ஐநா போர் குற்ற விசாரனைக்கு ஆதரவாகவும், இலங்கை முள்வேளி கம்பிகளுக்குள் முடங்கி கிடக்கும் மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், செயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் வேலூரில் மே 18 அன்று நடந்தது. பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது : கடந்த வருடம் இதே நாளில் கட்சி ஆரம்பித்த போதும், இன்றும் கோடைகாலத்தில் கட்சி தொடங்கி ஏழே மாதத்தில், இரண்டு மாத போராட்டத்தில் ஐந்து மாதம் சிறைப்படுத்தப்பட்டேன். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தேர்தல் வந்துவிட்டது. கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்ட சூழ்நிலையில் நீங்கள் என்ன சாதித்து விட்டீர்கள் எனக் கேட்கிறார்கள்.எல்லோரும் தேர்தலை தேர்தலாக பார்த்தார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சி அதை யுத்த களமாக பார்த்தது. என் இனத்தை கொன்ற காங்கிரஸ் கட்சிக்கும், இன உணர்வுள்ள தமிழர்களுக்கான யுத்தம். நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் காங்கிரஸை தோல்வி அடைய செய்து இருக்கிறோம் . இந்த தேர்தல் பிரபாகரன் தம்பி சீமானுக்கும் சோனியா காந்தி மகன் ராகுல் காந்திக்கும் நடந்த சண்டை ஆகும் . என் தலைவன் பிரபாகரனை பெற்ற வீரமாதா பார்வதி அம்மாளின் புனித சாம்பல் எனக்கு வந்தது. எனக்கு வந்ததை போல அய்யா நெடுமாறன், அண்ணன் வைகோ அவர்களுக்கும் வந்தது. அவர்கள் அதை கடல் நீரிலே கரைத்தார்கள். அதை நான் இன்னும் பத்திரமாக என் அறையில் வைத்திருக்கிறேன். என்று என் லட்சியத்தில் வெல்கிறனோ அன்றுதான் என் தாயின் சாம்பலை நான் கடலில் கரைப்பேன். அதேபோல தமிழ் உறவுகளை எல்லாம் உசுப்பி தீக்குச்சியாக வெந்து செத்தானே என் தம்பி முத்துக்குமாரின் சாம்பலும் என்னிடம் தான் உள்ளது . என்று என் இனம் விடுதலை அடைகிறதோ அன்று தான் அதை கடலில் கரைப்பேன் . நான் ஒவ்வொரு முறையும் போர்களத்திற்கு செல்லும் போது அந்த புனித சாம்பலில் சத்தியம் செய்து தான் செல்கிறேன் . அறுபது வருடமாகவே தமிழகத்தில் இருந்து வருகிற கட்சி திமுக , அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்ட 110 வருட கட்சி காங்கிரஸ் இந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியதே எப்படி உங்களுக்கு நம்பிக்கை இல்லையா ? வாங்க இன்னொரு தேர்தலில் மோதிப்பார்க்கலாம். இதை விட மிகப்பெரிய தோல்வியை அடைவீர்கள். பணம் , படைபலம் , குடும்ப அரசியல் இதை எல்லாம் தாண்டி என் இனத்தை அழிக்க துணை நின்றவர்கள் இந்த தேர்தலில் அழிந்தார்கள். இதை எல்லாம் நான் சொல்லவில்லை புதுச்சேரியிலே முதல்வராக பதவி ஏற்று இருக்கிற அய்யா ரங்கசாமி சொல்கிறார். காங்கிரசின் படுதோல்விக்கு ஈழத்தமிழர் படுகொலை பிரச்சனையும் அதை தம்பி சீமான் எடுத்து சொன்ன விதமும் தான் முக்கிய காரணம். உண்மையான தலைவன் உண்மையை ஒத்துக்கொண்டான். காங்கிரஸ் கட்சியோட எவன் கூட்டணி வைத்துக்கொண்டாலும் அவர்களுக்கு எதிராக இந்த சீமான் நிற்பான். நான் உயிரோட இருக்குற வரை ஒருத்தனும் தப்பிக்கமுடியாது . மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்காரிய சிந்தனைகளை பின்பற்றுபவர்கள் ஒருபோதும் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சகோதரர் கார்த்திக்சிதம்பரம் பரம்பரை கோடீஸ்வரன் ஆவார். நான் ஒன்னும் இல்லாதவன் தான் என்கூட மோதி சிவகங்கை தொகுதியில முடிஞ்சா ஜெயித்துப்பார். மண்ணை கவ்வி விடுவாய் . இலங்கையில் என் சகோதரிகளை வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்தி சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்கள். அதற்கெல்லாம் காரணமாக இருந்தவர் ராஜீவ்காந்தி அவரை நீங்கள் புனிதர் என்று நினைத்து விடாதீர்கள் . என் பின்னே திரண்டிருக்கும் தம்பிகள் 20 வயதிற்கும் குறைவானவர்கள் அவர்கள் யாருக்கும் ராஜீவ்காந்தியை தெரியவில்லை . என் தலைவர் பிரபாகரனை தெரிந்து வைத்து இருக்கிறார்கள் .இனி நாங்க தான் எங்களை எதுவும் செய்து விட முடியாது. இப்படியொரு பெயர் வைப்பதே வெட்கமாய் இருக்கிறது. தமிழனை நீ தமிழன் டா என்று சொல்லி உணரவைக்க வேண்டி இருக்கிறது. மற்ற மாநிலத்தவனுக்கு நன்றாய் தெரிகிறது. நமக்கு உணரத் தான் தாமதம் ஆகிறது. உணர வைக்க தான் நாம் தமிழர். ஜாதியோ மதமோ என்றும் இனம் ஆகிவிடமுடியாது. என்ன ஜாதியாக இருந்தாலும் என்ன மதமாக இருந்தாலும் நாம் அனைவரும் நாம் தமிழர் எனும் ஒரு இனம் . தமிழனுக்கு உயிரை விட மானம் பெரியது. இவ்வாறு சீமான் பேசினார். தீர்மானங்கள் சட்டமன்ற தேர்தலில் உணர்வுடன் வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி , புதிய ஆட்சிக்கு வாழ்த்துக்கள், ஐநா நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவு, தமிழீழ அகதிகள் நிலை மாற வேண்டும் , சிறப்பு முகாம்களை அகற்ற வேண்டும், ராஜீவ் வழக்கில் தண்டிக்கப்பட்டோருக்கு விடுதலை,தமிழீழ விடுதலை, ஐநா மன்றமே பன்னாட்டு விடுதலைக்கு உத்தரவு விடு, உலக நாட்டிற்க்கு வேண்டுகோள் , புதுக்கோட்டையில் கொல்லப்பட்ட சுப.முத்துக்குமாரை கொன்றவனை கைது செய். ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்குறிப்பு : பத்திரிக்கையாளர்களுக்கு வெகுநேரமாகியும் நாற்காலிகள் வழங்கபடாமல் நின்று கொண்டு இருப்பதை பார்த்த சீமான் அவரே 10 நாற்காலிகளை தூக்கிவந்து போட்டு உட்காரச்சொன்னார். -தாஸ்.., |
http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2011/may/190511e.asp |
Friday, 1 July 2011
நம் விடுதலை நம் கையில் சீமான் முழக்கம்
லேபிள்கள்:
www.tamilcinema.com,
ஈழம்,
போராட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment