விவாதம் என்றாலே பிரச்சனைக்குரியது என்று தான் அர்த்தம் அந்த பிரச்சனையை கையாள்வது தான் திறமையானவர்களை உருவாக்குகிறது. உருவாகி வருகிறார் கோபிநாத் (உருவாகி விட்டார்).
சர்வதேச நாடுகளில் ஒரு பிரச்சனையை அலசி ஆராய தொலைக்காட்சிகளில் ’டாக் ஷோ’ நடத்தப்படும் . அதை போல தமிழகத்தில் பிரச்சனைக்குரிய சம்பவங்களை, மனரீதியான போராட்டங்களை , உறவுக்குள்ளான முறிவுகளை இப்படி பல தரப்பட்ட பிரச்சனைகளை அலசி ஆராய்கிறது ”நீயா நானா” தொலைக்காட்சி நிகழ்ச்சி.
ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டால் அதற்கு ஆதரவானவர்களையும் அதற்கு எதிரானவர்களையும் எதிரெதிரே உட்கார வைத்து அடித்து கொள்ளாத குறையாக பேசியே சண்டை போடுவது தான் இந்த நிகழ்ச்சி. கருத்துக்களை முன் வைத்து வார்த்தையால சண்டை போடுவது என்று சொன்னால் பொருந்தும்.
இரு பக்கம் இருப்பவர்களையும் அவரவர் மனநிலைக்கு தகுந்தார் போல பேச வைத்து கூச்சல் குழப்பம் இல்லாமல் நிகழ்ச்சியை நேர்த்தியாக தொகுத்து வழங்குகிறார் கோபிநாத். இருந்தாலும் நிகழ்ச்சியில் பலரை ஒழுங்காக பேச வாய்ப்பளிக்க மறுக்கிறார் என இவர் மேல் பலர் குற்றம் சாட்டுகின்றனர். இவரின் பெயர் பல இடங்களில் நீயா நானா கோபிநாத் என்றே அழைக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் ஆண்டனி. தொடர்ந்து தொலைக்காட்சிகளுக்கான அதிக விளம்பரதாரர்களை கொண்டுள்ள நிகழ்ச்சியாக ஞாயிறு தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.- தாஸ்..,
நன்றி தமிழ்சினிமா.காம்

No comments:
Post a Comment