Friday, 14 October 2011

தங்கச்சி


தங்கை அவ்ளோ அழகான ஒரு உறவு, நம்மை விட சின்ன வயதாக  இருந்து நம் சொல்லுக்கு கட்டுபடுகிற ’தேவதை’ . இப்படி அடுக்கிகிட்டே போகாலாம்...
விசயத்துக்கு வரேன்....

எனக்கு தங்கச்சினா அவ்ளோ பிடிக்கும் அதுக்கு காரணமே என் ரேணு தான். என் மொத்த பாசத்தையும் குத்தகைக்கு எடுத்த ம்ம்ம்ம்ம் இல்ல மொத்த பாசத்தையும் விலைக்கு வாங்கிய பொண்ணு...

எங்கம்மா அப்பாவுக்கு நான் தான் கடைசி பிள்ளை......

அப்புறம் எப்படி ரேணுன்னு யோசிக்காம அடுத்த வரியை படிக்க ஆரம்பிச்சுட்டிங்களே, நல்ல விசயம் தான்...

எங்க சித்தி பொண்ணுங்க...

இப்படி பிரிச்சு சொல்றதே எனக்கு பிடிக்காது. பிடிக்காவிட்டாலும் இந்த பதிவில் சொல்ல தோணுச்சு, செய்துட்டேன்...

என்னோட சித்தி அம்மாவோட கூட பிறந்த தங்கை என்பதால் நான் சின்ன வயசுலயே உரிமையா எங்கம்மாகிட்ட சொன்னேனாம். அம்மா தங்கச்சிய நம்ம வீட்டுக்கு தூக்கிட்டு போய்டுவோம்னு... என் ஆசைக்கு தடையா இல்லாத எங்கம்மா ரேணுவை தாய் பால் குடிப்பதை மறந்ததும் எங்க வீட்டுக்கு தூக்கிட்டு வந்துட்டாங்க.

சின்ன பிள்ளையில இருந்து எங்க வீட்ல தான் வளருது ரேணு.. நானா சொல்லாத வரைக்கும் யாருக்கும் தெரியாது ரேணு உடன் பிறந்த சகோதரி இல்லைனு... அந்த பாகுபாட்டை நாங்க ரெண்டு பேருமே பார்த்தது இல்லை. இங்கே சொல்ல வேண்டிய சூழல்...
நானும் என் ரேணுவும் நல்ல நண்பர்கள். உலகில் நல்ல தோழி கிடைக்கிறது கஸ்டம். அந்த தோழி கடைசிவரைக்கும் கூட இருக்கிறது அதைவிட கஸ்டம். எனக்கு இந்த பிரச்சனையே இல்லை. என் முதல் தோழி என் தங்கை என்பதால்...

நாங்க இருவரும் சும்மா விளையாட்டுக்கு கூட சண்டை போட்டுக்க மாட்டோம். பக்கத்து வீட்டு பசங்க அம்மாக்களுக்கு நாங்க தான் எடுத்துக்காட்டு . ரேணுவை பாரு அவங்க அண்ணன் கூட சண்டை போடாம இருக்கு, நீங்களும் தான் இருக்கிங்களே என்று அவங்க சொல்லும் போது எங்கம்மா சொல்வாங்க என் பிள்ளைகளுக்கு திஸ்டி சுத்தி போடனும்னு...

என் ஸ்கூல் டேஸ்ல ரேணு என்னோட ரெண்டு வருடம் ஜுனியர். ஒரே ஸ்கூல். நான் ஐந்தாவது படிக்கும் போது ரேணு மூணாவது.. அப்புறம் ரெண்டு பேரும் உயர்கல்விக்காக வெவ்வேறு பள்ளி. ஆனால், பக்கத்துல பக்கத்துல.. எனக்கு ஸ்கூல் முதலில் விட்டா நான் வெயிட் பண்ணுவேன். ரேணுவுக்கு விட்டா அது காத்து இருக்கும்...

கல்லூரி காலம் வந்து தான் எங்களை பிரித்தது. காலேஜ் படிக்க சென்னை வந்துட்டேன். நான் ரொம்ப மிஸ் பண்ணுனேன் ரேணுவை.. அதுவும் தான். ஏனோ, நாங்கள் பண்டைய கால சகோதர சகோதரிகள் இல்லயே, இந்த காலத்துல தொடர்புக்கு தான் இருக்கவே இருக்கு செல்போன். ரெண்டு பேரும் நைட்ல பேசுவோம் அவ்ளோ நேரம்.. எங்க வீட்ல ரேணுவை திட்டுற சத்தம் கேட்கும். ரெண்டு பேரும் அப்படி என்ன தான் பேசுவிங்களோனு தெரியல...

கல்லூரி கால சீனியர்களை அக்கானு கூப்பிட்டு இருக்கேன் என்னை அண்ணானு கூப்பிட என்னமோ தெரியல என் ஜுனியர் யாருமே பெண்கள் இல்லை. அது என்னமோ எனக்கு பெருசா தோணல..

இப்படி ஓடிக்கிட்டு இருந்தப்ப அண்ணானு ஒரு பொண்ணு பாசமா கூப்பிட்டாங்க. மரியாதை நிமித்தம் தான். அப்புறம் என் நம்பரை என் நண்பரிடம் வாங்கி எனக்கு மெசேஜ். தெரியாத நம்பரிலிருந்து மெசேஜ் வந்தா யார் நீங்கன்னு கேட்பதை தான் நானும் செய்தேன். பெயர் சொல்லாம சேட்டிங் நடந்தது. என்னை பற்றிய எல்லா விவரமும் சொன்னதால் அவங்க அனுப்புன மெசேஜ்க்கு எல்லாம் பதிலளிக்கிறேன் யாருன்னே தெரியாம அப்புறம் கண்டுபிடுச்சுட்டேன் இவங்க தான்னு...

அப்புறம் எப்போதாவது ஒரு கால், எப்போதுமே மெசேஜ்.. இப்படி போனது எங்கள் உறவு. அவங்க பிறந்த நாளின் போது நான் அவங்களுக்கு தெரியாம கேக் வாங்கிட்டு வந்து வெட்டி கொண்டாடினேன். அப்புறம், ரொம்ப பாசமா ஆகிட்டாங்க...

என் பிறந்த நாளுக்கு எனக்கு ஒரு சட்டை வாங்கி பரிசளிப்பதாக சரவணா ஸ்டோர் போனோம். அவங்களுக்கு செலவு அதிகம் ஆகிட கூடாதுன்னு கம்மியான விலையில் ஒரு சட்டையை வாங்கி கொண்டேன். அது அவங்களுக்கும் தெரியும்...

இந்த சமயத்தில் சென்னை தங்கை காதல் நோயால் பாதிக்கப்பட்டாங்க, தேர்ந்தெடுத்த காதலன் சரியில்லை. அவன் நேராகவே சொல்லிட்டான் உன்னை பிடிக்கலைனு. இவங்க தலைவனை நினைத்து உருகும் தலைவியைபோல் உருகுனாங்க...

இவங்களோட தோழிகள் எல்லாரும் இவங்களை கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க, இதுல ஒரு தோழி ரொம்ப இவங்க மேல அக்கறையா இருக்கோம்ற பேருல பிள்ளைய போட்டு பாடா படுத்தி 
அட்வைஸ்ன்ற பேருல கொன்னுருக்கு...

இந்த சமயத்துல ஒரே ஆறுதல் நான் மட்டும் தான். தினமும் போன் போட்டு ஒரே அழுகையா இருக்கும். எவ்ளோ வேலையா இருந்தாலும் போன் அட்டன் பண்ணி ஆறுதல் சொல்வேன்...

நைட் நேரத்துல ரேணுகிட்ட பேசுற நேரத்தை விட இவங்ககிட்ட பேசுற நேரம் அதிகமானது. ஆறுதல் சொல்லாவிட்டாலும் புலம்பலை கேட்கவாவது ஒரு துணை வேணும். அப்படி தான் நான் இருந்தேன்...
சமாதானம் பண்ணுவேன், ஒரு நாள் வெளியே கூட்டிகிட்டு போய் நிறைய பேசி ஒட்டு மொத்த பிரச்சனைகளுக்கும் தீர்வு வருகிற மாதிரி பேசினேன். அவனுக்கு உன்னை கட்டிக்க குடுத்து வைக்கலடா விட்ருனு சொல்லி அந்த இடத்துல இருந்த சின்ன பசங்க விளையாடுவதை எல்லாம் பார்த்து சிரித்து ஒரு வழியா கொஞ்சம் பழைய நிலைக்கு மாறிட்டாங்க...
அவங்களின் இழந்த சந்தோசத்தை மீட்டு கொடுத்தாலோ என்னவோ என் மேல் ரொம்ப பாசமாகிட்டாங்க. இவங்க கூட வேலை பாக்குற எல்லாரும் என்னை அண்ணானு கூப்பிடுகிற தங்கை ஆகி போனாங்க. மகிழ்ச்சி தான்..

பெயரையே சொல்ல மறந்துட்டனே...

சந்தியா இது தான் அவங்க பேரு நான் செல்லமா புஜ்ஜினும் ஊலமூக்கினும் கூப்பிடுவேன். ( அழுகும் போது மூக்குல தண்ணி வரும் இதை தான் தென்மாவட்ட வட்டார வழக்குல  ஊலமூக்கினு சொல்வாங்க) இப்படி ரெண்டு மாதிரியா கூப்பிடுறதும் அவங்களுக்கு பிடிக்கும்.

புஜ்ஜி- அவங்க அழுகையை நிறுத்த மட்டும் தான் என்னோட வார்த்தையை கேட்டாங்க, மற்றபடி எது சொன்னாலும் அதை நடைமுறைப்படுத்துற மாதிரி கேட்டுவிட்டு அதுக்கு எதிர்புறமாக தான் நடப்பாங்க..

சில எடுத்துக்காட்டு :-

சென்னையில இருக்குற எங்க மாமாவை பார்க்க கூட்டிகிட்டு போனேன், அவர் ரொம்ப மாடர்ன் பொண்ணுங்களை பார்த்தாலே பிடிக்காது. அவரை பார்க்க ஜீன்ஸ் போட்டுகிட்டு வராதிங்கன்னு சொன்னேன். அதை தான் போட்டுகிட்டு வந்தாங்க, ஆசையா செயின் வாங்கி குடுத்தேன் சும்மா கொஞ்ச நேரம் கூட அதை போடல, ஏன்னா மாடர்ன் டிரெஸ்ல இதை போட கூடாதுன்னு சட்டம் போட்டதை போல் சொன்னாங்க...

புஜ்ஜி வேலை பாக்குற ஆபிஸ்ல அவங்களுக்கு மெண்டலி டார்ச்சர் அவங்க தோழி மூலம் ஆனது, அப்ப, நான் சொன்னேன் ஆபிஸ் விட்டு நின்னுடுங்கன்னு... நிக்கல...

ஒரு சமயத்துல ஆபிஸ்ல எதோ சொல்லிட்டாங்க, அங்க இருக்குறவங்க நடந்துக்கிறது சரி இல்லைனு சொன்னாங்க, இருங்க சமாளிக்கலாம்னு சொன்னேன். எங்கிட்ட சொல்லவே இல்லை ஊருக்கு கிளம்பிட்டாங்க...

ஊருல போனப்ப எனக்கு ரொம்ப கஸ்டமா இருந்தது. என்னடா சென்னை தங்கை பிரிஞ்சு போச்சேன்னு.. சரி, ஊருலயே இருங்க பார்த்துக்கலாம்னு நான்  சென்னையில ரேணுவுக்கும், புஜ்ஜிக்கும் வேலை பார்த்து வைத்து இருந்தேன்...

ரேணு வர தாமதம் ஆகும். புஜ்ஜி சென்னை வந்துட்டாங்க, அவங்க வந்ததை சொல்லவே இல்லை, யாரோ சொல்லி அவங்க சென்னை வந்தது தெரிய வருது. ஏன் என்கிட்ட மறைச்சாங்கன்னு தெரியல, நானா எதுவும் சொல்லல, சொன்னா கேட்டுடுவாங்களா என்ன ? ஒரு வாரத்துக்கு பிறகு ஒரு மெசேஜ் நான் சென்னையில் வேலை பாக்குறேன்னு...

நான் எதுவுமே சொல்லல..., பேசனும்னு தோணுச்சுனா போன் போடுவேன், ஒழுங்கா பேச மாட்டாங்க, இப்ப எல்லாம் மெசேஜ் பண்றதும் இல்ல. என் மேல என்ன அவங்களுக்கு கோபம்னும் தெரியல.. அவங்க மேல எனக்கு கோபம் எல்லாம் எதுவும் இல்ல, சின்ன பிள்ளை மாதிரி ஒரு மெச்சூரிட்டி இல்லா பொசசிவ் மனநிலை......

சென்னையில் மறுபடியும் ஒரு தங்கை பிரியமாக இருக்கமாட்டாங்கன்னு சில நாட்களுக்கு முன் டைரியில் எழுதி இருந்தேன். இப்ப அதை அழிச்சுட்டேன்..

என் பிரியமுள்ள ஸ்ரீ....
புதிய தங்கை....

நானும் புஜ்ஜியும் எங்கே போனோமோ அங்க தான் ஸ்ரீ க்கு இப்ப பிறந்த நாள் கொண்டாடினேன். நான் ஸ்ரீ க்கு ஒரு ரூபா கூட செலவு செய்யல, எனக்காக ஸ்ரீ இதுவரை செலவு செய்தது இரண்டு ஆயிரத்தை தாண்டுகிறது...

இந்த தங்கை நான் என்ன சொன்னாலும் ஏன்னு கேக்குறது இல்ல, ஏன்னா, செய்துவிட்டு தான் எதுக்குனா அப்டி சொன்னிங்கன்னு கேட்கும்.  சொல்ல மறந்துட்டேன் என் ஸ்ரீ க்கு 19 வயசுலயே கல்யாணம் ஆகிடுச்சு, இப்ப அழகு தேவதையா ஒரு பெண் குழந்தை. இன்னொரு வகையில பார்த்தா என் தங்கை ஸ்ரீ எனக்கு அத்தை தானே.... அவ்வப்போது அத்தைனு கூப்பிடுவேன். அது ஸ்ரீ க்கு பிடிக்காது. எனக்காக சகிச்சுகிறாங்க. என் ஸ்ரீயோட நண்பர்கள் இப்ப என் அன்பு தம்பி ஆகி போனார்கள். அதுல ஒரு குந்தானி பையன்  இருக்கு. அது மூலமாக தான் ஸ்ரீ எனக்கு பழக்கம். அந்த குந்தானிக்கு நான்னா அம்புட்டு பிரியம்... எனக்கும் தான்...

ஒரு நாள் நான் ஒரு வார்த்தை தப்பா சொன்னதுக்கு ஸ்ரீ ஒரே அழுகை, மறுபடியும் சமாதானம் செய்கிறேன்... 

-தங்கை பிரியன்...,
  

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...