நான் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும் சாப்ட்வியூ ஊடக கல்லூரியில் சென்னை மாநகர மேயர் பதவிக்கான தேர்தல் கருத்து கணிப்பு அங்கு பயிலும் மாணவர்களை கொண்டு நடத்த பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
வகுப்பு எல்லாம் இருக்காது வேற எதாவது வேலை பார்க்கலாம் என்று மகிழ்வில் இருந்த போது எனக்கும் இந்த தேர்தல் கருத்துகணிப்பில் ஒரு வேலை தரப்பட்டது.
நான் தான் அதற்கு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டேன். அனுபவமே இல்லாத எனக்கா இந்த வேலை என்று ஆரம்பத்தில் நினைத்தேன். எப்படியாவது எதாவது காரணம் சொல்லி தப்பிக்கலாம் என்று பார்த்தால் முடியவில்லை.
எங்கள் கல்லூரியின் நிறுவனர் மரியாதைக்குரிய திரு.’”கணியரசு’” ஆண்டோ பீட்டர் சார் வயது வித்தியாசம் எல்லாம் பார்க்க மாட்டார், இந்த வேலைக்கு இவன் தகுதியானவன் என்று அவருக்கு தோன்றிவிட்டால் அடுத்து யார் என்ன சொன்னாலும் விஜய் மாதிரி தான். நான் ஒரு தடவை முடிவு எடுத்துட்டா எம் பேச்சை நானே கேட்க மாட்டேன் எனும் பாணி தான் அவருடையதும்...
வசமா மாட்டிக்கிட்டேனே என்று இருந்தது, சரி, பார்த்துக்கொள்ளலாம் நம்மை மீறி எதுவும் நடந்து விடாது என்று வேலையில் இறங்கினேன்.
அக்டோபர் 11,12,13 ஆகிய மூன்று நாட்கள் மாணவர்கள் சென்னை முழுவதும் சூறாவளி சுற்றுபயணம் போல இருந்தார்கள்.
மூன்று நாளும் என் போன் செம பிசி, காலையில் பேட்டரி புல்லாக இருந்தால் மாலை பேட்டரி டவுன் ஆகும்.
சார்...,
இங்க இருந்து அங்க எப்படி போறது...?
என்ன பஸ் நம்பர் ?
பக்கத்துல எதாவது நல்ல ஹோட்டல் இருக்கா ?
இங்க ஒழுங்கா ரெஸ்பான்ஸ் பண்ண மாட்றாங்க !
மதிக்கவே இல்ல!!
ஒரே வெயில்!!!
திட்றாங்க சார்....
போங்க உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லயா ?
அசிங்கமா இருக்கு...
இங்க வாங்க சார்...
பேலன்ஸ் இல்ல அதான் 12 மிஸ்டுகால் கொடுத்தேன்
இதெல்லாம் அந்த 3 நாட்கள் நடந்தது..................
காலையில் ஒரு நாள் பயண சீட்டான 30 ரூபாய் டிக்கெட் வாங்கி கொண்டு சென்னை முழுவதும் பயணித்துக்கொண்டே இருந்தேன் . இரவு தான் வெப்பத்தின் தாக்கம் அறிவேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அப்படியே அலுவலகம் சென்று கொஞ்சம் ஏசியில் குளுமையாகி கொண்டு கிளம்புவேன்..
மூன்று நாட்கள் கருத்துகணிப்பு முடிந்து மூன்றாவது நாளின் மாலையில் மாணவர்களின் கருத்துகணிப்பு தாள்களை வாங்கி அவர்கள் ஒத்துழைப்புடனேயே எண்ணிக்கை வேலையும் நடந்தது. இதற்கு விரிவுரையாளர்கள் பத்திரிக்கையாளர் முத்துபாண்டி சாரும், ஒளிப்பதிவாளர் இளையராஜாவும் துணை நின்றார்கள்.
அன்று இரவே எல்லா முடிவுகளும் எங்கள் குழுவுக்கு தெரிந்துவிட்டது
காலையில் அனைத்து பத்திரிக்கை அலுவலகங்களுக்கும் அனுப்பி வெற்றி களிப்பில் உட்காந்த போது..........
கருத்து கணிப்பு தடை செய்யப்பட்டுள்ளது, எந்த பத்திரிக்கையும் வெளியிட மறுப்பு என தகவல் காதுக்கு எட்டியது, மாணவர்களிடம் சொன்னபோது ஒரு மாதிரி பார்த்தனர், ஏனெனில் நான் தான் சொன்னேன் அவர்களிடம் அனைத்து பத்திரிக்கையிலும் வரும் என்று...
ஆனால், இப்போது தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டது...
சாப்ட்வியூ ஊடக கல்லூரி மாணவர்களின் உழைப்பு உண்மையானது. எங்கள் கருத்துகணிப்பு தான் வெற்றி பெற்றது...
களத்தில் இறங்கி வேலை பார்த்து...
கலக்கிய எங்கள் கல்லூரி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்கிறேன்...
![]() |
| இது தான் மாணவர்கள் சென்னை முழுவதும் கொண்டு போனது |
![]() |
| பத்திரிக்கைகளுக்காக தயாரான தேர்தல் முடிவுகள் புள்ளி விவரம் உட்பட |
![]() |
| களத்தில் மாணவர்கள் |
தாஸ்..,






No comments:
Post a Comment