Monday, 30 May 2011

விழுந்தது பலத்த அடி வீழ்ந்தது காங்கிரஸ்


நடந்து முடிந்த தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ்தங்கபாலுபடுதோல்வி அடைந்துள்ளது. காங்கிரசின் முக்கிய தலைவர்களாகிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, திருநாவுக்கரசு, வசந்தகுமார் ஆகியோர் படுதோல்வி அடைந்துள்ளனர். இந்த படுதோல்வியின் காரணமாக அவமானம் அடைந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை தங்கபாலு ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த உள் கட்சி பூசலால் கட்சியின் முக்கிய உறுப்பினர்களான கராத்தே தியாகராஜன், செங்கை செல்லப்பா, எஸ்.வி.சேகர் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தங்கபாலு நீக்கினார். இதனால் அதிருப்தி அடைந்த ஒரு பிரிவு தங்கபாலுவுக்கு எதிராக இந்த தேர்தலில் வேலை தங்கபாலுசெய்ய கள்ம் இறங்கியது .தேர்தலின் போதே தங்கபாலு கொடும்பாவி எரித்தும் , உருவபடங்களுக்கு செருப்பு மாலை போட்டும் எதிர்ப்பை தெரிவித்துவந்தனர்.
இந்த தேர்தலில் காங்கிரசஸின் கோஷ்டி பூசலும் அவர்களை பலவீனமாக்கியுள்ளது. வாழப்பாடி ராமமூர்த்தி ,ஈவிகேஎஸ் போன்ற கோஷ்டியினருக்கு சீட்டுகள் அளிக்கப்படவில்லை. ராகுல்காந்தியின் நேரடி ஆசிபெற்ற வேட்பாளர்கள் பலரும் இந்த தேர்தலில் மண்ணை கவ்வினர்.
மயிலாப்பூர் தொகுதியில் தன் மனைவியை வேட்பாளராக நிறுத்தினார் . வேட்புமனு தாக்கலில் குழப்பத்தை ஏற்படுத்தி அவரே வேட்பாளராகவும் மாறினார். இதனால் அதிகப்படியான அதிருப்தியாளர்கள் கட்சிக்குள் உருவானார்கள். இந்த தேர்தலின் படு தோல்விக்கு இந்த உள் கட்சி பூசல் முக்கிய காரணமாகிறது .
திமுக உடனான கூட்டணி பேச்சு வார்த்தையின் போது 63 தொகுதி பங்கீட்டில்தங்கபாலுஏற்பட்ட இழுபறி, மற்ற கூட்டணி கட்சி தலைவர்களை கோபத்தில் ஆட்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஒத்துழைப்பு இல்லாமல் செய்தது.
ஈழத்தமிழர் பிரச்சனையில் காங்கிரசின் போக்கு ஒருதலைபட்சமாகவே இருந்ததால் லட்சக்கணக்கான மக்கள் மரணம் அடைந்தனர். இது தமிழ் உணர்வாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. காங்கிரசுக்கு எதிரான நாம் தமிழர் இயக்க தலைவர் சீமானின் அனல் பறக்கும் பிரச்சாரம் Thanga Baluமக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தி காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க வைத்துள்ளது.
தமிழகத்தில் 63 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. புதுவையில் போட்டியிட்ட இடங்களில் வெறும் 7 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. மத்தியில் ஆட்சி நடத்துகிற காங்கிரஸ் தமிழக ஆட்சியில் பங்கு பெற்று விடலாம் என கனவு கோட்டை கட்டி கொண்டு இருந்தது. ஆனால் அதிகபடியான சீட்டை பிடிக்கமுடியாமலேயே கனவு கோட்டை எல்லாம் சிதைந்து போனது... 
-தாஸ்

ஐ.நா நிபுணர் குழு அறிக்கை: அரசியலெனும் நெருப்பாற்றில் விடுதலைப் போராட்டம்

இலங்கை தமிழர் படுகொலை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை குறித்தLoyola collegeகருத்தரங்கம் சென்னை லயோலா கல்லூரி கல்வியியல் அரங்கில் 07.05.2011 அன்று நடந்தது. அதில் டாக்டர்.பால் நியூமேன் பேசியதாவது...
மனித இனத்திற்கு எதிராக ஒரு போர் இலங்கையில் நடத்தப்பட்டது. போர் முடிந்த நிலையில் அதைப்பற்றி விசாரிக்க, இலங்கையின் தற்போதைய சூழலை அறிய மூன்று பேர் கொண்ட குழு ஐ.நா சபையால் அனுப்பப்பட்டது.
மர்ஃசூகி தருஸ்மேன்
ஸ்டீஃபன் ரேட்னர்
யாஸ்மின் சூக்
இம்மூவரும் அக்குழுவின் உறுப்பினர்கள். இவர்கள் 16.09.2010முதல்- 31.03.2011வரை நடத்திய ஆய்வில் 122 பக்கங்கள் கொண்ட ஆய்வு அறிக்கையை ஐ.நா சபையில் ஒப்படைத்தனர்.
ஆய்வு அறிக்கையின் சுருக்கம் பின்வருமாறு ;
  • இந்த போர் எந்த வித தடயங்கள் இன்றி செய்து முடிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச நாடுகளால் தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • போர் விதிமுறைகளை மீறி எந்த வித முன் அறிவிப்புமின்றி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
  • இலங்கை அரசு 70,000 மக்கள் இறந்ததாக தகவல் தெரிவிக்கிறது. ஆனால் 1,50,000 மக்கள் இறந்துள்ளனர்.
  • பி டி எ, இ ஆர் எ எனும் இரண்டு சட்டங்கள் பின்பற்றப்பட்டது.
  • அரசுக்கு எதிராக செயல்படுவோருக்கு விசாரனையின்றி தண்டனை.
  • ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த 300 உறுப்பினர்களுக்கு போரில் எல்லா நடவடிக்கைகளிலும் தலையிட உரிமை இருந்தது.
  • 66 மனித உரிமை பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
  • அனைத்து என்ஜிஓ அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது என வழுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
  • உணவு ஒரு முக்கிய ஆயுதமாக இப்போரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • எந்தவித அடிப்படையான மருத்துவ உபகரணங்களும் இல்லாமல் மருத்துவ முகாம்கள் இருந்திருக்கிறது.
  • அனெஸ் தெசியா மருந்து கொடுக்காமலேயே ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது.
  • மனித உரிமை பாதுகாப்பு அதிகாரிகளை விடுதலை புலிகள் மதித்த அளவிற்கு ஒரு துளி கூட இலங்கை அரசு மதிக்கவில்லை.
இவ்வாறான தகவல்களை டாகுமென்டரி, இன்டர்வியூ, வீடியோ, இணையதள படங்களுடன் இணைத்து ஐ.நா. நிபுணர் குழு கொடுத்துள்ளது. 

-தாஸ்..,

Tuesday, 17 May 2011

குறும்படங்கள் பற்றிய பார்வை தவறானது...


ச்சி ஒரு "சார்ட்பிலிம்" பண்ணனும்டா. சமீபமாக நான் அடிக்கடி கேட்கும் வார்த்தை.

(ஆமா "சார்ட்பிலிம்"ன்னா என்ன என்று தெரியாமல் கேள்வி கேட்கும் அறிவு ஜீவிகளுக்காக- குறும்படம் என்பதை தான் ஆங்கிலத்தில் சார்ட்பிலிம் என்கிறோம் . உங்களால் சொல்ல முடிகிற ஒரு விசயத்தை அழகாக உங்களோட செலவுலேயே குட்டியா 30 நிமிடத்துக்குள்ள சொல்றது தான் "சார்ட்பிலிம்". மேலும் விரிவாக சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்காது எனும் நம்பிக்கையில் தொடர்கிறேன் )

ஒரு இயக்குனரிடம் சினிமாவை பற்றி ஒன்னுமே தெரியாமல் உதவியாளராக சேர்ந்து, அடிமை போல் வேலை செய்து சினிமா கற்று கொண்டு தனியாக படம் பண்ணி சாதித்தவர்கள் இங்கே அதிகம். அவர்கள் பட்ட கஸ்டங்கள் இப்போதைய தலைமுறை உதவி இயக்குனர்களுக்கு குறைவு தான். ( சுத்தமாக இல்லை என்று சொல்ல ஆசை தான் .....ம்ம்ம்ம்ம்ம்....)

தற்போதைய உதவி இயக்குனர்களில் பலர் தங்களின் சொந்த முயற்சியிலேயே குறும்படங்கள் எடுத்துவிடுகின்றனர். அதனால், ஒரளவுக்கு சினிமாவை பற்றி ஏற்கனவே தெரிந்து வைத்து இருக்கிறான் என இயக்குனர்களால் மதிக்கபடுகின்றனர்.

இதெல்லாம் குறும்படங்களால் சாத்தியமானது. ஆனால் சினிமாவுக்குள் நுழைய ஒரு விசிட்டிங்கார்டு மாதிரி தான் பலர் குறும்படங்களை பயன்படுத்துகின்றனர். இந்த பார்வை தவறானது.

ஏனெனில், சர்வதேச அளவில் குறும்படங்கள் அங்கிகரிக்கப்பட்டு வருகிறது.
கேன்ஸ், டொரண்டோ போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் குறும்படங்கள் திரையிட்டு சிறந்த படங்களுக்கு பரிசு அளிக்கப்படுகிறது.

அதேபோல இந்தியாவில் நடக்கும் கோவா, கேரளா போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட்டு சிறந்த படங்களுக்கு பரிசு அளிக்கப்படுகிறது.
 எனவே குறும்படத்தை ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்திலேயே பார்க்காமல் பார்வையை மாற்றுங்கள் , பட விழாக்களுக்கு அனுப்புங்கள் , பரிசுகளை வெல்லுங்கள் ...

உதாரணத்துக்கு ...

திரைப்படக்கல்லுரி மாணவர் அண்ணன் முரளிமனோகர் எடுத்த கர்ணமோட்சம் குறும்படம் சென்ற இடங்களில் எல்லாம் வெற்றி வாகை சூடியது . பல லட்சங்களை அள்ளியது. தேசிய விருது பெற்றது .

அண்ணன் பிரின்ஸ் என்னாரசு பெரியார் இயக்கிய திற குறும்படம் பரிசு பல பெற்று  பாராட்டு மழையில் நனைந்து கொண்டு இருக்கிறது.

இந்த வரிசையில்  அச்சுப்பிழை,  இன்னும் நீளும் எனக்கு தான் ஞாபகம் வரல ...

( நீங்க என்ன குறும்படம் எடுத்திங்க என்று கேக்க முனைபவர்களுக்கு  புன்னகையை பதிலாக தருகிறேன் . (  இதெல்லாம் ஒரு பொழப்பு ).......

-தாஸ்..,

Monday, 16 May 2011

அரசியல் ஆட்சி மாற்றம்

தமிழக அரசு மாற்றத்தால் தமிழ்சினிமாவில் உடனடி மாற்றங்கள் நடந்துள்ளது .
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ரஜினாமா செய்துள்ளார் ராமநாராயணன்.
பெப்சி தலைவர் பதவியை ரஜினாமா செய்துள்ளார் வி.சி. குகநாதன்.
இன்னும் சில நிருவாகிகள் ரஜினாமா செய்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், திரைப்படங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி தயாரிப்பாளரின் பெயரே தெரியாமல்
விநியோக நிறுவனமே தயாரித்தது போல விளம்பரம் செய்து வந்தது.
இப்படி விநியோகம் செய்து வந்த சில நிறுவனங்களின் ஆதிக்கம் இனி கண்டிப்பாக இருக்காது .
விநியோகம் செய்தது மட்டும் அல்லாமல் திரையரங்கங்களின் உரிமையையும் குத்தகை முறை மூலம் பெற்று நல்ல படங்கள் சில வெளியிடவே முடியாமல் திணறி வெளிவந்தது.
இப்படிப்பட்ட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களின் ஆதிக்கம் இனி குறையும்..
புதிதாய் ஏதேனும் தயாரிப்பு நிறுவனங்கள் முளைத்தால், அல்லது ஏற்கனவே இருந்த பழைய நிறுவனங்கள் தலைதூக்கும் பட்சத்தில்
அவை அடிமாட்டு வேலை எல்லாம் செய்யாமல் இருந்தால் சினிமாவின் நிலை கண்டிப்பாக மாறும்...
..தாஸ்..
Related Posts Plugin for WordPress, Blogger...