| வகுப்பில் மாணவர்கள் |
இலவச தமிழ் கணினி பயிற்சிபட்டறை 12.11.2011 அன்று சாப்ட்வியூ ஊடககல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.
1.ஈமெயிலில் இணையம் குறித்த விளக்கம்
2.கணினியில் தமிழ் உள்ளீடு செய்வது எப்படி
3.ஸ்கேனிங் செய்வது எப்படி
4.கேமராவிலிருந்து படத்தை கணினிக்கு கொண்டு வருவது எப்படி
5.புகைப்பட தரத்தை மாற்றுவதை எப்படி
6.பிடிஎப் பைல் உருவாக்குவது எப்படி
என ஒவ்வொரு பிரிவாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. கணினி துறையில் பல வருடம் அனுபவம் மிகுந்தவர்கள் கொண்டு வகுப்பு எடுக்கப்பட்டது...
இந்த பயிற்சி பட்டறையில் நானும் ஒரு கலந்து கொண்டேன். வகுப்பில் உட்கார அல்ல, வகுப்பு எடுக்க..
| தாஸ் வகுப்பில் |
கலந்து கொண்டவர்கள் பலர் வயதில் மூத்தவர்களே...
வகுப்பை இப்படி தான் ஆரம்பித்தேன், இங்கே கற்றுகொள்ள வயது தேவை இல்லை. கற்றுகொள்ள வயது தேவை இல்லை முதல் வரிக்கு நீங்கள் இரண்டாம் வரிக்கு நான் என்றேன்...
அந்த வரியிலேயே அனைவரும் அமைதி காத்தனர்...
வகுப்பு முடிந்தது, மதிய உணவு வேலையில் இருவர் எனக்கு பின்னூட்டம் சொன்னார்கள் இள ரத்தம் ரொம்ப வேகமாக பேசுறிங்க, இன்னும் பொறுமை தேவை இப்படி சொன்னது முனைவர் இரா.விஜயராணி திருச்சி பிசப் கல்லூரியில் பேராசிரியை...
| கேப்ரியல் சார் |
அப்பனுக்கு பாடம் சொல்லி குடுத்த சுப்பன் எனும் வரியை போல் ஆசிரியருக்கு பாடம் எடுத்த மாணவன்...
1 comment:
நானும் உங்களிடம் பாடம் கற்றுக் கொண்டேன். நல் வாய்ப்பு தந்த ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு நன்றி. உங்களுடைய வலைப் பக்கம் சிறப்பாக உள்ளது.
என்னுடைய வலைப்பக்க முகவரி
www.tally9erp.blogspot.com முழுக்க முழுக்க மொபைல் போன் மூலம் பதிவு செய்கிறேன்.
k.ராஜா
raja.dxer@gmail.com
Post a Comment