Tuesday, 7 June 2011

நல்லவர்ர்ர்ர்ருருருரு...

யாருப்பா இந்த ராம்தேவ்......?

பட்டினியால் தவிக்கிது பாட்டாளி வர்க்கம்
வஞ்சனை இல்லாம தின்னுகிற வாய்..
(மைக்க கடிச்சு புடாதீக )
தின்ன சோறு செமிக்காம திரிகிற முதலாளிவர்க்க மக்களுக்கு யோகா, தியானம் கற்று தருவதாக சொல்லி பணம் பறிக்கும் கும்பலின் தலைவர்ர்ர்ர்ர்ருருரு...

ஏன் ராசா ? நல்லதானே உம்ம பிசிபனஸ் போய்க்கிட்டு இருந்துச்சு, இப்ப திடீர்னு என்ன நாட்டு மேல அக்கறை. அய்யன் குடிமி சும்மா அடாதாமே ? என்ன ப்ளானு ஓய், உம்ம ப்ளானு... ?

எங்க இருந்து தான்பா உன்னை மாதிரி ஆளுக்கெல்லாம் கூட்டம் கூடுதுன்னு தெரியல... சும்மாவா சொன்னாங்க ஏமாத்துறவன் இருக்குற வரை ஏமாறுகிறவங்க இருப்பாங்கன்னு...

ஊழலுக்கு எதிராக உண்ணா விரதம்...
என்னங்கடா, ஆச்சுறா பூச்சுறான்னா உண்ணா விரதம் என்ற பேருல கிளம்பிடுறிங்க, கொஞ்ச நாளைக்கு முன்னாடி அண்ணா ஹசாரே, அவரு ஒரு நல்லவர்ர்ர்ர்ருருருரு...

ஒரு வேலை சாப்பாட்டுக்கே இங்க காசு இல்ல. நீங்க உண்ணா விரதம் இருக்க பல கோடி செலவு. தெரியாமத்தான் கேக்குறேன், உண்ணும் விரதம்னா செலவு ஆகும், உண்ணாம இருக்குற விரதத்துக்கு ஏன்டா செலவு ஆகுது, அதுவும் கோடிக்கணக்கா...

கறுப்பு பணத்தை மீட்கனும்னு போராடுறீகளே ராம்தேவ், உம்மகிட்ட இருக்குற கறுப்பு பணமும் போய்டும் ஓய், மறந்துட்டீகளா........?

இதை மத்திய அரசு வன்முறையால் தடுத்து நிறுத்த முயல்கிறது, அவங்களுக்கு வயித்தெரிச்சல பாரேன்..

எது எப்படியோ ஊடகங்களுக்கு செய்தி கிடைக்கிறது. உங்களை பற்றியும் நானும்  சின்னதா கிறுக்கிட்டேன்.

-தாஸ்.., 

1 comment:

Anonymous said...

intha mathiri samiyarai ellam tholurikkirathukku unna mathiri oru dass vantha porathu oru kodi dass vanthalum namma makkal thirunthuvargala???

Related Posts Plugin for WordPress, Blogger...