Friday, 10 February 2012

நடிகையின் வாக்குமூலம் விமர்சனம் - சிபி. செந்தில்குமார் இன்ஸ்பிரேசன் - பஸ்ட் ரெவியூ

ப்ளாக் எழுத ஆரம்பிச்சதிலிருந்து சுடச்சுட ஒரு படத்தோட விமர்சனம் போடனும் என்பது ஆசை.  அடுத்தவங்களை பார்த்து தானே ஆசைப்படவே ஆரம்பிப்போம், இந்த ஆசை அண்ணன் சிபி. செந்தில்குமாரின் அட்ராசக்க ப்ளாக்  படிக்க ஆரம்பிச்சதிலிருந்து உருவானது.

படம் ரிலீசானதும் உடனேயே நான் அவரோட ப்ளாக் தான் பார்ப்பேன். மனுசன் உடனேயே விமர்சனம் போட்டு இருப்பார். ஆனால் இந்த பதிவு போடும் முன் அவரின் பதிவு பார்த்தேன் இல்லை..

நல்ல படமோ மொக்கை படமோ அது கணக்கு இல்லை. ஆனால் முதல் விமர்சனம் நான் தான். தமிழ் மணத்திலும் இன்னும் யாரும் லிங்க் கொடுக்கல..
சுயதம்பட்டத்தை முடித்துக்கொண்டு விமர்சனத்துக்கு போய்விடலாம்.

இதில் இன்னொரு தகவல் என்னவென்றால் என் ப்ளாக்ல போடுவதற்கு முன்பே நான் சப் எடிட்டராக இருக்கும்http://tamilcinema.com ல் அப்லோடு செய்து  விட்டேன்..


ஒரு நடிகையின் வாக்குமூலம்

சினிமாவில் மின்மினி பூச்சிகளாய் மின்னிக்கொண்டிருந்து மறைந்த நடிகைகளுக்கு சமர்ப்பணத்துடன் ஆரம்பமாகிற இப்படம் நடிகைகள் உள்ளத்தாலும் உடலாலும் பாதிக்கப்படுவதை சொல்ல முயற்சி செய்கிறது .
பிரபலமாகி வரும் தொலைக்காட்சி நிறுவனத்தில் மேலும் விளம்பரத்தை பெருக்க  புது நிகழ்ச்சிக்காக நடக்கும் கூட்டத்தில் சீனியர் ரிப்போர்ட்டரின் ஐடியா அனைவரையும் கவர்கிறது. சினிமாவில் பிரபலமாக இருந்து பிறகு இருக்கிற இடமே தெரியாமல் போன ஒரு நடிகையின் வாழ்க்கையை வெட்ட வெளிச்சம் போடுவதே அந்த புரோகிராமின் மெய்ன் கான்செப்ட்.
தேடலில் கிடைக்கும் நடிகை தன்னைப்பற்றிய ரகசியங்களை சொல்ல முடியாமல் ஒரு டைரியை கொடுத்து விட்டு சொல்கிறார் மீத படத்தை டைரியை படிக்க விசுவல் விரிகிறது.

ஊரில் ஏற்படும் அவமானத்தைப் போக்க வறுமையில் வாடும் கூத்தாடிக் குடும்பத்தை சேந்த கிரிஜா தன் மகளை நடிகையாக்கும் சபதத்துடன் சென்னைக்கு வந்து ’’பலான பலான’’ போராட்டத்திற்கு பிறகு மகளை நடிகையாக்குகிறாள். பிரபல நடிகையான பிறகு அந்த நடிகையின் மனப்போராட்டம் தான் வாக்குமூலமாக சொல்லப்படுகிறது.
காபி சாப்பிடுவது போல் சில விசயங்கள் ஆகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் பணம், பிரபலம் எல்லாம் கிடைக்கும் என்றால் எதையும் செய்ய சில பெண்கள் முடிவு எடுக்கிறார்கள்.தேடி வந்த வாய்ப்புக்காக கையை விட்டு போய்விடக்கூடாது என முடிவு எடுப்பதால் மகளை ஆண்களின் இச்சைக்கு ஆளாக்குகிறாள் கிரிஜா.

அம்மாவிற்கான வேலையை விட்டு விட்டு வேறு வேலையை பார்க்கிறாள். மகளை முதன்முதலில் ஒருத்தனுடன் உள்ளே அனுப்பி விட்டு நான் பட்ட அவஸ்தை இருக்கே எனும்  போது ஏண்டி அனுப்பி இப்படி பொழப்பு நடத்துறிங்கன்னு கேட்க தோணும் சினிமாவுல இதெல்லாம சாதாரணமப்பா என்று போக வேண்டி இருக்கிறது.

சில இயக்குனர்களின் ஆசைக்கு ஆமாம் சாமி போட்டு முன்னேறிவிட்ட பிறகு எந்த நடிகையும் முன்னேற்றத்துக்கு காரணமான இயக்குனரை மதிக்கிறது இல்லை எனும் சினிமா தத்துவத்தை காட்சியாக்கி இருப்பது அருமை.

முதல் படத்திலேயே சினிமாவையே விமர்சித்து சினிமா எடுக்க தைரியம் அதிகம் தான். பெண்களுக்காக எந்த பெண் இயக்குனரும் எடுக்காத படத்தை ஒரு ஆணாக இருந்து பெண்களின் உணர்வை புரிந்து படமாக்கி இருக்கும் இயக்குனர் ராஜ்கிருஷ்ணா பாராட்டுக்குரியவர். …
ஆந்திரா மாநிலத்திலிருந்து தமிழில் நடிக்க வரும் நடிகை தெலுங்கு சினிமாவுக்கே போய் இருக்கலாமே, ஒரு வேலை நெல்லூரிலிருந்து சென்னை பக்கம்னு வந்துட்டாங்கலோ..

காலாவதியான கல்யாணத்திற்கு பிறகும் நடிக்க வந்த சோனியா அகர்வால் அப்படியே அறிமுக நடிகை போல இருந்தாலும் சிரிக்கிற காட்சியிலும் உள்ளுக்குள் சோகத்துடன் இருப்பது போலவே இருக்கிறார்.
இயக்குனர் ராஜ்குமார், கோவை சரளா, நிக்கோல், மனோபாலா, கஞ்சா கருப்பு என ஆங்காங்கே தெரிந்த சினிமா முகம் இருந்தாலும் புது முகத்தினருக்கும் நடிக்க வாய்ப்பு உள்ளது. நட்புக்காக ஜித்தன் ரமேஷ் , தயாரிப்பாளரான புன்னகை பூ கீதாவும் நடித்து இருக்கிறார்.

கொஞ்சம் விட்டு இருந்தாலும் படம் அடுல்ட் ஒன்லி ஆகி இருக்கும், ஆகவில்லை அந்த வகையில் சந்தோஷமே….!!!

இன்னும் காட்டமாக விமர்சித்து இருக்கலாம். ஆனால் படம் ஓசியாக ப்ரிவியூ ஷோ பார்த்ததால் பாவம் புண்ணியத்திற்கு அஞ்சி விமர்சனம் போடப்பட்டுள்ளது.

1 comment:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

விமர்சனம் நல்ல இருக்கு.சினிமா விமர்சனம் போட்டாதான் அதிக ஹிட் கிடைக்கும்

Related Posts Plugin for WordPress, Blogger...