நடந்து முடிந்த தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ்
படுதோல்வி அடைந்துள்ளது. காங்கிரசின் முக்கிய தலைவர்களாகிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, திருநாவுக்கரசு, வசந்தகுமார் ஆகியோர் படுதோல்வி அடைந்துள்ளனர். இந்த படுதோல்வியின் காரணமாக அவமானம் அடைந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை தங்கபாலு ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த உள் கட்சி பூசலால் கட்சியின் முக்கிய உறுப்பினர்களான கராத்தே தியாகராஜன், செங்கை செல்லப்பா, எஸ்.வி.சேகர் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தங்கபாலு நீக்கினார். இதனால் அதிருப்தி அடைந்த ஒரு பிரிவு தங்கபாலுவுக்கு எதிராக இந்த தேர்தலில் வேலை
செய்ய கள்ம் இறங்கியது .தேர்தலின் போதே தங்கபாலு கொடும்பாவி எரித்தும் , உருவபடங்களுக்கு செருப்பு மாலை போட்டும் எதிர்ப்பை தெரிவித்துவந்தனர்.
இந்த தேர்தலில் காங்கிரசஸின் கோஷ்டி பூசலும் அவர்களை பலவீனமாக்கியுள்ளது. வாழப்பாடி ராமமூர்த்தி ,ஈவிகேஎஸ் போன்ற கோஷ்டியினருக்கு சீட்டுகள் அளிக்கப்படவில்லை. ராகுல்காந்தியின் நேரடி ஆசிபெற்ற வேட்பாளர்கள் பலரும் இந்த தேர்தலில் மண்ணை கவ்வினர்.
மயிலாப்பூர் தொகுதியில் தன் மனைவியை வேட்பாளராக நிறுத்தினார் . வேட்புமனு தாக்கலில் குழப்பத்தை ஏற்படுத்தி அவரே வேட்பாளராகவும் மாறினார். இதனால் அதிகப்படியான அதிருப்தியாளர்கள் கட்சிக்குள் உருவானார்கள். இந்த தேர்தலின் படு தோல்விக்கு இந்த உள் கட்சி பூசல் முக்கிய காரணமாகிறது .
திமுக உடனான கூட்டணி பேச்சு வார்த்தையின் போது 63 தொகுதி பங்கீட்டில்
ஏற்பட்ட இழுபறி, மற்ற கூட்டணி கட்சி தலைவர்களை கோபத்தில் ஆட்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஒத்துழைப்பு இல்லாமல் செய்தது.
ஈழத்தமிழர் பிரச்சனையில் காங்கிரசின் போக்கு ஒருதலைபட்சமாகவே இருந்ததால் லட்சக்கணக்கான மக்கள் மரணம் அடைந்தனர். இது தமிழ் உணர்வாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. காங்கிரசுக்கு எதிரான நாம் தமிழர் இயக்க தலைவர் சீமானின் அனல் பறக்கும் பிரச்சாரம்
மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தி காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க வைத்துள்ளது.
தமிழகத்தில் 63 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. புதுவையில் போட்டியிட்ட இடங்களில் வெறும் 7 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. மத்தியில் ஆட்சி நடத்துகிற காங்கிரஸ் தமிழக ஆட்சியில் பங்கு பெற்று விடலாம் என கனவு கோட்டை கட்டி கொண்டு இருந்தது. ஆனால் அதிகபடியான சீட்டை பிடிக்கமுடியாமலேயே கனவு கோட்டை எல்லாம் சிதைந்து போனது...
-தாஸ்
No comments:
Post a Comment