன் அருள் புரிவார்....
நீடூழி வாழ்க..
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-B.சிங்காரவேலு DFT...
 |
| பேஸ் புக்கில் வந்த வாழ்த்து |
 |
| பேஸ்புக்கில் சாப்ட்வியூ மாணவன் பிரபுவின் வாழ்த்து |
 |
| வகுப்பில் வெட்டப்பட்ட கேக், அருகில் கேக் வாங்கி வந்த மாணவன் மணிகண்டன் |
-தாஸ்..,