வாரத்துல கிடைக்கிற ஒரே விடுமுறை நாள் ஞாயிறு கிழமை தான் துணியை எல்லாம் துவச்சுட்டு உக்காந்து இருந்த போது பக்கத்து வீட்டு வாண்டு ஷாபீர் சொன்னான் மாமா பக்கத்து ஏரியா கல்லறையில யாரையோ சுட்டுடாங்களாம்னு.என்னடா என்று விசாரித்தால்...
பாதாம் மரத்துல இருந்து விழுந்த கொட்டையை எடுக்க போன சிறுவனை சுட்டு கொன்னுட்டான் ஒரு ராணுவ அதிகாரி . இதுக்காடா சுட்டாங்கன்னு விசாரித்து அந்த இடத்துக்கு தான் போவோமேனு நடந்து பாதி தூரம் போனேன் போலீசுகாரர் ஒருத்தர் ஒரு பையனை விரட்டி வந்தார். கொஞ்ச தூரம் தள்ளி பார்த்தா எல்லாருக்கும் அடி விழுந்துகிட்டு இருக்கு.
டேய் இதுக்கு பேர் தான் லத்தி சார்ஜோ.......?
சினிமாவுல தான் பார்த்து இருக்கேன். முதல் முறையா நேரடியா பாக்குறேன். மனசுக்குள்ள ஒரு பயம் உருவாகிடுச்சு, நம்மையும் போட்டு அடிச்சுடுவாங்களோன்னு ஆனால் அதுக்குள்ள தகவல் தெரிஞ்சு பத்திரிக்கைகாரர்கள் எல்லாம் வந்துட்டாங்க. சில பத்திரிக்கை நண்பர்கள் முகம் தெரிந்ததாக இருந்தது.
என் பக்கத்துல கம்போட வந்த போலீசுகாரர்கிட்ட பிரஸ் அப்பிடுன்னு சொன்னேன் . அப்படியே திரும்பி என்னை மேலும் கீழும் பார்த்தார் ஏன்னா கையில கேமராவோ, நோட்பேடோ, ஏன் ஒரு பேனாகூட இல்லை இதுக்கும் மேல அப்ப போட்டு இருந்த டிரெஸ் லோயர் பேண்ட், டி சர்ட் அவர் என்ன நினச்சாரோ தெரியல பிரெஸ்னா அந்த பக்கம் போய் நில்லுங்க சார்னு போய்ட்டார்.
தெரிந்த பத்திரிக்கை போட்டோகிராபர் பக்கதுல போய் நின்னு வேடிக்கை பார்த்தா அந்த ஏரியா பசங்க சின்ன பையன் செத்த செய்தி தெரிந்தும், அதன் காரணம் புரிந்தும் ஆத்திரத்துல ராணுவ குடியிருப்பு நோக்கி போய் இருக்காங்க, தடுத்த கோட்டை காவல் நிலைய போலீஸ் ரெண்டு பேர போட்டு அடிச்சுட்டாங்க . இதுக்கு மேல தாங்காதுன்னு தெரிஞ்சு தான் தடி அடி நடந்தது.
பையனை சுட்டு பாதாம் மரத்தடியிலேயே இலையை வைத்து மறச்சு போட்டு இருந்து இருக்கான் அந்த ஆர்மிகாரன். அட பாவிங்களா உசுரு உனக்கு அம்புட்டு மசுரா போச்சு..
இறந்த சிறுவன் பெயர் தில்சன். அவனோட பாதாம் கொட்டை பறிக்க போன மற்ற ரெண்டு பசங்க சொல்லி தான் அவங்க வீட்டுக்கே தகவல் போய் இருக்கு. அதுக்குள்ள கோட்டையோட பின்புற காவல் இருந்த போலீசு அந்த பையனை பக்கதுல இருந்த அரசு தலைமை மருத்துவமனைல சேர்த்துட்டார். ஆனால் அவர் வாயே திறக்கல, அவர் தூக்கிட்டு போனப்ப பையன் உயிரோட இருந்தானா இல்லையானு.
ஆனால், ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒவ்வொரு மாதிரி நியூஸ் போடுறாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன். இந்த பிரச்சனைல தான் பாக்குறேன். தினமலர், தினமணி ரெண்டு பத்திரிக்கையும் இதை ஒரு பிரச்சனையாவே மதிக்கலை. தமிழகம் எங்கும் இந்த செய்தியை விரிவாக கொண்டு சென்றது தினத்தந்தியும், தினகரனும் தான் .
நான் எதற்கும் ஆதரவாளனாக இருந்து இதை சொல்லல. என் அடி மன குமுறல் இதெல்லாம். இதோ தில்சன் அம்மாக்கு தமிழக அரசு 5 லட்சம் பணம் கொடுத்து இருக்கு. (பணம் உயிர திருப்பி தந்துடுமாடா...?) ஆனால் தில்சன் அம்மாவுக்கு சுட்ட ஆர்மிகாரனுக்கு தண்டனை வாங்கி குடுத்தே ஆகனும்னு ஒரே வெறி. கோட்டை காவல் நிலையத்துல இருந்து விசாரனை சிபிசிஐடிக்கு மாறிடுச்சு. சுட்டவனும் ஒத்துக்கலை. சுட்டதை யாரும் பார்க்கலை. ஆனால் எதோ உள்ளுக்குள்ள நடந்துகிட்டு இருக்கு..
அதிகார வர்க்கமாக இருப்பதனால அந்த ராணுவ அதிகாரிய இன்னும் யாருன்னு புடிக்க முடியல. இதுவே எங்க ஏரியா பசங்க, வாக்கிங் போற ஒரு ஆர்மிகாரனை சுட்டு இருந்தா சும்மா விட்டு இருப்பாங்களா ? (எங்ககிட்ட ஏது துப்பாக்கி ) அந்த வழியா தான் தினமும் ஆபீசுக்கு போறேன். தில்சன் உடம்பு இருந்த இடத்த சுத்தி பாதுகாப்பு போட்டு லைட் எல்லாம் போட்டு இருக்காங்க. இந்த பிரச்சனை எல்லாம் தெரிந்தும் ஒன்னுமே பண்ண முடியலையேன்னு மனசு குமுறுது...
அதான் இங்கே பகிந்துகிட்டேன்...
No comments:
Post a Comment