ஆய கலைகள் 64 ன்னு தெரியும்... அது என்ன என்னன்னு தெரியுமா....?
ஒரு தகவலுக்காக...
1. அக்கரவிலக்கணம்- எழுத்திலக்கணம்
2. இலிகிதம்- எழுத்தாற்றல்
3. கணிதம்- கணிதவியல்
4. வேதம்- மறை நூல்
5. புராணம்- தொன்மம்
6. வியாகரணம்- இலக்கணவியல்
7. நீதி சாஸ்திரம்- நய நூல்
8. ஜோதிடம்- கணியக் கலை
9. தர்ம சாஸ்திரம்- அறத்துப் பால்
10. யோக சாஸ்திரம்- ஓகக் கலை
11. மந்திர சாஸ்திரம்- மந்திரக் கலை
12. சகுன சாஸ்திரம்- நிமித்தகக் கலை
13. சிற்ப சாஸ்திரம்- கம்மியக் கலை
14.வைத்தியசாஸ்திரம்- மருத்துவக்
கலை
15. உருவ சாஸ்திரம்- உறுப்பமைவு
16. இதிகாசம்- மறவனப்பு
17. காவியம்- வனப்பு
18. அலங்காரம் அணி- இயல்
19. மதுர பாடனம்- இனிதுமொழிதல்
20. நாடகம்- நாடகக் கலை
21. நிருத்தம்- ஆடற் கலை
22. சத்தப்பிரும்மம்- ஒலிநுட்ப அறிவு
23. வீணை- யாழ் இயல்
24. வேணு- (புல்லாங்குழல்)குழலிசை
25. மிருதங்கம்- (மத்தளம்)
26. தாளம்- தாள இயல்
27. அத்திரப் பரிட்சை- வில்லாற்றல்
28. கனகப் பரிட்சை- (பொன் நோட்டம்)
29. இரதப் பரிட்சை- (தேர் ஏற்றம் )
30. கஜப் பரிட்சை- (யானை எற்றம்)
31. அசுவப் பரிட்சை- (குதிரை ஏற்றம்)
32. இரத்தினப் பரிட்சை- மணி நோட்டம்
33. பூமிப் பரிட்சை- மண்ணியல்
34. சங்கிராம விலக்கணம்- போர்ப் பயிற்சி
35. மல்யுத்தம்- கைகலப்பு
36. ஆகருடனம்- (ஆகர்ஷணம்)கவர்ச்சியியல்
37. உச்சாடனம்- ஓட்டுகை
38. வித்து வேடனம்- (நட்பு பிரிக்கை)
39. மதன சாஸ்திரம்- மதன கலை
40. மோகனம்- மயக்குக் கலை
41. வசீகரணம்- வசியக் கலை
42. இரசவாதம்- இதளியக் கலை
43. காந்தருவ வாதம்- (இன்னிசைப் பயிற்சி)
44. பைபீலவாதம்- (பிறவுயிர்மொழி)
45. கவுத்துவ வாதம்- மகிழுறுத்தம்
46. தாதுவாதம்- ( நாடி சாஸ்திரம்)
47. காருடம்- கலுழம்
48. நட்டம்- (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது இழப்பறிகை)
49. மூட்டி- (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்;மறைத்ததையறிதல்)
50. ஆகாய கமனம்- (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்--வான் செல்கை)
51. பரகாய பிரவேஷம்- (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
52. ஆகாயப் பிரவேஷம்- ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது--வான்புகுதல்)
53. அதிரிசியம்- தன்னுறு கரத்தல்
54. இந்திர ஜாலம்- (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55. மகேந்திர ஜாலம்- பெருமாயம்
56. அக்கினி ஸ்தம்பம்- (நெருப்பைச் சுடாமல் கட்டல்--அழற் கட்டு)
57. ஜலஸ்தம்பம்- (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல்,
நீரில் படுத்திருத்தல்)
58. வாயுஸ்தம்பம்- வளிக் கட்டு
59. திட்டி ஸ்தம்பம்- கண் கட்டு
60. வாக்கு ஸ்தம்பம்- நாவுக் கட்டு
61. சுக்கில ஸ்தம்பம்- (விந்தையடக்கல்)
62. கன்னத்தம்பம்- புதையற் கட்டு
63. கட்கத்தம்பம்- வாட் கட்டு
64. அவத்தைப் பிரயோகம்- சூனியம்

6 comments:
இதுல உனக்கு எத்தனை தெரியும்?
அறுபத்து நான்கு கலைகளும் கற்றவனாக இருக்க ஆசை தான். . .
அறுபத்து நான்கும் என்ன என்பதையே இப்போது தானே கற்று இருக்கிறோம். .
( பிரிஞ்சதா... அய்யோ மன்னிக்கவும். புரிஞ்சதாஆஆஆ )
how long to spend to get this collection??
எவ்வளவு நேரம் ஆனது??
from website praba........
நேரம் எல்லாம் நினைவில் இல்லை பிரபாகரன்அண்ணாமலை......
Post a Comment