Wednesday, 22 June 2011

நீ என் நண்பன் என்பதால். . .


பெண்ணின் நட்பு

நடந்து செல்லும் போது
கைகள் உரசக்கூடாது
கவனம் செலுத்தினாய்
கைகளை ஒன்றோடு ஒன்று
இணைத்து கொண்டேன்
நீ என் நண்பன் என்பதால் . . .

*
பஸ் பயணத்தில்
கூட்ட நெரிசலில்
உன் வியர்வை வாடையை
பொறுத்துக்கொண்டேன்
நீ என் நண்பன் என்பதால். . .

*
மழை தினத்தில்
ஒரே குடையில்
இணைந்து நடந்த போது
உடல்கள் உரசியபோது
உன்னை கேலி செய்து
மன்னித்தேன்  
நீ என் நண்பன் என்பதால். . .

*
கோடை காலத்தில் கொடுமை
ஆடை பிரச்சனையில் தான்
குளிர்கால ஆடையை
கோடைகாலத்தில் போடச் சொல்லி
வற்புறுத்தினாய்
செய்தேன்
நீ என் நண்பன் என்பதால். . .

*
உனக்காக நான் எல்லாம் செய்கிறேன்
எல்லாம் செய்வேன்
என் பயமெல்லாம் என் திருமணத்திற்கு பிறகும்
நான் உனக்கு தோழியாய் இருக்க வேண்டும்
நீ என் நண்பனாகவே வேண்டும். . .


உன்னுடைய
சின்ன சின்ன தவறுகளை 
பொறுத்துகொள்கிறேன்
பெரிய பெரிய தவறுகளை 
மன்னித்து விடுகிறேன்
நீ என் நண்பன் என்பதால். . . 

எதற்கெடுத்தாலும் கோவப்படும்
உனக்கு  
புன்னகையையே தண்டனையாக தருகிறேன் 
நீ என் நன்பன் என்பதால். . .







No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...