Friday, 2 September 2011

எழுதனும்


எழுத தெரிந்த அனைவருமே எழுதுவார்கள் எழுதியதை அவர்களே படிப்பார்கள் , அப்படி எழுதியதை மற்றவர் படித்து பாராட்டும் போதும் விமர்சிக்கும் போது தான் அந்த எழுத்தின் அருமை தெரிய வரும்.

பத்திரிக்கை ஆரம்பிக்க ஆசைப்படுவோருக்கு அவ்வளவு விரைவில் அந்த ஆசை நிறைவேறிவிடாது ஏனெனில் அது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.

மேலே குறிப்பிட்டுள்ளவற்றிற்கு அரைகுறையாய் அர்த்தம் புரிந்தவர்களுக்கு அடுத்தடுத்த வரிகள் அர்த்தத்தை கொடுக்கும்.
இணையத்தில்  எழுதுதல் பற்றிய துவக்க உரை தான் அது.

இணையதளம் பயன்படுத்துவோரில் எழுத ஆசைப்படுவோருக்கு ஒரு பயன்பாடு தான் ப்ளாக் எழுதுதல். உங்களுக்கு என இருக்கும் மின்னஞ்சல் முகவரியை ப்ளாக் இணையத்தில் இணைத்து புதிதாக ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கி விடலாம்.

எழுத தெரிந்தவர்கள் அதை மற்றவர் படிக்க ஆசைப்படுவோர் வலைப்பக்கம் எழுதலாம். உங்களுக்கு என தனி வலைப்பக்கம் ஆரம்பிப்பதாலும் அதில் தொடர்ந்து எழுதுவதாலும் முதல் பாராவில் குறிப்பிட்டவை இப்போது புரிந்து இருக்கும்.

வலைப்பக்கத்தில் எழுதுவதால் உங்களுடைய கருத்துக்கள் ஒரே நேரத்தில் உலகின் எந்த மூலையிலிருந்து படிக்க முடியும்.
அனைத்து விதமான தலைப்புகளிலும் எழுதலாம் . எழுதனும் அது தான் முக்கியம்.

2 comments:

PRINCENRSAMA said...

வாழ்த்துகள் தம்பி! தொடர்ந்து எழுது!

-‍‍‍தாஸ் அருள்சாமி said...

இந்த வாழ்த்துக்களை பெறத்தானே இவ்வளவு நாள் காத்திருப்பு.....!
கண்டிப்பாக தொடர்ந்து எழுதுவேன் அண்ணா....!

Related Posts Plugin for WordPress, Blogger...