Saturday, 17 March 2012

குருவுக்கு சீடர்கள் எடுத்த விழா - ரமேஷ் சார் பணி ஓய்வு விழா


முன்னாள் முதல்வருக்கு இந்நாள் முதல்வர் சிறப்பு செய்கிறார். அருகில் கணேஷ்  அண்ணா

…”ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே என்னை அர்ப்பணி” என தன்னுடைய வாழ்நாளில் இருபத்து ஐந்து வருடம் குருவாக இருந்து பல சிஷ்யர்களை உருவாக்கிய திரைப்படக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் படப்பதனிடுதல் துறையின் தலைவர் திரு.ரமேஷ் சார் அவர்கள் 29.0202012 அன்று பணி ஓய்வு பெற்றார்.


அவரிடம் படித்த மாணவர்கள் சார்பாக ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பிரதாப் ப்ளாசா என்ற இடத்தில் நடைபெற்றது.


பத்திரிக்கையில எழுத ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சேன் எந்த செய்தியாக இருந்தாலும் பத்திரிக்கை பாணியிலேயே செய்தி எழுத வருகிறது. இந்த பாணி, இந்த செய்திக்கு தவறு. ஏன்னா எங்க  ரமேஷ் சாருக்கு எங்க சீனியர் அண்ணன்களும் என் நண்பர்களும் ஜூனியர் தம்பிகளும் சேர்ந்து ஒரு விழா எடுத்து இருந்தோம்.


எப்போதும் போலான சம்பிரதாயமான விழாவாக இல்லாம எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என ஆரம்பித்தார் கணேஷ் அண்ணா .


விட்டல் சார், மற்றும் பழைய மாணவர்கள் நரசிம்மன் மற்றும்  லோகேஷ் ஆகியோருக்கு  மவுன அஞ்சலியுடன் விழா துவங்கியது.

கணேஷ் அண்ணா தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இப்ப பிரசாத் லேப்ல டிஐ கலரிஸ்ட். சூப்பராக பேசுனாரு கல்யாணம் ஆனவருன்னு சொல்ல முடியாது இளமை ஊஞ்சல் ஆடும். இவர் பேசுனதை பார்த்த போது தான் தோணுச்சு ஒழுங்க இவர் டிவி காம்பயரிங் போகலாமேன்னு .ம்ம்ம்ம் அது அவர் முடிவு பண்ணனும்.  நான் காலேஜ் படிக்கும் போது பிரசாத் லேப் விசிட்டிங் போனேன். கூப்பிட்டு வச்சு கேள்வி கேட்டே கொன்னுட்டார். நல்ல வேலை இங்க எதுவும் கேள்வி கேட்காமல் விட்டார்.


நிகழ்ச்சியை தொடர்வோம்…

பிரம்மாண்டமான கேக் வெட்டி விழாவினை தொடங்கினோம்..
ஒவ்வொரு மாணவர்களாக வந்து ரமேஷ் சாருக்கும் அவர்களுக்குமான பந்தத்தை பற்றி விளக்கினார்கள். எல்லோரும் சொன்னது ரமேஷ் சார் ரொம்ப நேரம் கிளாஸ் எடுப்பது பற்றியும் , பிலிம் லைக் க பேபி என்றும், போ நாய் போ என கரகர குரலில் சொல்வது பற்றியும் விளக்கி தீர்த்தனர். ( கலாய்ச்சாங்களாமாம் ).


நான் சார்கிட்ட படிக்கும் போது ஒரு புக் வாங்கிட்டு வந்தேன். அப்ப அதை திருப்பி கொடுக்கவே இல்லை. ஆனால் இப்ப தரேன் என்று ஐந்து வருடங்களுக்கு பிறகு கொடுத்தார் ரஞ்சித்.


இண்டஸ்ட்ரியில் ஜெயித்த மாணவர்கள் பலரின் வருகை ஜெயிக்க துடிக்கும் வருங்கால மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. அப்படி வந்து இருந்த அண்ணன்கள் திருமதி செல்வம், தென்றல் ஆகிய தொலைக்காட்சி தொடரின் ஒளிப்பதிவாளர் மாட்ஸ், சங்கர் - தூர்தர்ஷன் கேமராமேன், பாலமுருகன் - 15 வருடங்களுக்கும் மேலாக ஐதராபாத் பிரசாத் லேபில் கிரேடர், தற்சமயம் ஜெமினி டி. கலரிஸ்ட், சுப்புராம்ஜெமினி லேப்பிப் கிரேடர். அழகிய மணவாளன் ஆயுள் ரேகை, தேநீர்விடுதி ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் ஆகியோரின்  வருகை விழாவினை வேறொரு தளத்துக்கு எடுத்து சென்று சிறப்பித்தது.


மாணவர்கள் ரமேஷ் சார் பற்றி பேசியதை விட ஆசிரியர்கள் பேசியது தான் ஹைலைட் ஆஃப் த ஃபங்சன். சீனு சார் என எங்களால் செல்லமாக அழைக்கப்படுன் சீனிவாசன் சார் அவர்கள் ரமேஷ் சாரோட எம்ஏ படித்தது பற்றி சொன்னார்.
விழா நாடை பெற்ற இடம்
 

எல்லாரும் லாட்ஜ் எடுத்து படித்தார்களாம். திடீரென ரமேஷ் சார் நான் வீட்டுக்கு போறேன்னு கிளம்பிட்டாருன்னா எல்லாரும் தூங்கிடுவாங்களாம் . போய் திரும்பி கொஞ்ச நேரத்துல ரமேஷ் சார் திரும்பி வந்தாராம் என்னப்பான்னு கேட்டதற்கு எங்க வீட்ல கரண்ட் இல்ல அதான் வந்துட்டேன் என்றாராம். அந்த அளவுக்கு படிப்பின் மீது ஆர்வமானவர்.  எக்ஸாம் ஹாலில் சின்சியராக படித்ததை எழுதியது ரமேஷ் சார் மட்டும் தானாம் மற்ற எல்லாரும் பிட் அடித்தார்களாம். சுவாரசியமான தகவல் தான். திடீரென பாணா காத்தாடி இயக்குனர் பத்ரி சார் வந்து இருந்தார். ரமேஷ் சாரின் பழைய நண்பர் ஃபிலிம் சென்ட்டரில் உடன் வேலை பார்த்த ஜெயக்குமார் சார் வந்து இருந்தார்.


ஐதராபாத் டெலிசினி கலரிஸ்ட்டாக உள்ள s.k. பாபு நினைவுப்பரிசு அனுப்பி இருந்தார்.

குதிரை - தங்க செயின் நினைவு பரிசாய்
மாணவர்கள் சார்பாக ஓடுவது போல உள்ள குதிரை நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. சார் எப்போதும் சினிமாவில் ஓடிக்கிட்டே இருக்க வேண்டும் என்பதன் அர்த்தத்தை தான் அது குறிப்பதாக சொல்லி கொடுத்தோம்.

பிலிமில் இருந்து வெள்ளி எடுக்கலாம்னு சொல்லிக்கொடுத்தவருக்கு தங்கத்தினால் ஒரு செயின் நினைவுப்பரிசாக அணியப்பட்டது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குன அண்ணன் கணேஷ் ஆங்காங்கே பஞ்ச் பலவற்றை அள்ளி தெளித்தார்.

ஆசிரியராக இல்லாமல் இருந்தால் சைக்கார்டிஸ்டாக போய் இருப்பார் சார் அந்த அளவுக்கு மனித மனங்களை உணர்ந்தவர் .

குருவுக்கே உதாரணமாக துரோணச்சாரியாரை தான் சொல்வாங்க ஆனால் அந்த துரோணரே இப்போ  இருந்து இருந்தால் உங்களிடம் பாடம் படிக்கலாம்ன்னு ஆசைப்பட்டு இருப்பார்.

தோற்றம், கம்பீரம், எளிமை, போன்றவற்றில் காமராசருடன் ஒத்து போறிங்கன்னு சாரோட தலையை குறி வைத்து பேசினார்.

உலகமே சச்சினின் 100வது சதத்தை எதிர்பார்க்கிறது ( இப்பதான் அடிச்சு புட்டாரே நூறாவது 100 ) அதை அவர் நிறைவேற்றி விட்டார். .
ஆனால் நாங்கள் உங்களுடைய 100 வது பிறந்தநாளை இதேபோல் சிறப்பாக கொண்டாடவேண்டும் என எதிர்பார்க்கிறோம். நிறைவேற்றுங்க சார்..

சொல்லிகொடுத்த புத்தகங்கள்

எக்ஸ்போசர் புக் படிக்க சொன்னீங்க - கேரியர்க்கு எக்ஸ்போசர் கிடைத்தது.
டாமினிக் கேஸ் புக் படிக்க சொன்னீங்க - எங்களை யாரும் டாமினேட் பண்ணமுடியல.

பேசிக் போட்டோகிராபி புக் படிக்க சொன்னீங்க - எங்க பேஸ்மெண்ட் ஸ்ட்ராங் ஆச்சு.

போட்டோகிராஃபி தியரி ஃபார் மோஷன் பிக்சர் கேமரமேன் புக் படிக்க சொன்னீங்க  - கேமராமேன்களிடம் போட்டோகிராஃபி பற்றி தியரியா பேச முடிஞ்சது.
அனைத்து மாணவர்களுடன்

கலர்-ன்னா என்னன்னு சொல்லி கொடுத்தீங்க- இன்னைக்கு கலரிஸ்ட்டா இருக்கேன்.

கடைசி வரை  என்னை பேச கூப்பிடவே இல்லை. கடைசியாக கவிஞர் தாஸ் என்றார். என் இந்த கொலை வெறி என மனசுக்குள்ள நினைத்துகொண்டு ஒரே விசயத்தை தான் சொன்னேன் கிராமத்துல இருந்து சென்னை வந்த ஒரு பையனுக்கு சீட் கொடுத்திங்க சார் உங்க பேரை காப்பாத்துவேன் என்று சிம்பிளாக முடித்தேன்.

முத்து அண்ணா நன்றியுரையில் குறிப்பிட்டது


விழா எங்கு நடத்தலாம் என்று பல யோசனை. இறுதியில் கோடம்பாக்கத்தில் நடத்த முடிவு செய்தோம். ஏன்னா
நாம் தரமணியில் இருந்து வந்து கோடம்பாக்கத்தில்தான் வெற்றிபெற்றவர்கள் என்று பலத்த கர ஒலியில் விழா முடிந்தது.

விழா நாயகன் ரமேஷ் சார் பேசியது :

இனிமேல் தினமும் காலையில் எட்டு மணிக்கு எங்க கிளம்புறதுன்னு 

இந்த புண்ணியரை திரைப்படக்கல்லூரிக்கு தத்து கொடுத்த  அவரின் இணையருடன்
தான் தெரியல. இந்த விழாவையும் ஏற்பாடு செய்த உங்களையும் நான் என்றென்றும் மறக்க மாட்டேன். மேலும் படப்பதனிடல் துறையில் உள்ள அனைவரையும் பற்றி தன் மனதில் உள்ளதை கொட்டி தீர்த்தார்.
பேச வார்த்தைகள் இல்லாமல் முடித்தார்.

மதிய உணவு மகத்தாய் உள்ளே போனது…


விழாவுக்கு தற்போதைய முதல்வர் மரியாதைக்குரிய எங்கள் அமைதியின் சிகரம் ஸ்ரீதர் சார் இன்னும் பலர் வருகை புரிந்து சிறப்பித்து இருந்தனர்.

மாணவர்கள் எல்லாரும் கொஞ்ச நேரம் கிளாஸ் எடுங்க சார் என்று கேட்ட போது மறுத்த அவர் கேள்வி கேட்க ஆரம்பித்தார். தொழில்நுட்பத்தில் ஆரம்பித்து எங்கெங்கோ போய் நின்றது.

முடித்துக்கொள்ளலாமே என யாரோ கத்தியதை எல்லாரும் ஏற்றுக்கொண்டதை போல கலைந்து சென்றோம்.

ரமேஷ் சார் கனத்த மனத்துடன் வீடு சென்றார். நாங்கள் பிரிய முடியாமல் பிரிந்து வந்தோம்…

 -தாஸ்..,






Friday, 9 March 2012

குழந்தைகள் கலைக்களஞ்சியம் குறுந்தகடு வெளியீடு


சென்னை மாநிலக் கல்வி அமைச்சராகத் திகழ்ந்த திரு தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களால் அனைத்து அறிவுத்துறைகளிலும் தமிழ் வளர்ச்சி காணவேண்டும் என்ற தலையாயநோக்கத்தோடு 1946-ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சிக் கழகம்தோற்றுவிக்கப்பெற்றது.   இந்திய மொ ழிகளில் 10 தொகுதிகளைக்கொண்ட விரிவான கலைக் களஞ்சியம் தமிழில் தான் முதன்முதலாக வந்தது என்பது பெருமைப்படத்தக்க செய்தியாகும்.இதைத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஓர் ஒப்பு உயர்வற்றஆக்கபூர்வமான தமிழ்த் தொண்டாகக் கருதலாம்இவற்றிற்கு 2240அறிஞர்கள் பங்களிப்புச் செய்திருக்கின்றனர்.

'கலைக்களஞ்சியம்என்னும் பொருள் (Encylopedia) பொதிந்தசொல்லைத் தமிழகத்திற்கு வழங்கிய பெருமையும் தமிழ் வளர்ச்சிக்கழகத்திற்கே உரியதாகும்.  இச்சொல் தமிழ் வழக்கிலும் வேரூன்றிநிலைத்துவிட்டது.

பொதுக் கலைக்களஞ்சியத்தைத் தமிழில் முதல் பதிப்பாகத் திறம்படவெளியிட்டுச் சிறந்த அனுபவம் பெற்ற தமிழ் வளர்ச்சிக் கழகம், 1968-இல் குழந்தைகளுக்கெனத் தனியே அழகிய வண்ணப்படங்களுடனும் விளக்கப்படங்களுடனும் கூடிய சிறந்ததொருகுழந்தைகள் கலைக்களஞ்சியத்தைப் பத்துத் தொகுதிகளில் முதல்பதிப்பாக வெளியிட்டது. 1968-இல் தொடங்கப்பட்ட குழந்தைகள்கலைக் களஞ்சிய முதல் பதிப்புப் பணி மத்தியமாநில அரசுகளின்நிதியுதவியுடன் 1976-இல் திறம்பட நிறைவேறியதுகுழந்தைகள்கலைக் களஞ்சியம் முதற் பதிப்பிற்கும் திரு.பெரியசாமித்தூரன் அவர்களே தலைமைப் பதிப்பாசிரியராகவிளங்கினார்குழந்தைகள் கலைக்களஞ்சியம் முதல் பதிப்பின்மாதிரிப் படிவம் ஒன்றை 22-03-1965-இல் தமிழ் வளர்ச்சிக் கழகம்வெளியிட்டது.



குழந்தைகள் கலைக்களஞ்சிய சிறப்புகள்:

·              சிறுவர்களுக்குப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டி அவர்தம்பொது அறிவையும்அறிவியல் அறிவையும் வளர்க்கும்நேர்த்தியான அறிவுக் கருவூலம்.

·              இக்களஞ்சியம் பல்வேறு அழகிய வண்ணப்படங்களும்,விளக்கப் படங்களும் நிறைந்து சிறந்து விளங்குவது.

·              இதன் உள்ளடக்கம் எளியஇனிய தமிழ் நடையில்,பல்துறை அறிவு பற்றிய சிறுசிறு கட்டுரைகளாக அமைந்துள்ளது.

·              அகரவரிசையில் அமைந்த 10 தொகுதிகளைக் கொண்டது;ஒவ்வொரு தொகுதியும் 96 பக்கங்களைக் கொண்டது.

·              பெயர் அளவில் குழந்தைகள் கலைக் களஞ்சியம்என்றாலும் பள்ளி-கல்லூரி மாணவர்கள்பொதுமக்கள் மற்றும்யாவரும் படித்துப் பயன்பெறும் வகையில் தரம்மிக்கதாகஉருவாக்கப்பட்டுள்ளது.

·              எல்லாத் துறைகளிலும் மக்களுக்குத் தெரிய வேண்டியஇன்றியமையாப் பொருள் பற்றிய கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

·              இந்திய மொழிகளில் முதலில் தோன்றிய சிறப்பானதொருகுழந்தைகள் கலைக் களஞ்சியம் இதுவேயாகும்.

·              எல்லா நூலகங்களிலும் இன்றியமையாது இடம்பெறவேண்டியது இக்களஞ்சியம்.              இக்களஞ்சியத்தின் ஒவ்வொருதொகுதியும் ஓர் அறிவுக் கருவூலம்.

குழந்தைகள் கலைக்களஞ்சியம் மிகவும் நேர்த்தியாகஅமைந்திருந்ததால் அதற்குப் பொதுமக்களிடமும்மாணவர்களிடமும் சீரிய வரவேற்பிருந்ததுஅன்றையதமிழ்நாடுஅரசு குழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் திருந்தியஇரண்டாம் பதிப்பின் மறு பதிப்பைத் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் வழி வெளியிட்டு, 10,000 படிகள்  சிறுவர்கரும்பலகைத் திட்டத்திற்கும்முதியோர் கல்வித் திட்டத்திற்கும் பயன்படுத்த ஏற்பாடு செய்தது.  இதை தொடர்ந்து இரு பதிப்புகள் வந்தன.

குழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் பத்துத்தொகுதிகளின் உள்ளடக்க விவரங்கள்பின்வருமாறு:

தொகுதி ஒன்று:
 முதல் இந்தியா வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1982
பதிப்பாசிரியர்திரு...பெரியசாமித்தூரன்

தொகுதி இரண்டு:
இந்து மதம் முதல் ஔவையார் வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1983
பதிப்பாசிரியர்திரு...பெரியசாமித்தூரன்

தொகுதி மூன்று:
கக்கரி முதல் கும்மி கோட்டம் வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1984
பதிப்பாசிரியர்:திரு...பெரியசாமித்தூரன்

தொகுதி நான்கு:
குயில் முதல் டார்ஜீலிங் வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1985
பதிப்பாசிரியர்திரு...பெரியசாமித்தூரன்

தொகுதி ஐந்து:
டால்ட்டன் முதல் நாணயங்கள் வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1986
பதிப்பாசிரியர்திரு...பெரியசாமித்தூரன்

தொகுதி ஆறு:
நாய் முதல் பிரிட்டன் வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1986
பதிப்பாசிரியர்திரு...பெரியசாமித்தூரன்

தொகுதி ஏழு:
பிரீஸ்ட்லி ஜோசப் முதல் மலை ஏற்றம் வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1987
பதிப்பாசிரியர்திரு...பெரியசாமித்தூரன்

தொகுதி எட்டு:
மழை முதல் லியனார்டோ-டா-வீன்சி வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1987
பதிப்பாசிரியர்திரு...பெரியசாமித்தூரன்

தொகுதி ஒன்பது:
லிவிங்ஸ்ட்டன்டேவிட் முதல் வைரஸ் வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1988
பதிப்பாசிரியர்திரு...பெரியசாமித்தூரன்

தொகுதி பத்து:
வௌவால் முதல் ஹௌரா வரை
திருந்திய இரண்டாம் பதிப்பு 1988
பதிப்பாசிரியர்திரு...பெரியசாமித்தூரன்

தற்பொழுது தமிழ் வளர்ச்சிக் கழகம்குழந்தைகள்கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளையும் பொதுமக்கள் அனைவரும்வாங்கிப் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் குறுந்தகடு(டிவிடிவடிவில் வெளியிட்டுள்ளதுஇந்த குறுந்தகட்டின் அதிகாரபூர்வ விற்பனையாளராக சாஃப்ப்டவியூ பதிப்பகத்தை தமிழ் வளர்ச்சிக்கழகம் நியமித்துள்ளது. குறுந்தகட்டின் விலை ரூ.300/=. கிடைக்குமிடம்; சாஃப்ப்டவியூ பதிப்பகம், 118.நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை-29 தொலைபேசி : 23741053, 9940666188
Related Posts Plugin for WordPress, Blogger...