....அய்யயோ தலைப்பு தப்பு........ ஜுனியரிடம் மாட்டிய சீனியர்
சில வருடங்களுக்கு முன்பு வரை ”ராகிங்” அப்படின்னு ஒரு எழுதப்படாத கலாச்சாரம் கல்லூரிகளில் இருந்தது.
ஜுனியர் ஸ்டூடண்ட சீனியர் ஸ்டூடண்ட் கலாக்கிறது தாங்க இதோட மெயின் கான்சப்டே .. (இந்த எக்ஸ்பிலைன் சிறுசுகளுக்கு, பெருசுகளுக்கு அல்ல)
குறிப்பிட்ட அளவிலும், எல்லை மீறிய அளவிலும் இந்த ராகிங் இருந்துருக்கு.
நானும் இந்த கலாச்சாரத்தால பாதிக்கப்பட்டு இருக்கேன்.
நான் காலேஜ் ஃபஸ்ட் இயர் படிக்கும் போது என் சீனியர்கள் என்னை பாடாபடுத்தி இருக்காங்க, பட், இப்ப நினைச்சு பார்த்தா அது ஒரு சுகமான சுமை தாங்க..
இப்படி சீனியர்கள் என்னை துன்புறுத்திய சமயத்தில் நான் ஒரு ஜுனியரா இருந்து ஒரு சீனியரை போட்டு பாடா படுத்தி இருக்கேன்.
அன்பு அண்ணன் இளையராஜா ...
(என்னடா, ரொம்ப பாசமா அன்பு அண்ணன்ணு சொல்றான்னு பாக்குறிங்களா, உண்மையிலேயே பா(ஆஆஆஆ)...சம் தாங்க.. )
எலெக்ரிக் டிரெய்ன்ல ஆரம்பிச்ச இந்த உறவு இன்னமும் நீலுது, ப்ரேக் டவுன் ஆகாம நான் பார்த்துகிறேன்...
![]() | ||||||||
|
(எம்முட்டு படிப்பாளியா இருந்து இருப்பேன் பாருங்க, ரொம்ப கற்பனை பன்னிகிறாதிங்க, சுமார் தான் )
மனிசன் அம்புட்டு பீலிங்கயும் அடக்கிகிட்டு, எனக்கு டவுட்ட கிளியர் பன்னுவார். அப்ப அவர் சொல்லி குடுத்தப்ப எனக்கு அவரை பற்றி ஒன்னும் சொல்ல தோணல.
பட், இப்ப ஒரு பாட்டு நினைவுக்கு வரும் போது பாடாம இருந்தா ரொம்ப தப்புங்க, அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவனே, பனி துளிய போல குணம் படச்ச தென்னவனே...
படிச்சு முடிச்சு அவரவர் பொழப்பை தேடி போய்ட்டோம். பட், எங்க தொடர்பு மட்டும் எலெக்ட்ரிக் டிரெயினும், அது தொட்டுகொண்டே போகுற எலெக்ட்ரிக் வயர் மாதிரி இருந்தது. வீக்லி ஒன்ஸ் கால் பண்ணி பேசுவார். பக்கத்துல நீ இல்லாததும் சந்தோசம் தாண்டா என்பார், ஏனெனில் பக்கத்துல இருந்தா ஓட்டிக்கிட்டே இருப்பேன்னு பயம் தாங்க.
இதை படிச்சுட்டு இளையராஜா காமெடி பீசா இருப்பாருன்னு தப்பு கணக்கு போட்டுராதிங்க, எனக்கு மட்டும் தாங்க அவரு சாப்ட், மற்ற எல்லாருக்கும் அவர் டெரர்...
பல தனியார் ஊடக கல்வி நிறுவனங்களின் விசுவல் கம்யூனிகேசன்ல இருக்குற போட்டோகிராபி பற்றி அண்ணன் கிளாஸ் எடுத்துகிட்டு இருக்கார். திறமை இல்லாமலாங்க இந்த நிலைக்கு வந்து இருப்பாரு..
எல்லாம் சரிங்க, எந்த தப்பும் எனக்கு தெரிஞ்சு செய்யாத இளையராஜா அண்ணன், இப்ப ஒரு மிகப்பெரிய தப்பு செய்துட்டாருங்க
என்ன அப்படின்னு கேக்குறிங்களா..........?
அவரு வேலை பார்த்த ஒரு கல்வி நிறுவனத்துல அவருடன் சேர்ந்து பணிபுரிய அவரோட ஜுனியரான என்னையும் ரெபர் பன்னுனாரு.
பெரிய தப்பு தானே...
அட, வேலை கிடச்சுடுசுங்க... அண்ணான்னு கூப்பிட்ட வரை சார்னு கூப்புடுறேன், அது தான் சுமால் ஃபீலிங..
மற்றபடி, ஏன்டா வேலியில போன ஓணானை எடுத்து ஜீன்ஸ் பேண்டுக்குள்ள
விட்டோமேன்னு வருத்தபடாமல் இருக்கனும் என் அன்பு அண்ணன் இளையராஜா...
சில நாட்களுக்கு பிறகு...
இதை படிச்சுட்டு அவர் ஒரு எக்ஸ்பிரசன் பன்னுனாரு.
ஆஸ்கார் அவார்டு குடுக்கலாம்னு தோனுச்சு, அவர் தகுதிக்கு ஆஸ்கார் ரொம்ப கம்மி அப்டிங்கிற காரணத்துனால வேணாம் விட்ரலாம்...உண்மையிலேயே ஸ்போர்டிவ்வா எடுத்துக்கிட்டார்(வேற வழி)..

2 comments:
தாஸ் அந்த சீனியரை இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த மாதிரி அடிமையா வெச்சிட்டு இருக்க போறிங்க பாவம்ல அவரு....!!!
அன்பின் அடிமைங்க அவரு..........
Post a Comment