Monday, 18 July 2011

நான் எப்படி தப்பா நினைத்தேன் உன்னை


உங்கள் ஊர் திருவிழாவுக்கு என்னை கூட்டி போனாய்
ஊரெல்லாம் வதந்தி பரவியது
படிக்க போன இடத்தில் ஒருத்தியை கூட்டிக்கிட்டு வந்துட்டான்
உற்றோர் சுற்றோர் வரவேற்றாலும்
உள்ளுக்குள் ஒரு வருத்தம், ஒரு கேள்வி
ஒரு பொண்னை கூட்டிகிட்டு வந்துட்டானே
யார் இந்த பெண், என்ன உறவு ?

எல்லோரும் ஒரு மாதிரி பார்த்தாங்க
உன் அத்தை மகள் முறைத்தாள்
எனதருகே வந்து நீங்க என் மாமாவுக்கு என்ன வேணும் கேட்டாள்

எல்லோரையும் கூப்பிட்டு அறிமுகம் செய்தாய்
இவள் என் தோழி
ஒரு போதும் காதலி அல்ல
என் மனைவி ஆக மாட்டாள்...!

கரெண்ட் இல்லாமல் கட்டிலில் படுத்து இருந்தபோது
எனதருகே வந்தாய்
உள்ளுக்குள் திக் திக் என்றது
ஏன் இப்ப என் பக்கத்துல வரான்
பலவாறாய் உள் மனம் தத்தளித்தது

விழித்து இருந்தும்
கண்களை மூடி இருந்தேன்
அருகே வந்தாய்

எனது கலைந்த ஆடையை சரி செய்தாய்
வியர்வையை துணியால் துடைத்தாய்
விசிறியால் வீசினாய்

எப்படிடா உன்னை தப்பா நினைத்தேன்
உள்ளுக்குள் நினைத்த போது
கண்ணீர் கண்களை நனைத்தது
கண்ணீர் என தெரியாமல் வியர்வை என துடைத்தாய்

எனதருகே படுத்து இருந்தாய்
நாம் தூங்கி போனோம்

எப்படிடா நான் உன்னை தப்பா நினைத்தேன்.............



No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...