சரியா சொல்லணும்னா ஆறாவது படிக்கும் போது நாங்க பார்த்துக்கிட்டது, நான் அஞ்சாவது தொடக்கபள்ளியில படிச்சுட்டு மேல்நிலைப்பள்ளியில சேர்ந்த போது. சும்மா பள்ளி நண்பர்கள் தான் செக்சனாக பிரித்தாலும் நாங்க ஒரே கிளாசுல தான் இருந்தோம். கம்பெனி கிளாஸ்…
பத்தாவதுல பிரபா ஐநூறுக்கு ஐம்பது கம்மி, மேக்ஸ்ல நூறு வேற.. நான் நானுரை முக்கி தொட்டேன். கண்ணா கொஞ்ச எட்டியே நின்னான். பட் பாஸ். பதினொன்னு வேற ஸ்கூல் சேரணும் பிரிய போறோம் அப்படின்னு பீலிங்க்ஸ் எல்லாம் பெருசா ஒன்னும் பண்ணல…
எப்படின்னு புரியல என்ன மாயமோ தெரியல மூனு பேருமே ஒரே ஸ்கூலில் ஒரே மேக்ஸ் குரூப். இப்பதாங்க எங்க நட்பு டாப் கியர். எங்க வீட்ல என்ன பங்சன் என்றாலும் பிரபாவும் கண்ணாவும் பிரசண்ட். நான் மோஸ்லி அவங்க வீட்டு விசேசத்துக்கு ஆப்சண்ட் ஆக மாட்டேன்னு நினைக்கிறேன்.
பிளஸ்டூவுல தாங்க அந்த துயரம் நிகழ்ந்தது. பிரபாவோட அப்பா உடம்பு சரியில்லாம இருந்து இறந்துபோய்ட்டார். கிளாசே சோகத்துல மூழ்குச்சு, சரி துக்கம் விசாரிக்கலாம்னு கிளம்புனா பஸ்சே போகாத ஊருக்கு தூக்கிட்டு போய்ட்டாங்க இறுதி சடங்குக்கு. என்ன செய்ய கையாளாகாத தனமாக இருந்தாச்சு. பிரபா வந்தா அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியல. மூணு நாளுக்கு அப்புறம் கிளாசுக்கு வந்தான். எங்க கூட படிச்ச கோபாலு தான் முதலில் துக்கம் விசாரிச்சான். நான் அதை பற்றி எதுவுமே கேக்கலை. அதை தான் என் பிரபாவும் விரும்பினான் போல. அவனும் அதை பெருசா எதுவும் எடுத்துக்கல..
நாங்க ப்ளஸ்டூ படிக்கும் போது டூர் போட்டோம் , நாங்களா கிளம்புனோம் . ராமேஸ்வரம் ட்ரெயினுல . நான் பிரபா கண்ணா கோவாலு சாரி கோபாலு.. கோபால் என்ன பேசுறானேன்னு பல சமயம் எங்களுக்கு புரியாது. அவ்ளோ பாஸ்ட்டா பேசுவான். அவனை பிரபா அளவுக்கு யாராலையும் ஓட்ட முடியாது.
மறக்க முடியாத பயணம் ஏன்னா நாங்க நாளு பேரும் முதன் முறையா ட்ரெயினுல போறோம். செம எக்ஸ்பீரியன்ஸ். செலவு எல்லாம் தட் தட் மேன் சிஸ்டம் தான். அவங்க அவங்க செலவை அங்களே பார்த்துக்கிறனும். அதுக்கு மேல யாராவது அவங்களுக்கு பதிலா செலவு பண்ணுனா கொடுத்துடனும். தி கிரேட் ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட். ராமேஸ்வரம் போட்டோஸ் இப்பவும் எங்கிட்ட இருக்கு. ட்ரெயினுக்கு வெளியில காலை நீட்டிக்கிட்டு வந்த போது காலில் முள் கீறி பொல பொலன்னு ரத்தம் ஊத்திடுச்சு. இதை பார்த்த பிரபாவும் கண்ணாவும் துடிச்சு போய்ட்டாங்க அப்படின்னு மட்டும் நினைக்காதிங்க இதை வாசிக்கும் நல்ல உள்ளமே, செமத்தியா சிரிச்சாய்ங்க ஏண்டா காலை வெளியில் நீட்டிக்கிட்டு வந்தன்னு…
ப்ளஸ் ஒன், பிளஸ் டூ நாங்க படிச்சது மாதிரி கொடுமை வேற எந்த ஸ்டூடண்டுக்கும் வரக்கூடாது. செல்ஃப் பைனான்ஸ் ஸ்கூல் . அன்னைக்கு காலையில போனாத்தான் வாத்தியார் யார்ன்னு எங்களுக்கே தெரியும்,. மாறிக்கிட்டே இருந்தாங்க. இதுல பிஎட் டிரெயினிங் எல்லாம் எங்களை வச்சு தான் சில வாத்தியார் டெஸ்டிங்கே , இதை என் ஆசிரியர்கள் சிலர் படிக்க கூடும் அதனால அவர்களின் நலன் கருதி இதை தொடரவில்லை.
அட்டெம்ட் எழுதுன கண்ணா டோட்டல் என்னை விட அதிகம். டிப்ளோமோ டைரக்ட் செகண்ட் இயர் சேர்ந்தான். பிரபா இன்ஜினியர். நான் ஆட்ஸ் காலேஜ் பிஎஸ்சி பிசிக்ஸ் . அதையே ஆள் எல்லாம் வச்சு தான் வாங்குனேன். இது வரைக்கும் யாருக்கும் தெரியாத உண்மையை படிக்கிற உங்களுக்கு மட்டும் சொல்லி இருக்கேன்.
தோழர் குருசாமி மயில்வாகனன் என் வாழ்க்கையில மறக்க முடியாத, மறக்க கூடாத நபர். சென்னையில போய் படிங்க தோழான்னு சொன்னாரு. ஏன்னா அவங்க பையன் அங்க படிச்சுக்கிட்டு இருந்தார். பஸ்ட் இயர் டிஸ்கண்டினியூ .
திரைப்படக்கல்லூரி எந்த வித ரெக்கமண்டேசனும் இல்லாம என்னை ஏற்றுக்கொண்டது. அய்யயோ இவய்ங்க ரெண்டு பேரையும் விட்டு விட்டு என் சுய புராணத்துக்கு வந்துட்டேன்னா . சாரிங்க…
கண்ணாவை பற்றிய ஒரு பிளாஸ்பேக். ஐஞ்சு ரூபா கொண்டு வந்து எங்கிட்ட தான் முதலில் காட்டுவான். நான் தான் ஐடியா கொடுப்பேன். ஐம்பது பைசாவுக்கு அப்பளம் வாங்கிட்டு மீதி நாளு ரூபா ஐம்பது பைசாவை பத்திரமா வச்சு இருடான்னு குடுத்தா. சாயங்காலம் வீட்டுக்கு போகும் போது காசை எடுடா எதாவது வாங்கலாம்னு சொன்னா தொலைச்சு இருப்பான். அம்புட்டு சேப்டி சிங் இன்னைக்கு பதினைஞ்சு.
தென்மாவட்டங்களில் ஜாதி பிரச்சனை இன்னும் இருக்குது. இதை சொல்ல எனக்கு வருத்தமாக இருந்தாலும் பதிவு செய்தே ஆகணும்னு என்கிற என்னோட ஆதங்கம் இதை டைப் பண்ண வைக்கிது. நாங்க மூணு பேரும் வெவ்வேற ஜாதி ( என் கண்ணாவும் பிரபாவும் படிச்சா சிரிப்பாங்க –தப்பா எடுத்துக்க மாட்டாய்ங்க என்கிற நம்பிக்கை தான்).
என் தங்கச்சி கேட்ட வார்த்தை இவ்வளவு வருடமாக பிரியாத நட்பு ஒரு வேலை எந்த காரணத்துனால அண்ணா பிரியும்னு.. எனக்கு பதில் சொல்ல தெரியல. ஏன்னா அப்படி ஒரு சூழ்நிலை எங்களுக்குள்ள வராது.
பணம் தான் சின்ன வயசுல இருந்தே தட் தட் மேன் சிஸ்டம். என்னை காதல் தேவதை எட்டி பார்த்து சென்றால், அவ்விருவரின் அருகிலேயே வரவில்லை.
சென்னைக்கு என் ரூமுக்கே வந்து போய் இருக்காங்க என் கண்ணாவும் பிரபாவும். இப்ப எல்லாம் போன்ல கான்பிரஸ்ல பேசுறோம்.
நான் சென்னை, கண்ணா பெங்களூர், பிரபாகரன் கோயம்புத்தூர் எப்படியும் ஒரு விசேஷ தினத்தில் எங்க ஊருல சந்திப்போம். அது நல்ல தினமாக அமையனும்.
நண்பான்னு ரொம்ப நாளைக்கு பிறகு பார்த்தா கட்டி பிடிக்கிறது எல்லாம் இல்லை. ஜஸ்ட் ஒன் ஸ்மை அவ்ளோ தான்.
we are friends
சாதாரணமாக கிளாஸ்மெட்ஸ் தான். லைட்டா மூவ் ஆகிகிட்டு இருந்த எங்க பிரண்ட்சிப் செகண்ட் கியர் லெவலுக்கு ஆனது பத்தாவது படிக்கும் போது. நாங்க ஒரே கிளாஸ் ஆனோம். நானும் கண்ணாவும் சுமார், பிரபாகரன் பிரில்லியண்ட் பாய்.. ஆனால் எனக்கும் பிரபாவுக்கும் கை எழுத்து அழகாக இருக்கும் . கண்ணா எழுதிட்டு மறுபடியும் படிக்க சொன்னா அவனாலேயே படிக்க முடியாது.
பத்தாவதுல பிரபா ஐநூறுக்கு ஐம்பது கம்மி, மேக்ஸ்ல நூறு வேற.. நான் நானுரை முக்கி தொட்டேன். கண்ணா கொஞ்ச எட்டியே நின்னான். பட் பாஸ். பதினொன்னு வேற ஸ்கூல் சேரணும் பிரிய போறோம் அப்படின்னு பீலிங்க்ஸ் எல்லாம் பெருசா ஒன்னும் பண்ணல…
எப்படின்னு புரியல என்ன மாயமோ தெரியல மூனு பேருமே ஒரே ஸ்கூலில் ஒரே மேக்ஸ் குரூப். இப்பதாங்க எங்க நட்பு டாப் கியர். எங்க வீட்ல என்ன பங்சன் என்றாலும் பிரபாவும் கண்ணாவும் பிரசண்ட். நான் மோஸ்லி அவங்க வீட்டு விசேசத்துக்கு ஆப்சண்ட் ஆக மாட்டேன்னு நினைக்கிறேன்.
பிளஸ்டூவுல தாங்க அந்த துயரம் நிகழ்ந்தது. பிரபாவோட அப்பா உடம்பு சரியில்லாம இருந்து இறந்துபோய்ட்டார். கிளாசே சோகத்துல மூழ்குச்சு, சரி துக்கம் விசாரிக்கலாம்னு கிளம்புனா பஸ்சே போகாத ஊருக்கு தூக்கிட்டு போய்ட்டாங்க இறுதி சடங்குக்கு. என்ன செய்ய கையாளாகாத தனமாக இருந்தாச்சு. பிரபா வந்தா அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியல. மூணு நாளுக்கு அப்புறம் கிளாசுக்கு வந்தான். எங்க கூட படிச்ச கோபாலு தான் முதலில் துக்கம் விசாரிச்சான். நான் அதை பற்றி எதுவுமே கேக்கலை. அதை தான் என் பிரபாவும் விரும்பினான் போல. அவனும் அதை பெருசா எதுவும் எடுத்துக்கல..
நாங்க ப்ளஸ்டூ படிக்கும் போது டூர் போட்டோம் , நாங்களா கிளம்புனோம் . ராமேஸ்வரம் ட்ரெயினுல . நான் பிரபா கண்ணா கோவாலு சாரி கோபாலு.. கோபால் என்ன பேசுறானேன்னு பல சமயம் எங்களுக்கு புரியாது. அவ்ளோ பாஸ்ட்டா பேசுவான். அவனை பிரபா அளவுக்கு யாராலையும் ஓட்ட முடியாது.
மறக்க முடியாத பயணம் ஏன்னா நாங்க நாளு பேரும் முதன் முறையா ட்ரெயினுல போறோம். செம எக்ஸ்பீரியன்ஸ். செலவு எல்லாம் தட் தட் மேன் சிஸ்டம் தான். அவங்க அவங்க செலவை அங்களே பார்த்துக்கிறனும். அதுக்கு மேல யாராவது அவங்களுக்கு பதிலா செலவு பண்ணுனா கொடுத்துடனும். தி கிரேட் ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட். ராமேஸ்வரம் போட்டோஸ் இப்பவும் எங்கிட்ட இருக்கு. ட்ரெயினுக்கு வெளியில காலை நீட்டிக்கிட்டு வந்த போது காலில் முள் கீறி பொல பொலன்னு ரத்தம் ஊத்திடுச்சு. இதை பார்த்த பிரபாவும் கண்ணாவும் துடிச்சு போய்ட்டாங்க அப்படின்னு மட்டும் நினைக்காதிங்க இதை வாசிக்கும் நல்ல உள்ளமே, செமத்தியா சிரிச்சாய்ங்க ஏண்டா காலை வெளியில் நீட்டிக்கிட்டு வந்தன்னு…
ப்ளஸ் ஒன், பிளஸ் டூ நாங்க படிச்சது மாதிரி கொடுமை வேற எந்த ஸ்டூடண்டுக்கும் வரக்கூடாது. செல்ஃப் பைனான்ஸ் ஸ்கூல் . அன்னைக்கு காலையில போனாத்தான் வாத்தியார் யார்ன்னு எங்களுக்கே தெரியும்,. மாறிக்கிட்டே இருந்தாங்க. இதுல பிஎட் டிரெயினிங் எல்லாம் எங்களை வச்சு தான் சில வாத்தியார் டெஸ்டிங்கே , இதை என் ஆசிரியர்கள் சிலர் படிக்க கூடும் அதனால அவர்களின் நலன் கருதி இதை தொடரவில்லை.
ஒரு வழியா மள்ளுக்கட்டி படிச்சு முடிச்சோம். ப்ள்ஸ் டூ ரிசல்ட் நான் அடிச்சு புடிச்சு பாஸ், பிரபா அடிக்காம புடிக்காம 900 தொட்டான். அய்யோ கண்ணாவுக்கு ஒன்னுல போச்சு, கவலைபடாத கண்ணா அப்படின்னு ஆறுதல் சொன்னா டேய் நீ எல்லாம் பாஸ் ஆகிட்ட நான் எப்படிடா பெயிலாப் போனேன்னு என்னை பார்த்து கண்ணா கேட்டான். எம்புட்டு பாசக்கார நண்பன் பாத்திங்களா…
அட்டெம்ட் எழுதுன கண்ணா டோட்டல் என்னை விட அதிகம். டிப்ளோமோ டைரக்ட் செகண்ட் இயர் சேர்ந்தான். பிரபா இன்ஜினியர். நான் ஆட்ஸ் காலேஜ் பிஎஸ்சி பிசிக்ஸ் . அதையே ஆள் எல்லாம் வச்சு தான் வாங்குனேன். இது வரைக்கும் யாருக்கும் தெரியாத உண்மையை படிக்கிற உங்களுக்கு மட்டும் சொல்லி இருக்கேன்.
தோழர் குருசாமி மயில்வாகனன் என் வாழ்க்கையில மறக்க முடியாத, மறக்க கூடாத நபர். சென்னையில போய் படிங்க தோழான்னு சொன்னாரு. ஏன்னா அவங்க பையன் அங்க படிச்சுக்கிட்டு இருந்தார். பஸ்ட் இயர் டிஸ்கண்டினியூ .
திரைப்படக்கல்லூரி எந்த வித ரெக்கமண்டேசனும் இல்லாம என்னை ஏற்றுக்கொண்டது. அய்யயோ இவய்ங்க ரெண்டு பேரையும் விட்டு விட்டு என் சுய புராணத்துக்கு வந்துட்டேன்னா . சாரிங்க…
படிச்சு முடிச்சுட்டோம்னு வச்சுக்கங்க நான் ரெண்டு மூணு இடத்துல கிடைக்கிற வேலை எல்லாம் பார்த்து இப்ப எழுதுற இந்த சமயம் நான் ஊடக கல்லூரியில் பயிற்றுனர். தமிழ்சினிமா.காம் இணையத்தின் சப் எடிட்டர்.
பிரபா கோயம்புத்தூருல ஒரு கம்பெனியில வேலை, பத்தாயிரம் சம்பளம் தொடும். கண்ணா பெங்களூரில் பதினைந்தை தொடுதுங்க என்ன கொடுமை சார் இது.
கண்ணாவை பற்றிய ஒரு பிளாஸ்பேக். ஐஞ்சு ரூபா கொண்டு வந்து எங்கிட்ட தான் முதலில் காட்டுவான். நான் தான் ஐடியா கொடுப்பேன். ஐம்பது பைசாவுக்கு அப்பளம் வாங்கிட்டு மீதி நாளு ரூபா ஐம்பது பைசாவை பத்திரமா வச்சு இருடான்னு குடுத்தா. சாயங்காலம் வீட்டுக்கு போகும் போது காசை எடுடா எதாவது வாங்கலாம்னு சொன்னா தொலைச்சு இருப்பான். அம்புட்டு சேப்டி சிங் இன்னைக்கு பதினைஞ்சு.
என்னை கண்ணா மாப்பிள்ளையின்னு தான் கூப்பிடுவான். நானும் தான். நாங்க ரெண்டு பேரும் பிரபாவை எலின்னு கூப்பிடுவோம். எதுக்கு வச்சோம்னு தெரியல. அப்படியே நீடித்து போனது. பிரபா எங்க ரெண்டு பேரையும் பேரு சொல்லிதான் கூப்பிடுவான்.
தென்மாவட்டங்களில் ஜாதி பிரச்சனை இன்னும் இருக்குது. இதை சொல்ல எனக்கு வருத்தமாக இருந்தாலும் பதிவு செய்தே ஆகணும்னு என்கிற என்னோட ஆதங்கம் இதை டைப் பண்ண வைக்கிது. நாங்க மூணு பேரும் வெவ்வேற ஜாதி ( என் கண்ணாவும் பிரபாவும் படிச்சா சிரிப்பாங்க –தப்பா எடுத்துக்க மாட்டாய்ங்க என்கிற நம்பிக்கை தான்).
இதை எழுதுறதுக்காக இங்க பதிவு செய்கிறேனே தவிர எங்களுக்குள்ள எங்கயுமே பதிஞ்சது இல்லை. ஒரு துளி கூட பார்த்தது இல்லை. அவங்க வீட்டுலயும் யாரும் கேட்டது இல்லை, எங்க வீட்டுலயும் எதுவும் கேட்க மாட்டாங்க.
என் தங்கச்சி கேட்ட வார்த்தை இவ்வளவு வருடமாக பிரியாத நட்பு ஒரு வேலை எந்த காரணத்துனால அண்ணா பிரியும்னு.. எனக்கு பதில் சொல்ல தெரியல. ஏன்னா அப்படி ஒரு சூழ்நிலை எங்களுக்குள்ள வராது.
பணம் தான் சின்ன வயசுல இருந்தே தட் தட் மேன் சிஸ்டம். என்னை காதல் தேவதை எட்டி பார்த்து சென்றால், அவ்விருவரின் அருகிலேயே வரவில்லை.
சென்னைக்கு என் ரூமுக்கே வந்து போய் இருக்காங்க என் கண்ணாவும் பிரபாவும். இப்ப எல்லாம் போன்ல கான்பிரஸ்ல பேசுறோம்.
கடைசிய எப்ப உட்கார்ந்து பேசுனோம்னு நினைவு இல்லை. பார்த்தது கண்ணாவோட அண்ணா கல்யாணத்துல…
நான் சென்னை, கண்ணா பெங்களூர், பிரபாகரன் கோயம்புத்தூர் எப்படியும் ஒரு விசேஷ தினத்தில் எங்க ஊருல சந்திப்போம். அது நல்ல தினமாக அமையனும்.
நண்பான்னு ரொம்ப நாளைக்கு பிறகு பார்த்தா கட்டி பிடிக்கிறது எல்லாம் இல்லை. ஜஸ்ட் ஒன் ஸ்மை அவ்ளோ தான்.
we are friends
ரொம்ப நாளா ஒரு டூர் பிளான் பண்ணி இருக்கோம்.
போய்ட்டு வந்து சொல்றேன்….!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

.jpg)
.jpeg)
.jpg)
.jpg)