Thursday, 28 July 2011

தோள் சாய்ந்து அழுகை...


உன் தோள் சாய்ந்து அழனும் போல இருக்கு இப்படி ஒரு வரியை எங்கேயாவது கேட்ட மாதிரி இருக்கா.......?                                          


காதல் சார்ந்த திரைப்படங்களில் வரும் வசனம் தான் இது. வருகிற எல்லா படமுமே காதலுக்கு முக்கியத்துவம் தருகிற படம் தானே அப்படின்னு கேள்வி கேட்க தோணும் . கேட்டாதான் நீங்கள் தமிழ் சினிமா அதிகம் பாக்குறிங்கன்னு அர்த்தம்...


இப்ப மேட்டருக்கு வருவோம்...


புதுசா சைனா மாடல் போன் வாங்கியிருக்காரு மணிகண்டன் ,  வாங்குன கையோட மெமரி கார்டு வாங்கி பாட்டெல்லாம்  பதிந்து வைத்து கொண்டார்.


யார் கேமரா போன் வச்சு இருந்தாலும் பாஸ் அந்த சாங்க ப்ளூடூத் வழியா செண்ட் பண்ணுங்களேன்னு தெரியாதவரிடம் கூட கேட்டு விடுவார்.


சைனா மாடல் போன் மற்ற கம்பெனி (நோக்கியா,சாம்சங்,எல்ஜி) போன்களை விட அதிகமா சத்தம் வரக்கூடியது. பாட்டை போட்டு ரோட்டுல போனா ஊருக்கே இலவச பாடல் ஒளிபரப்பு தான் போங்க...


போன் வாங்குனாலும் வாங்குனான் இவன் அலப்பரை தாங்க முடியலப்பா  பக்கத்து வீட்டுகாரர்கள் இவன் காது படவே பேசுனாலும், அதை பெருசாகவே எடுத்துகிறவர் இல்லை மணி...
இப்படி, ப்ளூடூத்ல ஏத்துன ஒரு டயலாக் மணியை எதோ பண்ணியிருக்கு..


உங்ககூட நான் இருக்கனும்,  உங்ககூட சிரிச்சு பேசனும், சண்டை போடனும், உங்க தோள்ள சாஞ்சு அழனும், இன்னைக்கு மாதிரியே எப்போதுமே நான் உங்கமேல பைத்தியமா இருக்கனும். ஐ வாண்ட் டூ மேக் லவ் டூ யூ , இந்த கண்களை நான் பாத்துக்கிட்டே இருக்கனும், அப்புறம் ஒரு நாள் செத்துபோயிடனும்


இந்த வசனத்தை கேட்டதுல இருந்து மணி ஒரு மாதிரி ஆகிட்டார்.
காக்க காக்க படத்துல ஜோதிகா சூர்யாகிட்ட சொல்ற வசனம் தான் இது.


ஏன் நாம பயன்படுத்தகூடாதுன்னு நெனச்ச மணி . இதை மனப்பாடம் பண்ணி எப்ப பார்த்தாலும் வீட்டுல பிராக்டிஸ் பண்ணுனார்.
அவரோட காதலிகிட்ட இதைபோய் சொல்லி இருக்கார். அந்த பொண்ணு கொங்சம் யோசிச்சு பிறகு சம்மதம் சொல்லிடுச்சு ஒரு கண்டிசனோட...


அந்த பொண்ணு சொன்னது இதை தான்


''என் தோள் சாய்ந்து அழு பட் என்னோட சுடிதார் டாப்ஸ்  நினைச்சுடாம அழு''

இப்ப மணி, அந்த போன் யூஸ் பண்றதே இல்லை...  


பின் குறிப்பு அப்படின்னு போட்டு இதை பற்றி மேற்கொண்டு எழுதனும். ஆனால், உண்மையில் நடந்த சம்பவம் தான் இது.

இதன் பின்னனியையும் முன்னனியையும் சொல்லிட்டேன். இப்போ இந்த பதிவின் முதல் வரியை மறுபடியும் படியுங்கள்...

படிச்சுட்டிங்களா.....?

முழுக்க முழுக்க சினிமாத்தனத்துக்கே உரிய ஒரு செயல்    தோள் சாய்ந்து அழனும் என்பது..

அழுகை என்பது சினிமாவிலும் சரி, சீரியலிலும் சரி பெண்களுக்கே உரிய உணர்வு போல சித்தரிக்கப்படுகிறது. இதுவே கேவலமான ஒரு சிந்தனை. அதனால் தான் ஒரு ஆணின் அழுகையை மையப்படுத்தி இதை சொல்லி இருக்கேன் ( அட, பார்ராரா....)

சோகத்திற்கான் ஆறுதல், அன்பின் உச்சகட்டத்துக்கான ஒரு விசயம் தோள் சாய்ந்த அழுகை என்றார் நண்பன் ஒருவர்.

ஏங்க, அழனும்னு வற்புறுத்தி நினைப்பதே முதலில் ஒரு முட்டாள் தனம் .இதுக்கு இப்படி ஒரு விளக்கமா.......?

அப்படி உண்மையிலேயே அழனும்னா போய் தனியா அழுவுங்க..
உங்களுக்கு தோள் என்ன சுவரா சாய்ந்து அழ.......

யதார்த்தமான வாழ்க்கையில யாருமே இதை ஏற்றுக்கொள்வது இல்லை...

எல்லாம் சரி, இது நாட்டுல அவ்வளவு முக்கியமான ஒரு பிரச்சனையா....................? 
இதெல்லாம் ஒரு பொழப்பு...........!     

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...