Wednesday, 8 June 2011

நானும் அபியும்..


அபியும் நானும் படத்தின் டைட்டிலை அப்படியே திருப்பி போட்டுட்டானேன்னு நினைக்க வேண்டாம்..
 எனக்கு இதை தவிர வேறு நல்ல தலைப்பா தோன்றவில்லை.

உள்ளூர் திருவிழா தினத்தன்று...
   அக்கா தோசை சுட்டு தா..  
  எம் புள்ளைய ஸ்கூல்ல போய் விட்டுட்டு வா நான் சுடச் சட சுட்டு தரேன்..
 ம்ம்ம்ம்... எப்பிடில்லாம் நம்ம பலகீனத்தை (சுடச்சுட தோசைன்னா ரொம்ம்ம்ப்ப பிடிக்கும்) பயன்படுத்திகிது பாரு, மனதுக்குள் குமுறலுடன் அக்கா மகனை சைக்கிளில் பின்பக்கம் உக்கார வைத்துக்கொண்டு அவனோட ஸ்கூலுக்கு போனேன்..

டேய், சைக்கிளுக்குள்ள காலை விட்டுடாதடா..
நீ போ மாமா எனக்கு தெரியும், நீ ரோட்ட பாத்து ஒழுங்கா ஓட்டு, எதாவது பிகரை பார்த்துட்டு என்னை பள்ளத்துக்குள்ள எங்கேயாவது தள்ளி விட்டுடாத..

அடப்பாவி, வயசுக்கு தகுந்த மாதிரி பேசுடா..
இந்த வயசுக்கு இப்பிடி பேசலைனாதாம் மாமா தப்பு..  
பிஞ்சுலையே பழுத்த என்அக்கா மகனுக்கு வயசு எட்டு..

இதுக்கு மேல பேசுனா எம்மானம் போய்டும்னு நினைச்சு, 
அத்தோட அவனோட பேசுறத நிறுத்துறதுக்கும் அவன் பள்ளிகூடம் வருவதற்கும் சரியா இருந்துச்சு..

ஸ்கூல் கேட்டுகிட்ட போனதும் நான் சைக்கிளை நிறுத்துவதற்கு முன்னரே குதிச்சுட்டான்...
ஏண்டா, இவ்லோ அவசரம் அதான் ஸ்கூல் வந்துடுசுல என்றதற்கு என்னை முறைத்து பார்த்தான்..

நீ, பேசிக்கிட்டே வந்ததுல லேட் ஆகிடுச்சு, பிரேயர் ஆரம்பிச்சுடாங்க, அது வரைக்கும் வெளியே தான் நிற்கனும் என பொறிந்து தள்ளினான்.
சரி நான் போரேன்டா கேட் திறந்ததும் உள்ள போ என்றதற்கு
மிஸ் லேட்டா வந்தா திட்டுவாங்க, நீ வந்து சொல்லிட்டு போ என்றான்  
இதுவேரயா, நின்றேன்....................

அப்போ, ஒரு குழந்தை எனை நோக்கி வந்து 
...அங்கிள், நல்லா இருக்கிங்களா என்று மழலைக்கே உரிய பாணியில் கேட்டது... நான் நல்லா இருக்கேன்மா. 
நீங்க யாரு....? என்றதற்கு
நான் அபியோட பொண்ணு என்றது.   


சில வருடங்களுக்கு பின்னோக்கி போவோமா ?

அபி
(அபிராமி)


வாடகை வீடு பதினேழு வரிசையாய் கொண்ட தெருவில் நான் ஏழாவது வீட்டில் குடியிருந்தேன், அபி பதினேழாவது வீடு, ஹவுஸ் ஓனர் பொண்ணு. 
நானும் அபியும் ஒரே பள்ளியில் வெவ்வேறு வகுப்பில், நான் நாலாவது, அபி மூணாவது...
 என்னைவிட ஒரு வயசு சின்ன புள்ள ஒரு நாள் கூட அண்ணானு கூப்பிட மாட்டா..
டேய் கருவா, வாடா லேட் ஆச்சு என்று எங்க வீட்டு வாசப்படியில இருந்து அபி கத்துனான்னா நான் பதில் சொல்ற முன்னாடியே எங்கம்மா ”ஏண்டி சரசு மகளே, நீ சிவப்பா இருக்கேன்னு எம்புள்ளயை கருவான்னு கூப்புடுறியா” என்று கத்துவாங்க... 

ஆம்ம்மாமாமா என்று எதாவது பேசிகிட்டே இருப்பா அதுக்குள்ள நான் கிளம்பி வெளியே வந்து இருவரும் சேர்ந்தே ஸ்கூலுக்கு போவோம்.

நான் சுமாரா படிப்பேன், அபி சுத்தம்... 
பள்ளிகூடத்துல நான் யார்கூடயும் சண்டை போட மாட்டேன், 
அபிக்கு வேலையே எல்லாரையும் போட்டு அடிக்கிறது தான்.
 அபிகிட்ட அடி வாங்காத ஒரே ஆள் நான் தான்.
 ஏன் அடிக்காதுன்னா ? அபி என்ன தப்பு செய்தாலும் நான் அவங்க வீட்ல சொல்ல மாட்டேன் அதன் அடிப்படையில் எனக்கு அடி விழுகாது.

எங்கம்மா அபியை ஆம்பளை கருப்பாயின்னு கூப்புடுவாங்க...

காலத்தின் நவீனவளர்ச்சி நாங்க சொந்தமா வீடு கட்டிட்டு அந்த வாடகை வீட்டை விட்டு வந்துட்டோம். பிறகு தொடர்புகள் குறைவு தான்... 

இப்ப நிகழ்காலத்துக்கு வருவோம்..

 அந்த அபி என்ற குழந்தையின் குழந்தை தான் இந்த குழந்தை

அப்பப்பா... காலச்சக்கரம் வேகமாக சுழலுதுல என்று தத்துவம் பேசாம விசயத்துக்கு வரேன்

உங்கம்மா எங்க என்றதற்கு 
அந்த குழந்தை விரல் காட்டிய திசையில் ஒரு சிவப்புகலர் நைட்டியில் இருந்த  ஒருத்தவங்க என்னை பார்த்து புன்முறுவல் பூத்தாங்க..

அது அபி ..
நானும் பதிலுக்கு சிரித்துவிட்டு அந்த குழந்தையிடம் சொல்லி அனுப்புனேன், நான் உனக்கு மாமா இல்ல, சித்தப்பா என்று..

அந்த குழந்தையின் பெயரை கேக்க மறந்துட்டமே என யோசிப்பதற்குள் எனை நோக்கி குழந்தையை தூக்கி வந்து..

 எப்பிடி இருக்கிங்க தாஸ் என்ற அபியின் கேள்விக்கு பதில் சொல்லாமல், தலையை மட்டும் ஆட்டினேன்... 

எவ்வளவு மாற்றம். டேய், கருவா எனக்கூப்பிட்ட அபி இன்று போங்க, வாங்க என்று..    

என் விரல் பிடித்து நடந்த அபிக்கு இன்று விரல் பிடித்து நடக்கும் அளவில் ஒரு பெண்குழந்தை...
 ஆச்சரியப்பட்டாலும் உண்மையை ஏற்று கொண்டு தானே ஆகனும்.

நான் சித்தப்பா என்று சொல்லி அனுப்பியதை அந்த குழந்தை அபியிடம் சொல்லியதான்னு தெரியல, நானும் பதில் தெரிஞ்சுக்க விரும்பல..

என் அக்கா மகனை உள்ளே போய் சொல்லி விட்டுட்டு வந்தேன், அபியின் குழந்தையும் விட்டுவிட்டு வெளியே வந்தது, மன்னிக்கவும் , வந்தாங்க...

நான் சைக்கிளை உருட்டி கொண்டே பேசிக்கிட்டு போனேன், கொஞ்ச தூரம் தாண்டியதும் நான் இந்த பக்கம் போகனும் என்று ஒரு சந்துக்குள் புகுந்தாங்க அபி...

நானும் விடை பெற்றேன், சைக்கிளில் கொஞ்ச தூரம் போய் திரும்பி பார்த்தேன், ஒரு விரக்தி புன்னகையுடன் அபி நின்னாங்க...

அந்த புன்னகைக்கு அர்த்தம் தெரியாமல் நான் வீட்டிற்கு சைக்கிளை மிதித்தேன்...

*நானும் அபியும் தலைப்பு பொறுத்தமா இருக்கா.................? 

-தாஸ்..,

8 comments:

Anonymous said...

dass itha pathi en kitta solli irukiya ? ana thalaippu super nice dass

-‍‍‍தாஸ் அருள்சாமி said...

நான் சொன்னதில்லை....
என் வலைத்தளத்தை படித்து தொடந்து இடுகையிடுதலுக்கு நன்றி......

Anonymous said...

தோழியா...?
காதலியா...?
உண்மையை சொல்லுங்க தோழர்...

கார்த்திகேயன் said...

குறும்படமாகவே எடுக்கலாம் தம்பி...

உனக்குள் இவ்வளவு ஒரு வலியா...?

இளையராஜா said...

ஊருல இருந்து வரும்போதே, யாரையாவது கரெக்ட் பண்ணிட்டு தான் சென்னைக்கு வரிங்களா...?

-‍‍‍தாஸ் அருள்சாமி said...

//தோழியா...?
காதலியா...?
உண்மையை சொல்லுங்க தோழர்...//

* உங்களுக்கு எப்படி தெரியுது சொல்லுங்க தோழர்...?
பெயர் வெளியிடாம போய்டிங்களே....!

-‍‍‍தாஸ் அருள்சாமி said...

குறும்படமாக பண்ணலாம் கார்த்திகேயன் .. நீங்கள் தயாரிப்பு செலவை பார்த்து கொள்கிறீர்களா....?

-‍‍‍தாஸ் அருள்சாமி said...

இளையராஜா...
சென்னையில இருந்து யாரையும் கரெக்ட் பண்ணி கூட்டிகிட்டு போகலையே.....?

Related Posts Plugin for WordPress, Blogger...