"தென்ற காற்றை வீச மறந்து, அனல் காற்றை வீசிக்கொண்டு இருந்த ஒரு மாலை வேளையில்" அண்ணனை சந்திக்கச் சென்றேன்.
படிச்சு முடிச்சு ஆறு மாசம் ஆச்சுனா, ஒரு வேலையும் இல்ல..
என்ன பண்ணுறதுனும் தெரியலனா ?
ரொம்ப கஸ்டமா இருக்குனா ! என்று புலம்பினேன் ..
"கவலை படாதடா தம்பி"
உனக்கும் கண்டிப்பா ஒரு வேலை கிடைக்கும் ..
நான் ஒருத்தரோட நம்பர் தரேன்,
அவரை போய் பாரு..
கண்டிப்பா எதாவது சான்ஸ் தருவாறு என்று ஆறுதலுடன் அனுப்பினார் .
அவருடன் பேசி இருந்துவிட்டு கிளம்பும் போது சொன்னார்..
டேய் தம்பி, சோகமாகவே இருக்காத.. சந்தோசமா இருடா !
இப்ப நீ வேடிக்கை பார்க்கப்போற..
வேடிக்கை பார்த்துக்கிட்டே இருந்துடாதடா..
வேடிக்கை காட்டனும்..
சரியா.....? என்று அனுப்பி வைத்தார்.
அவர் சொன்ன இடத்துக்கு போனேன்..
வேலை பார்த்தேன்,, மன்னிக்கவும்..
வேடிக்கை பார்த்தேன்..
அண்ணா, இப்ப நான் (கொஞ்சமா) வேடிக்கை காட்டிக்கிட்டு இருக்கேன்னா...
ஒரு தனியார் ஊடகக்கல்வி நிறுவனத்துல (ஃபேகல்டி) வேலை பாக்குறேன்..
அத்துடன் பகுதி நேரமாக ஒரு சின்ன பிஸ்னஸ் பண்றேன்னா... ( பயணம் தொடரும் )
நான் காலையில எழுந்ததும் அதில் தான் கண் விழிப்பேன், அந்த வாசகத்தை படித்து விட்டு தான் அன்றைய நாளையே தொடங்குவேன்...
வேடிக்கை பார் பின்பு வேடிக்கை காட்டு ..
அய்யயோ அண்ணன் யார் என்றே சொல்ல மறந்துட்டனே...
கீழே பார்க்கவும்...
கீழே பார்க்கவும்...

1 comment:
பதிவை வெளியிட்ட சிறிது நேரத்தில்
"வேடிக்கைக் காட்டத் தொடங்கியதில் சந்தோசம்டா"
நெகிழ்ச்சிடா...
-பிரின்ஸ் என்னாரெசு பெரியார்..
*பாராட்டுவதை கூட தள்ளி போடாதவர்*
Post a Comment