இலங்கை தமிழர் படுகொலை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை குறித்த
கருத்தரங்கம் சென்னை லயோலா கல்லூரி கல்வியியல் அரங்கில் 07.05.2011 அன்று நடந்தது. அதில் டாக்டர்.பால் நியூமேன் பேசியதாவது...
மனித இனத்திற்கு எதிராக ஒரு போர் இலங்கையில் நடத்தப்பட்டது. போர் முடிந்த நிலையில் அதைப்பற்றி விசாரிக்க, இலங்கையின் தற்போதைய சூழலை அறிய மூன்று பேர் கொண்ட குழு ஐ.நா சபையால் அனுப்பப்பட்டது.
மர்ஃசூகி தருஸ்மேன்
ஸ்டீஃபன் ரேட்னர்
யாஸ்மின் சூக்
ஸ்டீஃபன் ரேட்னர்
யாஸ்மின் சூக்
இம்மூவரும் அக்குழுவின் உறுப்பினர்கள். இவர்கள் 16.09.2010முதல்- 31.03.2011வரை நடத்திய ஆய்வில் 122 பக்கங்கள் கொண்ட ஆய்வு அறிக்கையை ஐ.நா சபையில் ஒப்படைத்தனர்.
ஆய்வு அறிக்கையின் சுருக்கம் பின்வருமாறு ;
- இந்த போர் எந்த வித தடயங்கள் இன்றி செய்து முடிக்கப்பட்டுள்ளது.
- சர்வதேச நாடுகளால் தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- போர் விதிமுறைகளை மீறி எந்த வித முன் அறிவிப்புமின்றி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- இலங்கை அரசு 70,000 மக்கள் இறந்ததாக தகவல் தெரிவிக்கிறது. ஆனால் 1,50,000 மக்கள் இறந்துள்ளனர்.
- பி டி எ, இ ஆர் எ எனும் இரண்டு சட்டங்கள் பின்பற்றப்பட்டது.
- அரசுக்கு எதிராக செயல்படுவோருக்கு விசாரனையின்றி தண்டனை.
- ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த 300 உறுப்பினர்களுக்கு போரில் எல்லா நடவடிக்கைகளிலும் தலையிட உரிமை இருந்தது.
- 66 மனித உரிமை பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
- அனைத்து என்ஜிஓ அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது என வழுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
- உணவு ஒரு முக்கிய ஆயுதமாக இப்போரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- எந்தவித அடிப்படையான மருத்துவ உபகரணங்களும் இல்லாமல் மருத்துவ முகாம்கள் இருந்திருக்கிறது.
- அனெஸ் தெசியா மருந்து கொடுக்காமலேயே ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது.
- மனித உரிமை பாதுகாப்பு அதிகாரிகளை விடுதலை புலிகள் மதித்த அளவிற்கு ஒரு துளி கூட இலங்கை அரசு மதிக்கவில்லை.
இவ்வாறான தகவல்களை டாகுமென்டரி, இன்டர்வியூ, வீடியோ, இணையதள படங்களுடன் இணைத்து ஐ.நா. நிபுணர் குழு கொடுத்துள்ளது.
-தாஸ்..,
No comments:
Post a Comment