உடும்பனில் டச்சான விஷயங்கள்
கம்பெனி லோகோவில், அமெரிக்காவில் இருந்து ஒரு கழுகு, (அமெரிக்க தேசிய பறவை) கிளம்பி ஈரானில் பாலைவனத்தில் ஒரு கோழி குஞ்சை கவ்வி பின் இந்தியாவின் நுழைந்து மயிலை (இந்தியாவின் தேசிய பறைவை) கவ்வ வர ஒரு வீரன் ஓடி வந்து கழுகை கொல்ல அதன் ரத்தத்தில் இருந்து மாடா்ன் சினிமா லோகோ வருகிறது.
தேங்ஸ் கார்டு முடிந்த உடன் “போலி ஜனநாயகம் திருடா்களை உருவாக்குகிறது.” என்று டைட்டில் வந்து சினிமா ஆரம்பிக்கிறது.
தமிழ் சினிமாவில் முதல் முறையாக ”மாவோ” லெனின் தலைவா்கள் பேசுகிறார்கள்.
படத்தின் கதாநாயகியின் பெயா் ”இசைப்பிரியா” விடுதலைபுலிகளின் அமைப்பில் பாடகராகவும், பெண் போராளிகளுக்கு தலைமையேற்றும் முக்கியமாக திகழ்ந்தார். ஈழப்போரின் போது சிங்கள வெறியா்களால் அவரை பாலியில் வன்முறை செய்து கொன்றார்கள். அதை நினைவு கூறும் வகையில் படத்தில் முதல் வசனமோ ” ஐய்யோ இசைப்பிரியா என்று ஆரம்பமாகிறது.
மேலும்
தமிழ் சினிமா இணையத்தில் நான் எழுதியது...
No comments:
Post a Comment